உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுகவை யாராலும் அழிக்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்

திமுகவை யாராலும் அழிக்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: எஸ்ஐஆர் என்ற ஆயுதத்தை எடுத்து திமுகவை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் திமுகவை யாராலும் அழிக்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். திருச்சியில் நடந்த ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஸ்ரீரங்கம் திமுகவின் கோட்டை. கடந்த 75 ஆண்டுகளாக சகோதரத்துவ உணர்வோடு நம் இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். திமுகவை கழகத்தினர் கழகம் என்று மட்டும் அழைப்பதில்லை, இயக்கம் என்றும் அழைப்பது உண்டு. காரணம், இயக்கம் என்பது ஓய்வே இல்லாமல் உழைப்பது. அப்படியான இயக்கம் தான் நம் இயக்கம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ry2glydj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திமுகவை இயக்கம் என்று சொல்வதால்தான் நமக்கு ஓய்வே இல்லை என்று கூறுகிறேன். சிறிய சிறிய தடைகளை பார்த்துக்கூட நமது திமுக இயக்கம் நின்றதே இல்லை. தமிழகத்தில் எஸ்ஐஆர் மூலம் திமுகவை அழிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் எடுபடாது. எஸ்ஐஆர் குறித்து உள்ளபடி அக்கறை இருந்தால் அதிமுக முன்கூட்டியே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் திடீரென வழக்கு போடுவதற்கு காரணம் என்ன? எஸ்ஐஆரை அதிமுக ஆதரித்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் கமிஷன், பாஜ எதை சொன்னாலும் அதை ஆதரிக்கும் மனநிலையில் தான் இபிஎஸ் இருந்து கொண்டு இருக்கிறார். எதிர்ப்பதற்கு துணிச்சல் இல்லை. நாம் தொடர்ந்து இருக்கும் வழக்கில், தங்களை இணைத்து கொண்டு இருக்கிறார் என்று சொன்னால், ஒரு கபட நாடகம் நடத்துவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். டில்லியில் உள்ள பிக் பாஸ்க்கு பழனிசாமி ஆமா சாமி போட்டு தான் ஆக வேண்டும். எதிரிகள் புது, புது உத்திகளோடு நம்மை அழிக்க அவதாரம் எடுத்து வருகிறார்கள். சிபிஐ, வருமான வரித்துறை போன்ற ஆயுதங்களை எடுத்து மிரட்டி பார்த்தார்கள். ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது எஸ்ஐஆர் என்ற ஆயுதத்தை எடுத்து திமுகவை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் திமுகவை யாராலும் அழிக்க முடியாது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Rajasekar Jayaraman
நவ 10, 2025 23:08

அதுதான் நீங்களே அழிக்கிறீர்கள் அது போதும் எங்களுக்கு நீங்கள் அறிந்து ஒழிந்தால் தமிழர்கள் வாழ்வார்கள்.


MARUTHU PANDIAR
நவ 10, 2025 18:15

தேர்தல் என்ற ஒன்று வருவதே ஒவ்வொரு முறையும் இவங்க கட்சிய அழிக்கணும்ங்கற நோக்கத்தில் தான். அப்படி தானே? அப்பொ இந்தத் தேர்தலையே தமிழ் நாட்டுக்குள் வர விடாமல் அதனை அழித்து விடலாமா? அப்புறம் இவங்க கட்சி எப்பவுமே safe தான் அப்படீங்கறாங்க


Madras Madra
நவ 10, 2025 17:07

ஆமாம் நாங்களே அழிந்து போவோம்


KOVAIKARAN
நவ 10, 2025 16:44

திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று துண்டு சீட்டு முதல்வர் ஸ்டாலின் கூறியது மிகவும் சரி. ஏனென்றால் வேறு யாரும் திமுகவை அழிக்கப் போவதில்லை. தீய திமுக தொண்டர்களும், வட்ட, மாவட்ட தலைவர்களும் மற்றும் அமைச்சர்களும், காவல் துறையும் கடந்த 4 வருடங்களில் செய்த அநியாயம், அட்டூழிகளினால் தான் திமுக அழியப்போகிறது. வரும் 2026 தேர்தலில், திமுக எதிர்கட்சியாகக் கூட வர வாய்ப்பில்லை என்று தான் பரவலாக பேசப்படுகிறது.


vbs manian
நவ 10, 2025 15:57

எங்களை அழிக்க முடியாது என்று சொன்ன பலர் காற்றில் கலந்து போயினர். சார் தேர்தல் ஆணையம் செயல் படுத்துகிறது. அவர்கள் கடமை. ப ஜெ கா அல்ல. மேற்கு வங்கம் தமிழகம் தவிர யாரும் எதிர்க்கவில்லை. மடியில் பயங்கர கனம்


என்றும் இந்தியன்
நவ 10, 2025 15:44

இது 1000% நிஜம் மலக்கழிவுகளை எங்காவது அழிக்கமுடியுமா அது மண்ணோடு மண்ணாக கலந்து போகும் அதைப்போலத்தான் திருட்டு திராவிட முரடர்கள் கயவர்கள் கட்சியும் என்று எவ்வளவு அழகாக ஒத்துக்கொள்கின்றார் ஸ்டாலின்


எஸ் எஸ்
நவ 10, 2025 15:10

கல்யாண வீட்டில் மணமக்களை வாழ்த்தும் போது அழிவு பற்றியா பேசுவது?


Suppan
நவ 10, 2025 17:09

இந்த மாதிரியான அமங்கல வார்த்தைகளை திருமண நிகழ்வுகளிலும் திமுக எப்பொழுதுமே பேசும். நாத்திகர்கள் என்று பீற்றிக் கொள்பவர்கள் அல்லவா? திருமண வீட்டுக்காரர்கள் மனது என்ன பாடுபடும் என்று எப்பொழுதாவது இந்த கேனப்பிறவிகள் நினைத்துப் பார்ப்பது உண்டா? அவர்கள் வெளியில் சொல்லிக்கொள்ளமுடியவில்லை.


Barakat Ali
நவ 10, 2025 15:05

இந்தக் கொசுத்தொல்லை ............


duruvasar
நவ 10, 2025 14:34

இதை தினமும் குறைந்தபட்சம் 100 முறை சொல்லவேண்டும் என ஜோஸ்யக்காரர் சொல்லியிருக்கலாம் என தோன்றுகிறது.


லதா மகேஷ்
நவ 10, 2025 14:23

ஆம் அடி வருடிகளும், அடிமைகளும், ப(பி)ணம் திண்ணிகளும் இருக்கும் வரை.


புதிய வீடியோ