உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில்களில் இரவு நேரத்தில் மொபைல் சார்ஜிங் நோ

ரயில்களில் இரவு நேரத்தில் மொபைல் சார்ஜிங் நோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'ரயில்களில் நள்ளிரவு மொபைல் போன் சார்ஜிங் வசதி இருக்காது' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.ரயில்வே வாரிய உத்தரவின்படி, ரயில்களில் தீ விபத்துகளை தடுக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கையாக இரவு நேரங்களில், ரயில் பெட்டிகளில் மொபைல்போன் சார்ஜ் செய்யும் பிளக் பாயின்ட்களுக்கு, மின் இணைப்பு ரத்து செய்யப்படுகிறது. இது, கடந்த பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. எனினும், சமீப காலமாக ரயில் பெட்டிகளில், 'சார்ஜிங் பாயின்ட்' வேலை செய்யவில்லை' என, பயணியர் சிலர் ரயில்வே உதவி எண்ணுக்கும், செயலிக்கும் புகார் தெரிவித்து வருகின்றனர். சிலர் சமூக வலைதளத்தில் புகாராக எழுதி வருகின்றனர்.இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், '2014ல் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வெளியிட்ட உத்தரவின்படி, ரயில் பெட்டிகளில் சார்ஜிங் பாயின்ட்களுக்கு, இரவு 11:00 முதல் அதிகாலை 5:00 மணி வரை, மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இது, ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

சிந்தனை
ஜன 30, 2025 00:06

மக்கள் வரி ஊழியர்களுக்கு வேலை மாத சம்பளம் வாங்குவதுதான்... உங்களுக்கு ஒன்றும் வேலை செய்வது கிடையாது...


Barakat Ali
ஜன 29, 2025 16:47

முற்றிலும் அவசியமான நடவடிக்கை .... மொபைல் பாட்டரியை சார்ஜ் செய்ய பவர் பாக் எடுத்துக்கொண்டு போவது நல்லது ....


Ramesh Sargam
ஜன 29, 2025 12:53

இரவு நேரங்களில் பயணத்தின்போது ஒரு சில அறிவிலிகள் சத்தமாக தங்களது மொபைல் போனில் பேசிக்கொண்டும், சினிமா படங்கள் பார்த்துக்கொண்டும் மற்ற பயணிகளுக்கு மிகவும் தொந்தரவு கொடுக்கின்றனர். ரயில்வே போலீஸ் அப்படிப்பட்டவர்களை முதலில் எச்சரிக்கவேண்டும். அல்லது அவர்களது மொபைல் போனை பறிமுதல் செய்யவேண்டும். அப்படியும் மீறினால் அவர்களை அடுத்துவரும் ரயில் நிலையத்தில் இறக்கிவிடவேண்டும்.


kumaresan
ஜன 29, 2025 10:20

பொது இடங்களில் குறிப்பாக பேரூந்து, ரயில், விமானங்களில் மொபைல் போனை பயன்படுத்தி சத்தமாக பேசுவது, கோபத்தில் கத்துவது, யூடுப் போட்டு சத்தம் உண்டாக்கி அருகில் உட்காந்திருப்பவர்களுக்கோ , நிற்பவர்களுக்கோ எரிச்சல் ஏற்படுத்துவதை தடுக்க பப்ளிக் நியூசன்ஸ் கீழ் உடனடியாக சட்டம் கொண்டு வர வேண்டும்.


M. PALANIAPPAN
ஜன 29, 2025 09:58

நல்ல முடிவு


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜன 29, 2025 09:54

இந்த செய்தியை கேட்டால் சிரிப்புதான் வருகிறது. எதோ மற்ற நேரங்களில் எல்லாம் சார்ஜிங் பாய்ண்ட்கள் வேலை செய்வது போல் செய்தி.


J.Isaac
ஜன 29, 2025 09:52

இரவு நேரங்களில் மொபைல் உபயோகிப்பதில் கட்டுப்பாடு தேவை. நம் நாட்டில் படித்த முட்டாள்கள் அதிகம். மற்றவர்களை பற்றி சிந்திப்பதே கிடையாது ரயிலில் இரவு நேரங்களில்.சிறிசு முதல் பெரிசு வரை அலப்பறை தாங்கமுடியவில்லை.


அப்பாவி
ஜன 29, 2025 08:31

பாதி இடத்தில் சார்ஜ் பாயிண்ட்டே வேலை செய்யாது.


KavikumarRam
ஜன 29, 2025 12:22

சரி. உங்க திராவிட மாடல் வீட்டிலேயே ஃபுல் சார்ஜ் ஏத்திக்கிட்டு ரயில் ஏறுனா போதும். இல்லேன்னா எதுக்கு மத்திய அரசோடு ரயில்ல போறீங்க. உங்க திராவிட மாடல் படியில்லா பஸ்சுல்ல போங்க.


இறைவி
ஜன 29, 2025 08:26

இரவில் மொபைலை சார்ஜில் போட்டு விட்டு நாம் தூங்கி விடுகிறோம். பல நேரங்களில் மொபைல் போன்கள் முழுமையாக சார்ஜ் ஆன பின்னும் மின் வழங்லை நிறுத்தாவிட்டால் மொபைல் பேட்டரி அதிக சார்ஜ் ஆகும். தற்போது வரும் மொபைல் சார்ஜர்கள் வேகமாக சார்ஜ் செய்ய ஏதுவாக அதிக வாட் கொண்டவை. அதனால் மொபைல் பேட்டரி அதிக சார்ஜ் ஆவதால் தீ பற்றிக் கொள்ள வாய்ப்புகள் அதிகம். அதனால் இரவில் மொபைல் சார்ஜர் மின்சாரத்தை நிறுத்துவது மிகச் சரி. மொபைல் போனில் சார்ஜ் குறைவாகவோ இல்லாமலோ இருந்தால், இரவு முழுதும் மொபைலில் பேசி மற்றவர்கள் தூக்கத்தை கெடுக்காமலிருப்பார்கள். இந்த அடிப்படை யோசனை இல்லாத கண் மூடித்தனமாக உபிக்களின் பிஜெபி எதிர்ப்பு கதறல் பலமாக இருக்கிறது. கதறுங்கள். கதறுங்கள்.


rama adhavan
ஜன 29, 2025 08:26

அப்படியே ரயிலில் உணவு தயாரிப்பதையும் நிறுத்தலாம். தீ விபத்தையும் தடுக்கலாமே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை