உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எஸ்.ஐ.ஆர்., பணிக்கு கால நீட்டிப்பு இல்லை; கணக்கெடுப்பு படிவங்களை வழங்க அறிவுறுத்தல்

எஸ்.ஐ.ஆர்., பணிக்கு கால நீட்டிப்பு இல்லை; கணக்கெடுப்பு படிவங்களை வழங்க அறிவுறுத்தல்

சென்னை: ''ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வழங்கிய கணக்கெடுப்பு படிவங்களை, பூர்த்தி செய்து விரைவாக ஒப்படைக்க வேண்டும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் அளித்த பேட்டி:

இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் மொத்தம், 6.41 கோடி வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர். அதில், 6.16 கோடி வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அடுத்த மாதம், 4ம் தேதி வரை இப்பணிகள் நடக்கும். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்ப பெற்று, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன. இப்பணிகள், 50 சதவீதம் முடிந்துள்ளன. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் உள்பட, 83,256 பேர், இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தன்னார்வலர்கள், 33,000 பேரும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அரசியல் கட்சிகளின், 2.45 லட்சம் ஏஜன்ட்களும், எஸ்.ஐ.ஆர்., பணிகளை கண்காணித்து வருகின்றனர். புதிய ஓட்டுச்சாவடிகளுக்கு கூடுதலாக அலுவலர்களை நியமித்துள்ளோம். இதுவரை, 327 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தங்களது பணிகளை, 100 சதவீதம் முடித்துள்ளனர். தகுதியான எந்த வாக்காளர் பெயரும், வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது. அதற்காகவே, இத்தனை பேரும் கடுமையாக பணியாற்றி வருகிறோம். தகுதியான வாக்காளர் பெயர் நீக்கப்பட்டு இருந்தால், அதற்கு ஓட்டுச்சாவடி வாரியாக விளக்கம் அளிக்கப்படும். இணையதளத்திலும் இதுகுறித்த விபரங்கள் வெளியிடப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், தகுதியான வாக்காளர்களிடம் படிவம் பெற்று, இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும். கணக்கெடுப்பு படிவத்தை பெற்ற வாக்காளர்கள், அதை தங்களது ஓட்டுச்சாவடி அலுவலரிடம் விரைந்து ஒப்படைக்க வேண்டும். இந்திய தேர்தல் கமிஷன் வாயிலாக, இதை வாக்காளர்களுக்கு வேண்டுகோளாக வைக்கிறோம். எந்த காரணத்தை கொண்டும், கணக்கெடுப்பு பணிக்கு காலநீட்டிப்பு வழங்கப்படாது. திட்டமிட்டபடி டிசம்பர், 4ம் தேதி பணிகள் நிறைவு பெறும். முகவரி மாறியவர்கள் அதே தொகுதிக்குள் இருந்தால், அவர்களை கண்டறிந்து கணக்கெடுப்பு படிவம் வழங்கி வருகிறோம். வேறு தொகுதிக்கு மாறி இருந்தால், படிவம், 8 கொடுத்து, அவர்கள் பட்டியலில் சேருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து கையெழுத்திட்டு கொடுத்த அனைவரது பெயரும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். இதை தேர்தல் கமிஷன் தெளிவாக சொல்லியிருக்கிறது. மேலும், ஒரு வீட்டில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், ஒரு தெருவில் வசிப்பவர்கள் பெயர்கள், அந்த பாகத்தில் வரிசையாக முறையாக இடம் பெறும் வகையிலான பணிகளையும் தேர்தல் கமிஷன் மேற்கொள்ள உள்ளது. எந்த கட்சிக்கும் ஆதரவாக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செயல்படவில்லை. அனைவரும் நடுநிலையுடன் பணியாற்றி வருகின்றனர். வெளிமாநிலத்தை சேர்ந்த 869 பேர், தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு உரிய படிவங்களை அளித்துள்ளனர். புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு, 18 வயது நிரம்பிய 3,000 பேர் படிவம் கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

அப்பாவி
நவ 25, 2025 21:36

சாஹு மாதிரி இவங்க ஆரம்பிச்சுடுவாங்க


sankar
நவ 25, 2025 17:08

கால அவகாசம் வேண்டும் - ஓராண்டு கவர்னர் ஆட்சி நடந்து - பிறகு தேர்தல் நடத்தப்படவேண்டும்


D Natarajan
நவ 25, 2025 16:29

எங்கள் அபார்ட்மெண்டில் BLO , எல்லோர்க்குக்கும் வீடு வீடாக சென்று படிவங்கள் கொடுத்தார். அவர் மீண்டும் வீடு வீடாக சென்று படிவங்களை பெற்றுக்கொண்டார். ஆனால் பலர் படிவங்களை திருப்பி தரவில்லை . பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும்


Krishna
நவ 25, 2025 15:15

Lyinh. In Many Constituencies incl Annanagar etc, Enumeration Forms are given to DMK Booth Agents who Refuse to Give said Forms to Listed Votes


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 25, 2025 10:19

எல்லா பாரங்களையும் அறிவாலயத்துல தூக்கி கொடுத்துட்டு அப்படியே சான்றோர் அணியில உறுப்பினரா சேர்ந்துடலாம்.


Ramasubramanian
நவ 25, 2025 08:40

வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் இவற்றைக் கொடுத்தும் மதுரவாயல்/ஆலப்பாக்கம் வாக்குச்சாவடியில் அலுவலர் எங்கள் இருவருடைய சார் படிவங்களை தர மறுக்கின்றனர். இரண்டு முறை சென்றும் பயனில்லை. தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் இல்லை.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 25, 2025 08:51

விஜய் கிட்டே கூட்டணி பேச அமித் சா வர்றாராம். நேரிலெ போயி பாத்து பாஜக வோட்டு ஒண்ணு ரெண்டு கூட கெடைக்காது போலிருக்கு என்று சொல்லி பாருங்களேன் சின்ன சந்தேகம்? தாடி வெச்சிருப்பீங்களா? எல்லாம் பாக்க வேண்டி இருக்கு அதான்.


vivek
நவ 25, 2025 11:40

இனிமே திமுக தேறுமா.என்று பாரு....


சந்திரசேகர்
நவ 25, 2025 08:37

மழை காலமா இருக்கே அதனால் கூட நீட்டிப்பு கிடையாதா


Field Marshal
நவ 25, 2025 08:57

படிவத்தை நிரப்பி கொடுத்தால் மாதம் ரெண்டாயிரம் வாங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவித்தால் இந்த மாதிரி சால்ஜாப்பு சொல்லுவீங்களா ?


மோகனசுந்தரம்
நவ 25, 2025 08:32

இதைப் போன்ற ஆஃபீஸர்கள் தான் இன்றைய தமிழகத்திற்கு தேவை. அம்மா நீர் வாழ்க வளமுடன்.


Priyan Vadanad
நவ 25, 2025 08:17

எந்த காரணத்தை கொண்டும், கணக்கெடுப்பு பணிக்கு காலநீட்டிப்பு வழங்கப்படாது. .....


ஜெய்ஹிந்த்புரம்
நவ 25, 2025 08:09

இதை சொல்றதுக்கு வெட்டி செலவு செஞ்சி இங்கே வந்திருக்கவே வேண்டாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.


Field Marshal
நவ 25, 2025 09:01

விளக்கமா சொல்லணும் .. பாலைவனத்தில் தான் மோட்சம் கிடைக்கும்னு போரதில்லையா


vivek
நவ 25, 2025 11:42

திராவிட சொம்புகள் எப்போ வல்லுனர்கள் ஆனார்கள்


புதிய வீடியோ