வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அதில் டிக்கெட் எடுத்து பயணித்தவர்கள் எத்தனை பேர், டிக்கெட் வாங்காமல் கழிவறையில் பதுங்கி பயணித்தவர்கள் எத்தனை பேர்?
சென்னை: '' தீபாவளி பண்டிகையையொட்டி, தெற்கு ரயில்வேயில் 111 சிறப்பு ரயில்கள் வாயிலாக, 425 ரயில் சேவைகள் இயக்கப்பட்டன. அதன் வாயிலாக, ஒன்பது கோடி பேர் பயணித்தனர்,'' என, சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திரசிங் தெரிவித்தார். சென்னையில் நே ற்று, அவர் அளித்த பேட்டி: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பயணியர் வசதிக்காக, 111 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, கோட்டயம், மங்களூரூ, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு, 435 ரயில் சேவைகள் இயக்கப்பட்டன. இந்த வகையில், 20 நாட்களில் தெற்கு ரயில்வேயில், ஒன்பது கோடி பேர் பயணம் செய்துள்ளனர். இதேபோல, சென்னை கோட்டத்தில், 176 கூடுதல் சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்பட்டன. பயணியர் வசதிக்காக கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டன. மேலும், சொந்த ஊர் சென்று திரும்பும் பயணியர் வசதிக்காக தாம்பரம் -- காட்டாங்கொளத்துார் இடையே இன்று, ஆறு மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இவ்வாறு கூறினார்.
அதில் டிக்கெட் எடுத்து பயணித்தவர்கள் எத்தனை பேர், டிக்கெட் வாங்காமல் கழிவறையில் பதுங்கி பயணித்தவர்கள் எத்தனை பேர்?