உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேண்டாம்... இனி தி.மு.க., வேண்டாம்: நயினார் நாகேந்திரன் புதிய கோஷம்

வேண்டாம்... இனி தி.மு.க., வேண்டாம்: நயினார் நாகேந்திரன் புதிய கோஷம்

துாத்துக்குடி: சட்டசபை தேர்தலுக்காக, 'வேண்டாம் இனி தி.மு.க., வேண்டாம்' என்ற கோஷத்தை துவங்கி உள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.துாத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி:அ.தி.மு.க.,வுக்கு பா.ஜ., கூடுதல் சுமை என கூறும் சீமான், சுமை இல்லாத கட்சி எது எனவும் விளக்கமாக கூறி இருக்க வேண்டும்.தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உட்பட அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன். அ.தி.மு.க., பொதுச் செயலருடன் விஜய் பேசினாரா, இல்லையா என எனக்கு தெரியவில்லை.தற்போது, 'வேண்டாம் இனி தி.மு.க., வேண்டாம்' என்ற ஒரு கோஷத்தை துவங்கி உள்ளேன். அதன்படி, அனைவரும் சிந்திக்க வேண்டும். சென்னையில், நட்சத்திர ஹோட்டல்களில் கோகைன் போன்ற போதைப்பொருட்கள் வழங்கப்படுவதாகவும், முக்கிய நடிகர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும் பாடகி ஒருவர் கூறியுள்ளார்.https://twitter.com/dinamalarweb/status/1939629987952578602தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதை கருத்தில் கொண்டு, இந்த கோஷத்தை தேர்தல் வரை எடுத்துச் செல்ல இருக்கிறோம்.தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸை சந்தித்தது பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை. மதுரையில் முருகன் மாநாடாக விதைக்கப்பட்டது, 2026ல் ஆல மரமாக வளர்ந்து, நிழல் தரும் அரசாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

sivanmagan
ஜூலை 01, 2025 13:25

SHIVAALAYA MUSICALS youtube இல் முருகன் ஆட்சி செய்யும் song என்று popular பாட்டு இருக்கிறது. இது பிஜேபி சேனல் என்பது உண்மையா? ஓம் முருகா


subramanian
ஜூன் 30, 2025 19:49

திமுக இல்லாத தமிழ்நாடு உருவாகும்


ராஜா
ஜூன் 30, 2025 19:47

நய்னா ஒரு சந்தர்ப்ப வாதி என்பதை மறந்து விட்டீர்களா?


ramesh
ஜூன் 30, 2025 10:09

ஜோசப் விஜய் கிறிஸ்தவர் என்று கிண்டல் அடித்து ஏழனம் செய்தீர்கள் . இப்போது தேர்தலுக்கு கூட்டணிக்காக விஜய் எங்களுடன் கூட்டணிக்கு வரவேண்டும் என்று அழைக்கிறீர்கள் . இப்போது ஜோசப் கிறிஸ்தவர் எங்கே போனார்


Pandianpillai Pandi
ஜூன் 30, 2025 09:30

///மதுரையில் முருகன் மாநாடாக விதைக்கப்பட்டது, 2026ல் ஆல மரமாக வளர்ந்து, நிழல் தரும் அரசாக அமையும்.////அரசியல் மாநாடு கடவுளின் பெயரில் கூட்டத்தை கூட்டி நடத்தப்பட்ட மாநாடு என்பதற்கு இதுவே சான்று. மதவாதம் என்ற பெயரில் தீவிரவாத அரசியல் செய்பவர்கள் தி மு க வை வேண்டாம் என்று தான் சொல்வார்கள். வாஜ்பாய் போன்ற நல்லவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியதுதான் தி மு க .. நல்லோர்கள் நல்லதே நினைக்கும் மக்களுக்கு என்றுமே உறுதுணையாக இருப்பது தி மு க மட்டுமே . உங்கள் நாடகங்கள் மக்களிடம் எடுபடாது. தி மு க ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்வதை மக்கள் உணர்ந்துகொண்டார்கள். மக்கள் ஓரணியில் ஒன்றினைவார்கள். மக்கள் சக்தி மகத்தானது என்பதை பொய்யர்களுக்கு தி மு க பாடம் புகட்டும். தமிழகம் போராடும் வெல்லும்.


