உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் தலைமையில் நிடி ஆயோக் கூட்டம் முதல்வர் பங்கேற்பு

பிரதமர் தலைமையில் நிடி ஆயோக் கூட்டம் முதல்வர் பங்கேற்பு

சென்னை : மத்திய திட்ட குழுவிற்கு மாற்றாக, பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு பின், ஒவ்வொரு ஆண்டும் நிடி ஆயோக் ஆலோசனை கூட்டம் நடப்பது வழக்கம். இதில், அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்க அழைப்பு அனுப்பப்படும். மாநில திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு குறித்து, இந்த கூட்டத்தில் முதல்வர்கள் எடுத்துரைப்பர்.தமிழகத்திற்கு மத்திய பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறி, 2024 ஜூலையில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்தார். நடப்பு ஆண்டிற்கான நிடி ஆயோக் ஆலோசனை கூட்டம், வரும் 24ம் தேதி டில்லியில் நடக்கவுள்ளது. இதில், பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டில்லி செல்கிறார். அப்போது, பிரதமரை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sankaranarayanan
மே 17, 2025 11:08

அங்கே போய் தத்துபித்துன்னு பேசாமல் இருந்தாலே சரி நல்லது சமைக்கிற சிக்ஷயாவின் பணம் கொடுக்கவில்லை என்று கூக்குரலிட்டால் நடப்பதே வேறு மத்திய அரசின் கல்விக்கொள்கைகளை பின்பற்றினால்தானே கிடைக்கும் என்பதை மறந்துவிட்டாற்போலிருக்கிறது யாராவத்து சொல்லவாவது வேண்டும் அப்படியே அவர்கள் மத்தகிய அரசின் கல்வி கொள்கைகளை சொன்னாலே அதை இவர் கேட்டாக வேண்டும் அங்கேதான் சரியில்லை என்ன செய்வது


c.k.sundar rao
மே 17, 2025 10:33

His visit is nothing to do with Nidhi aayoga, to meet concerned ministers and beg them not to raid his family members.


முக்கிய வீடியோ