உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூரில் சகஜ நிலை திரும்புகிறது

கரூரில் சகஜ நிலை திரும்புகிறது

கரூர்: கரூர் - ஈரோடு சாலை வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இதனால், முதல்வர் ஸ்டாலின், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் முருகன், அகில இந்திய காங்., பொதுச்செயலாளர் வேணுகோபால், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., உள்ளிட்ட, பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தும், காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறியும் சென்றனர். காயமடைந்தவர்களில் தற்போது, ஆறு பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கரூர் மற்றும் வேலுச்சாமிபுரத்தில் நேற்று சகஜ நிலை மெல்ல திரும்பியது. பொதுமக்கள் நேற்று ஆயுத பூஜையையொட்டி கடைகளில் பொருட்களை வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
அக் 02, 2025 08:45

கரூரில் சகஜ நிலை திரும்பியது. நல்லது. இனி மக்கள் மனநிலை நல்ல நிலைக்கு திரும்பவேண்டும். அதாவது இனிமேலாவது அரசியல் பொதுக்கூட்டங்கள், சினிமாக்கார அரசியல்வாதிகளின் பொதுக்கூட்டங்களுக்கு வருவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். உங்களின் குடும்பத்தின் மீது அக்கறை செலுத்தவேண்டும். உங்கள் சொந்த நலனில் அக்கறை திரும்பவேண்டும். வேண்டாம் அரசியல். வேண்டாம் சினிமாக்கார கூத்தாடி பசங்கள். இது தமிழக மக்கள் அனைவருக்குமான பொதுவானது அறிவுரை. அனைவருக்கும் என் இனிய விஜயதசாமி நல்வாழ்த்துக்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை