உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில்களுக்கு எந்த ஜாதியும் உரிமை கோர முடியாது: சென்னை ஐகோர்ட்

கோவில்களுக்கு எந்த ஜாதியும் உரிமை கோர முடியாது: சென்னை ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' கோவில்களுக்கு எந்த ஜாதியும் உரிமை கோர முடியாது ,'' என சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.நாமக்கல்லில் ஒரே நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மூன்று கோவில்களில் ஒரு கோவிலை தனியாக பிரிக்கக் கோரி கணேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் நீதிபதி பரத சக்கரவர்த்தி விசாரித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cwvbqdd8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, ஜாதியை நிலைநிறுத்தக்கூடிய வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க முடியாது எனக்கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.மேலும் அவர், கோவில் அனைவருக்கும் பொதுவானது. அனைத்து பக்தர்களும் நிர்வகிக்கலாம். வழிபடலாம். ஜாதி என்பது மதத்தின் பிரிவு அல்ல. ஜாதி பாகுபாட்டில் நம்பிக்கைக் கொண்டவர்கள் மத போர்வையில் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள். பிரிவினைக்கான மைதானமாக கோவிலை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான பொதுக்கோவில்கள் குறிப்பிட்ட ஜாதியினரின் கோவில்கள் என முத்திரை குத்துகின்றனர். எந்த கோவிலுக்கும் எந்த ஜாதியும் உரிமை கோர முடியாது. கோவில் ஜாதி அடிப்படையில் நிர்வகிப்பது மத நடைமுறையும் அல்ல எனவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

kulandai kannan
மார் 05, 2025 14:05

இந்து மத வழக்குகளை இந்து நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டாம். ஜைனர் ஏன் விசாரிக்கிறார்?


ஆரூர் ரங்
மார் 05, 2025 10:02

இதுவே தர்ஹாகளுக்கும் பொருந்துமா?. பாரம்பரியமாக ஒரு குடும்பமே நிர்வகித்து வசூலை எடுத்துக் கொள்கிறார்கள் எனப்புகார்கள். முதல் மரியாதை வேறு. அது போல RC சர்ச்சுகளில் ஹிந்துக்களுக்கு அனுமதியிருந்தாலும் பென்தகோஸ்தே போன்ற பிரிவினருக்கு அனுமதி கிடையாது. மதப்பிரிவுகளின் விவகாரங்களில் கோர்ட் தலையிடுவது அரசியலமைப்புச் சட்டத்தின் மத சுதந்திரத்திற்கு எதிரானது.


Kovandakurichy Govindaraj
மார் 05, 2025 09:58

தமிழ்நாட்டில் ஜாதி இருப்பதால் தான் கோவில்கள் காப்பாற்ற பட்டு வருகிறது . இல்லாவிட்டால் நாத்திக கும்பல் எப்போதே கோவில்களை அழித்து கோவில் சொத்துக்களை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கும்


எவர்கிங்
மார் 05, 2025 08:20

அப்படியே மசூதிகளில் சன்னி/ஷியா வழிபாட்டு பிரிவு மசூதி மற்றும் கிறித்தவர்களின் கத்தோலிக்க பெந்தகோஸ்த் பிரிவு வழிபாட்டுத்தலங்கள் கிடையாது என்றும் சொல்லிப்பாருங்க எஜமான்


Rajkumar Ramamoorthy
மார் 05, 2025 01:40

Not good judgement.. various temples are maintained various by communities. Please let me them do whatever they are interested freely. In the name of temples endownment, DMK government is milking all their money for election.


Saai Sundharamurthy AVK
மார் 04, 2025 23:14

நல்ல தீர்ப்பு தான். இதே மாதிரி கல்வி, வேலைவாய்ப்பிலும் ஜாதி பார்க்கக் கூடாது.


A P
மார் 04, 2025 22:43

தமிழ் நாடு முழுக்க உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவில்களை, சொந்தமாக அமைத்து, நன்கு பராமரித்து, வருகிற செட்டியார் ஜாதிக்குத்தான் அந்த கோவில்கள். இதனை கோர்ட் இல்லையென்று சொல்லுமா? இது போன்று பலப்பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். ஜாதிகள் சொந்தம் கொண்டாட முடியாது என்று எந்த சட்டத்தில் / பிரிவில் உள்ளது என்று அந்த தீர்ப்பில் இருக்குமே. அது எந்த சட்டம் / பிரிவு ?


Venkatesan Srinivasan
மார் 10, 2025 23:02

நாட்டில் பல ஜாதிகள் உள்ளன. அவை அரசின் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு இன்னபிற சலுகைகள் வழங்க படுகிறது. அவ்வாறு குறிப்பிடப்படும் ஜாதிகள் அவர்கள் சமூகத்தில் ஏற்றுக் கொள்ள கூடிய நடைமுறை படி கோவில்கள் ஏற்படுத்தி உள்ளன. அந்த கோவில்கள் அந்த ஜாதி சமூகத்தினர் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும். பிற மத ஜாதி சமூகத்தினர் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே அங்கு வழிபாடு செய்ய முடியும். அதுவும் அந்த நிர்வகிக்கும் ஜாதி சமூக மரபு வழக்கப்படி. இதனை ஜாதி பாகுபாடு என்பது சரியாகாது.இவ்வாறு இருக்க எப்படி பொத்தாம் பொதுவாக கோவில்களில் ஜாதி பொருந்தாது என தீர்வு கொள்ள முடியும். நீதிமன்றங்கள் தீர்ப்புகள் இந்த ஜாதி முறை சட்டத்தில் உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். பாரதியார் கூட "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாடியுள்ளார். எனவே அதனை குறிப்பிட்டு ஜாதிகள் இல்லை என்று கூற முடியாது. மேலும் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசிதழில் வெளியிடப்படாத எந்த தரவுகளும் புனைவுகளும் சட்ட தீர்வு ஆகாது.


T.sthivinayagam
மார் 04, 2025 22:10

இறைவனுக்கு இறை பணி ஹிந்துக்களிடம் ஐஈதி பார்ப்பதை ஏன் நீதிபதிகள் இதுவரை கண்டுகொள்ளவில்லை என ஹிந்துக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்


Sudha
மார் 04, 2025 21:50

கொஞ்சம் அவசர பட்டு விட்டார், ஜாதி என்றால் என்ன இதற்கு சரித்திரத்தில் பூகோளத்தில் சான்றுகள் உள்ளனவா என்று ஆரம்பித்து 2095ல் தீர்ப்பு வழங்கலாம்


Barakat Ali
மார் 04, 2025 21:36

வாசகர்களின் கருத்து மூலம் நான் அறிந்தது என்னவென்றால் பல கோவில்களில் பல சாதியினர் மரியாதைக்குரியவர்கள் ஆகிறார்கள் ...... இது பாரம்பரியம் ...... அதே போல கோவில் பணிகளில் ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு சாதியினருக்கு முக்கியத்துவம் உண்டாம் ...... அப்படி இருக்கையில் இதில் நீதிமன்றமோ, அறநிலையத்துறையோ எப்படித் தலையிடலாம் ????


புதிய வீடியோ