உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எத்தனை மிரட்டல் வந்தாலும் பணி தொடரும்: சவுக்கு சங்கர்

எத்தனை மிரட்டல் வந்தாலும் பணி தொடரும்: சவுக்கு சங்கர்

சென்னை: 'எத்தனை அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், வழக்குகள், அலைக்கழிப்புகள் வந்தாலும் எங்கள் பணி தொடரும்' என ஜாமினில் விடுதலையான சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர், புழல் சிறையில் இருந்து நேற்று ஜாமினில் விடுதலையானார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:பாசிசம் வென்றதாக வரலாறு இல்லை. தி.மு.க., அரசை எதிர்த்தே பேசக்கூடாது என்று அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடி நிலை தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது. வெகுஜன ஊடகங்கள் வாய் மூடி மவுனியாக்கப்பட்டுவிட்டதால், சமூக வலைத்தளங்கள் மற்றும் யூட்யூப்களில் எழும் குரல்கள் கூட திராவிட மாடல் அரசால் போலீசாரை வைத்து ஒடுக்கப்படுகின்றன.நீதிமன்றங்கள் மட்டும் இல்லையென்றால், இந்த காட்டாட்சியில் கேள்வி கேட்கவே ஆள் இல்லாமல் போய் விடும். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், எனக்கு ஜாமின் வழங்கி அளித்த தீர்ப்பில், போலீசாரையும், தமிழக அரசையும் சாட்டையால் அடித்திருக்கிறார். கருத்து சொல்வதற்காகவெல்லாம் வழக்கு பதிவு செய்து கைது செய்வதை நீதிமன்றங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது; கருத்து பிடிக்கவில்லை என்பதற்காக கைது செய்வது பாசிசம்; இரண்டு முறை குண்டர் சட்டம் போடப்பட்டு உச்சநீதிமன்றம் விடுவித்தபின்னும், மீண்டும் மீண்டும் சவுக்கு சங்கர் மீது வழக்கு போடப்படுவது ஏற்கத்தக்கதல்ல; சங்கர் குறிவைத்து பழிவாங்கப்படுகிறார்; என்று அழுத்தம் திருத்தமாக ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.நீதிமன்றங்கள், இது போன்ற உறுதியான நடவடிக்கையை எடுக்காவிட்டால், என்னைப் போன்றவர்கள் பேசவே முடியாது. அரசு மற்றும் போலீசாரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்திசை பாடும் அவல நிலை தமிழகத்தில் ஏற்படும்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் அளித்துள்ள அந்த சிறப்பான தீர்ப்பு, என் போன்றவர்களுக்கு பாதுகாப்பு அரணாக மட்டுமல்லாமல், தொடர்ந்து உண்மைகளை அச்சமின்றிப் பேசவும், அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கவும் ஊக்கமளிப்பதாக உள்ளது.கருத்து சொல்வதற்கெல்லாம் கைது செய்வதை நீதிமன்றங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்பதை அனைவருக்கும் புரியும் வகையில் தீர்ப்பளித்த நீதிபதி சுவாமிநாதனுக்கு தனிப்பட்ட முறையிலும், தமிழகத்தில் ஜனநாயகத்தை நேசிப்போர் சார்பிலும் நன்றி. எத்தனை அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், வழக்குகள், அலைக்கழிப்புகள் வந்தாலும் எங்கள் பணி தொடரும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Vinoth Kumar
ஜன 22, 2025 12:17

சவுக்கு சங்கர் தமிழ்நாட்டின் மீசை வைக்க ஒரு தகுதியான ஒரு தமிழன் வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் சிறையில் இருந்து வெளியே வந்ததை சொல்ல ஒரு அடிமை செய்தி ஊடகத்திர்க்கும் தைரியம் இல்லை சங்கரை கேவலமாக பேசுவர்கள் தமிழன் இல்லை திராவிட அடிமைகள்


Jagan (Proud Sangi)
ஜன 21, 2025 22:26

இதே சங்கர் இந்த நீதிபதியை பார்ப்பனர் என்று பல முறை கிண்டலடித்துள்ளார். Felix கூட சேர்ந்து ஜால்ரா. இப்போ அதே பார்பனரால் தான் இவருக்கு நீதி கிடைத்துள்ளது . இனிகூட சங்கருக்கு பார்பனர்மேல் உள்ள வன்மம் குறையாது. சொரியார் ஊட்டிய வெறி அப்பிடி


Advocate Ravinatesan
ஜன 21, 2025 21:08

Very good and right decision proceed


nisar ahmad
ஜன 21, 2025 17:29

காசு கொடுக்கும் எஜமானுக்கு விசுவாசம் காட்ட வேண்டியது கடமையல்லவா ரெண்டு பேரு சரியாக செய்கிறார்கள் சங்ரும் ஜட்ஜும்.


Mettai* Tamil
ஜன 21, 2025 16:44

ஊழல் ஒழிப்பு பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ....


Bala
ஜன 21, 2025 15:46

இந்த சவுக்கு சங்கரும் பத்திரிக்கையாளர் மணியும்தான் youtuber felix போன்றவர்களுக்கும் மற்றும் சிலருக்கும் திமுகவுக்கு ஆதரவாக விழுந்து விழுந்து இரண்டாண்டுகள் முன்பு பேட்டி கொடுத்தார்கள். இப்போ என்ன ஆயிற்று இவர்கள் இருவருக்கும் ? சரியான பேரம் படியலையா ?


S.Natarajan
ஜன 21, 2025 15:40

சங்கர் போன்ற மன உறுதி மிக்க பத்திரிகையாளர்கள்தான் தமிழ்நாட்டிற்கு தற்போதைய தேவை. சங்கர் அவர்களின் கைது குறித்தும் அவரது விடுதலை குறித்தும், மதிப்பிற்குரிய நீதியரசர் திரு.ஸ்வாமிநாதன் அவர்களின் தீர்ப்பு குறித்தும் செய்திகளை விரிவான முறையில் வெளியிட்ட தினமலருக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும். வேறு எந்த ஊடகமும் இது குறித்து செய்தி வெளியிடவில்லை என்பது வருத்தத்துக்குரியது.


Laddoo
ஜன 21, 2025 15:36

அமைதிப்படை அமாவாச தலம உங்களுக்கு சரிபடற மாத்ரி தெர்ல. அண்ணாமலை பக்கம் போனீங்கன்னா ஓர் கொம்பனும் ஒங்கோளே அஸ்ஜிக்க முடியாது.


T.sthivinayagam
ஜன 21, 2025 15:21

பிறகு மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம்


Yes your honor
ஜன 21, 2025 15:09

இவர் ஒரு சரியான ஆள், ஆனால் தவறான இடத்தில் இருக்கிறார். தனிமரம் தோப்பாகாது. ஓரளவு அதிமுகவை ஆதரிப்பதாக கேள்விப்பட்டது. இவர் இரண்டுமுறை கைதானபோதும் அதிமுக இவருக்கு உதவியதாக புலப்படவில்லை. ஆனால், திரு. அண்ணாமலை அவர்கள் இவர் முதல் முறையாக கைது செய்யப்பட்டபோது தனது ஆதரவு குரலை எழுப்பி இருந்தார். பிஜேபியுடன் இணைந்து திமுகவை எதிர்ப்பாரேயானால் இவரின் பின்புலம் பலப்படும்.