உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாழ்த்து கோஷம் இல்லை: ஆபாச ஆட்டம் இல்லை: கடைசி வரை கலையாத கூட்டம்: கட்சி மாநாடுகளும் முருகன் மாநாடும் ஓர் ஒப்பீடு

வாழ்த்து கோஷம் இல்லை: ஆபாச ஆட்டம் இல்லை: கடைசி வரை கலையாத கூட்டம்: கட்சி மாநாடுகளும் முருகன் மாநாடும் ஓர் ஒப்பீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பல்வேறு அரசியல் கட்சிகளின் மாநாடுகளில், கட்சிகளின் மெகா பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற அனுபவமிக்க மூத்த பத்திரிகையாளர் ஒருவர், முருக பக்தர்கள் மாநாடு பற்றி ஒப்பிட்டுக் கூறியது:* லட்சக்கணக்கானோர் திரண்ட போதும் கூட்டத்தில் ஒரு ஒழுங்கு இருந்தது. பக்தர்கள் வரிசையாகவே சென்றனர். உணவு வாங்க, மேடையில் தலைவர்களுக்கு சால்வையணிவிக்க என்று யாரும் முண்டியடித்து முன்னேறவில்லை. கண்ட இடத்தில் இருந்து சாப்பிடவில்லை; அதற்கான பகுதியில் மட்டுமே அமர்ந்து சாப்பிட்டனர்.* தலைவர்கள் பேசும்போதும், கலைநிகழ்ச்சிகள் நடக்கும்போதும் அரங்கில் கட்டுப்பாடுடன் அமர்ந்து கொண்டிருந்தனர். அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கவில்லை. நிகழ்ச்சிக்கு உள்ளே நுழைந்தவர்கள் நிகழ்ச்சி முடிந்த பிறகே வெளியேறினர்.* நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்தில் துவங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடிந்தது. ஆபாச கலைநிகழ்ச்சிகள், குத்துப்பாட்டு இல்லை; மாறாக பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடந்தன.* யாரும் மது அருந்தி தகராறு செய்யவில்லை; கோவிலுக்கு போவது போல பலரும் விரதத்துடன் பயபக்தியுடன் வந்தனர்.* மேடையில் அறிவிப்பு செய்பவர் சொல்வதை லட்சக்கணக்கானோர் அப்படியே கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தனர். மழை துாறியபோது யாரும் அசையவில்லை. ஆனால், கட்சிகளின் மாநாட்டில் இப்படி மழை பெய்தால் அமர்ந்திருக்கும் இருக்கையை தலையில் குடை போல் துாக்கி வைப்பர்; அப்படியே நடையையும் கட்டுவர்.* வந்திருந்த முருக பக்தர்களுக்கென தனிப்பட்ட அரசியல் இருந்தாலும், தலைவர்களை வாழ்த்தி கூக்குரல் இல்லை; கோஷம் இல்லை. அரங்கில் கூச்சல் இல்லை. தலைவர்களை வரவேற்று பேனர், பிளக்ஸ் இல்லை.* மிக முக்கியமாக பார்வையாளர்கள் யாரையும் வாகனங்களில் அழைத்து வரவில்லை. அந்தந்த பகுதி பக்தர்கள் குழுவாக இணைந்து வாகனம் அமர்த்தி வந்திருந்தனர். சில கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் காட்ட, உள்ளூர் நிர்வாகிகள் பணம் தந்து பார்வையாளர்களை அழைத்து வருவர். இங்கு வந்தது தானாக சேர்ந்த கூட்டம்.* பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களுக்கு அனுமதி இல்லை; மறுசுழற்சி கப்களில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. எனவே, மைதானம் எங்கும் பிளாஸ்டிக் கழிவுகளே இல்லை.* நிகழ்ச்சி முடிந்ததும் இருக்கைகளை அடுக்கி வைத்து செல்லவும், குப்பைகளை பொறுக்கவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. எல்லோரும் அதை பின்பற்றியதால், நேற்று காலையில் மைதானம் சுத்தமாக பளிச் என, இருந்தது. ஆனால், சில கட்சிகளின் மாநாட்டு குப்பை இரண்டு நாட்கள் மைதானத்தில் கிடக்கும். உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள்தான் வந்து அகற்றுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

Ramesh Sargam
ஜூன் 26, 2025 22:33

சரக்கு இல்லை. பிரியாணி இல்லை. குப்பை கூளம் இல்லை. அடிதடி இல்லை. அமைதி மட்டுமே எங்கும். பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கவில்லை. தானா சேர்ந்த கூட்டம். கூட்டம் முடிந்தபின் இருக்கைகளை திருடி செல்லவில்லை. ஆங்காங்கே போட்டு செல்லவில்லை. ஒழுங்காக அடுக்கிவிட்டு, குப்பைகளை அகற்றி சென்ற கூட்டம். பக்தி ஒன்றே நோக்கம். அதுதான் இந்த முருகர் மாட்டில் கலந்துகொண்ட மக்கள் மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்த பாடம்.


chinnamanibalan
ஜூன் 25, 2025 20:10

இனியும் தமிழன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்தெழா விட்டால், தமிழகத்தில் ஆங்கில ஆக்கிரமிப்பு காரணமாக தமிழும் இருக்காது. தமிழர் சமயமும், பண்பாடும் இருக்காது.