Mettai* Tamil
ஜூன் 30, 2025 12:01

இந்த முறை மெகா ஊழல் இந்துமத விரோத பிரிவினைவாத கட்சியான திமுக வை எதிர்த்து தமிழகம் போராடும்..பிஜேபி கூட்டணி வெல்லும் ....


Sundar R
ஜூன் 30, 2025 09:28

2026 தேர்தலுக்கு முன்பாகவே திமுகவை தகனம் செய்ய வேண்டும். இது தான் பாஜக/அதிமுகவின் தலையாய பணி. தமிழக மக்கள் பாஜக/அதிமுகவிடம் திமுகவுக்கு எதிராக தேர்தல் வெற்றியை ஒண்ணும் எதிர்பார்க்கவில்லை. அது ஒண்ணும் பெரிய அதிசயமும் இல்லை. ஏனென்றால், திமுகவை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்கள் தேசவிரோத, பிரிவினைவாத, திமுகவை ஏராளமான தேர்தலில் தோற்கடித்துள்ளார்கள். ஆனால், அவர்கள் திமுகவை அடியோடு ஒழிக்கவில்லை. தற்போதைய தேவை, திமுகவை காணாதாக்க வேண்டும். அதற்கு, 2026 தேர்தலுக்கு முன்பாகவே திமுகவை தகனம் செய்ய வேண்டும். அதைத் தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


ramesh
ஜூன் 30, 2025 10:14

உங்கள் கட்சிக்கு ஒட்டு இல்லாத போதே dmk வை தகனம் செய்ய வேண்டும் என்று பேசுகிறீர்கள் . தங்கள் பேச்சு தீவிரவாதிகள் பேசுவது போல உள்ளது . உங்களுக்கு யாராவது பிடிக்கவில்லை என்றால் அவர்களை எரித்து விடவேண்டும் .நீங்கள் மட்டும் வாழவேண்டும் .எப்படிப்பட்ட ...... ஆசை


vivek
ஜூன் 30, 2025 14:05

ரமேஷு தெய்வமே...அங்கே விசிக , மதிமுக... சீட்டு பிரச்சனை முடிஞ்சுதா....அங்கே எப்படி...


Mario
ஜூன் 30, 2025 09:15

வேண்டாம்... இனி பிஜேபி, வேண்டாம்: மக்கள் புதிய கோஷம்


Mettai* Tamil
ஜூன் 30, 2025 12:04

வேண்டாம்... இனி ஊழல் திமுக , வேண்டாம்: மக்கள் புதிய கோஷம்...


Oviya Vijay
ஜூன் 30, 2025 09:05

சாதாரண ஒரு தேர்தல் கூட்டணிக்காக, கூட்டணிக் கட்சியோட நிர்பந்தத்துக்காக ஒதுக்கி வெச்ச கட்சி மேலிடம் 2026 தேர்தல் தோல்விக்கு அப்புறம் உங்கள தூக்கி எறியிறதுக்கு எம்புட்டு நேரம் ஆகப்போகுது. தேர்தல்ல தோத்ததுக்கு அப்புறம் என்ன சோக கீதம் பாடணும்னு கூட இப்போவே முடிவு பண்ணி வெச்சுக்கோங்க... கோரஸா பாடுறதுக்கு இப்போவே பிராக்ட்டிஸ் பண்ணீங்கன்னா கட்சியோட இரங்கல் கூட்டம் நடத்துறதுக்கும் ரொம்பவே வசதியா இருக்கும்...


vivek
ஜூன் 30, 2025 09:25

ஓவியரே ....உன்னை பார்த்த பாவமா இருக்கு....நீயும் தான் கதறி கதறி கருத்து போடுற....ஆனா யாரும் கண்டுகளையே...


Thravisham
ஜூன் 30, 2025 09:00

அண்ணாமலை மாதிரி செயல்படு. அண்ணாமலை மாதிரி அதிரடி அரசியல் தான் எடுபடும்


Thirumal s S
ஜூன் 30, 2025 08:09

திமுகவும் வேண்டாம் பிஜேபி மும் வேண்டாம்