பேசும் தமிழன்
ஜூன் 25, 2025 20:07

அப்படியே ஓட்டு போடும் போதும் ....இதே போன்ற கட்டுப்பாட்டுடன் இருந்து ஓட்டு போட்டால் ....திருட்டு மாடல் ஆட்கள் ஆட்சிக்கு வரவிடாமல் செய்யலாம் .....செய்வார்களா ???


Rathna
ஜூன் 25, 2025 17:41

தமிழும் தமிழ் தெய்வங்களும் தமிழ் முறை வழிபாடும் 5000 ஆண்டு பழமையான வரலாறு உள்ளது. அப்படி உள்ள தமிழன் ஏன் பாலைவன கடவுளை, பாலைவன மொழியில் வணங்க வேண்டும். திருவாசகமும், திருப்பாவையும், கந்த சஷ்டியும் போதுமே...


மூர்க்கன்
ஜூன் 26, 2025 12:08

அப்படியே ஏன் சமஸ்கிருதத்தில் பூஜை செய்யணும்னு கேட்டிருந்தா மெய்யாலுமே புர்ச்சியான ஆளுதான்னு சொல்லியிருப்பேன்??


karthikeyan
ஜூன் 25, 2025 16:50

வெற்றி வேல் வீர வேல் . வாழ்த்துக்கள் மக்களே. ட்ரியாவிடிய வெளக்கெண்ணெய்களுக்கு சரியான எச்சரிக்கை இது அவர்களுக்கு எதிரான ஓட்டாக மாறனும்


மூர்க்கன்
ஜூன் 25, 2025 15:55

ஆமாம்?? ஆமாம்?? இப்படி உருட்டி உறுதியே கட்டி வெச்ச கோட்டையை ஒண்ணுமில்லாமல் ஆக்குன வெஙகாயம் அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருங்காயம் அப்பப்போ மனக்காயம் ஆறுவதற்கு இவ்வாறு அனத்துவதும் அதிகம் பேர். ஒண்ணுமே செய்ய முடியாது.


Panchalam Soundararajan
ஜூன் 25, 2025 13:59

கணக்கு இந்து முன்னணியிடம் கேட்கணும். பாஜக விடம் இல்லை. உங்க வாதம் தி க பேரணி கணக்கை திமுக விடம் கேட்கற மாதிரி இருக்கிறது


venugopal s
ஜூன் 25, 2025 13:50

ஒரு மாநாடு எப்படி நடத்த வேண்டும் என்று இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். என்ன நான் சொல்வது சரி தானே?


SVR
ஜூன் 25, 2025 13:22

இங்க ஒரு தற்குறி மாநாட்டோட வரவு செலவு கணக்க கேக்குது. இந்த மாநாடு நடத்தியவர்கள் யாருக்கு கணக்கு காட்டணும்? எவனுக்கும் கணக்கு காட்ட தேவை இல்லை. எந்த கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது. எல்லா ஓட்டைகளையும் மூடி கொண்டு இருக்கவேண்டும். இது தானா சேர்ந்த கூட்டம் அப்படின்னு மூத்த பத்திரிகையாளர் இந்த செய்தியில் தெரிவித்த உள்ளார். ஒரு குவார்ட்டருக்கும் பிரியாணிக்கும் வந்த கூட்டம் இல்ல இந்த கூட்டம். சனாதனம் ஜெய பேரிகை கொட்டி ஆகி விட்டது. அடுத்த வருடம் இருக்கிறது மண்டகப்படி. தயாராக இருக்கவும்.


முதல் தமிழன்
ஜூன் 25, 2025 13:16

ஒரு சில தற்குறிகளால் மீண்டும் தமிழன் அடிமைத்தனத்தை நோக்கி பயணம்... கடவுள் பக்தி நல்லது... ஆனால் இந்த மாநாடு பக்தியினால் அல்ல... மக்களை மீண்டும் ஒரு ஜாதிக்கு அடிமையாக்க ஒரு சிலரால் சூழ்ச்சி செய்யப்பட்டது, உஷார்.


Raj S
ஜூன் 25, 2025 19:11

ஒரு திருட்டு தெலுங்கு கும்பலுக்கு மட்டும் அடிமையா இருக்கணும்னு சொல்றீங்க போல...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை