உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பள்ளிகளில் காலை உணவு சாப்பிடும் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு

 பள்ளிகளில் காலை உணவு சாப்பிடும் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு

சென்னை: காலை உணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை, 40 சதவீதம் சரிந்துள்ளது, பள்ளிக்கல்வித் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு, நாட்டிலேயே முதல் முறையாக, இலவசமாக காலை உணவு வழங்கும் திட்டம், கடந்த 2022 செப்., 15ம் தேதி துவங்கப்பட்டது. நடவடிக்கை அதன்பின், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் நகர்ப்புற பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, காலை உணவு உண்ணும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது குறித்து ஆய்வு நடத்தி, அனைத்து மாணவர்களும் பயன் பெறும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: தினமும் காலை உணவு சாப்பிடும் மாணவர்கள் விபரத்தை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது அதற்கான பொறுப்பாளர், காலை உணவு திட்ட செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், பல பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள், எஸ்.ஐ.ஆர்., திருத்தப்பணியில் ஈடுபட்டுள்ளதாலும், பல்வேறு பணிபளு காரணமாகவும், கடந்த சில மாதங்களாக, பல தலைமை ஆசிரியர்கள் காலை உணவு சாப்பிடும் மாணவர்கள் விபரங்களை பதிவேற்றம் செய்ய வில்லை. காலை உணவு திட்ட செயலியின் வேகமும் மந்தமாக உள்ளது. மேலும், நகர்ப்புறங்களில் வேலைக்கு செல்லும் பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு, வீட்டில் தயாரிக்கும் உணவை கொடுத்து பள்ளிக்கு அனுப்புகின்றனர். அபாயம் சமூக நலத்துறை கடந்த மாதம் எடுத்த கணக்கெடுப்பில், 4 லட்சத்து 68,554 மாணவர்களில், 2 லட்சத்து, 87,997 மாணவர்கள் மட்டுமே, காலை உணவு சாப்பிட்டது தெரிய வந்துள்ளது. மொத்தத்தில், 40 சதவீதம் மாணவர்கள், காலை உணவு சாப்பிடவில்லை. இந்நிலை தொடர்ந்தால், காலை உணவு திட்ட நிதி ஒதுக்கீடு, உணவுப்பகிர்வு குறைக்கப்படும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ramesh Sargam
டிச 14, 2025 20:17

இந்நிலை தொடர்ந்தால், காலை உணவு திட்ட நிதி ஒதுக்கீடு, உணவுப்பகிர்வு குறைக்கப்படும் அபாயம் உள்ளது. குறைத்தால் ஓகே. ஆனால் அதில் அதிகாரிகள் திருட்டு கணக்கு காண்பித்து ஆட்டைபோடாமல் இருக்கவேண்டும்.


Keshavan.J
டிச 14, 2025 14:32

பல பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள், எஸ்.ஐ.ஆர்., திருத்தப்பணியில் ஈடுபட்டுள்ளதாலும், பல்வேறு பணிபளு காரணமாகவும், கடந்த சில மாதங்களாக, பல தலைமை ஆசிரியர்கள் காலை உணவு சாப்பிடும் மாணவர்கள் விபரங்களை பதிவேற்றம் செய்ய வில்லை. என்ன ஒரு பித்தலாட்டம் SIR பணி 3 மாதங்களவா நடக்குது


chennai sivakumar
டிச 14, 2025 14:21

தலைவி பட காட்சி நினைவிற்கு வருகிறது


Shekar
டிச 14, 2025 12:18

வெந்நீரில் ரவையை கலந்து எத்தனை நாள்தான் சாப்பிடமுடியும்


அப்பாவி
டிச 14, 2025 11:43

அதே உப்புமா டெய்லி எவன் திம்பான்? சிக்கன், பீட்சா, பர்கர்னு குடுத்துப் பாருங்க.


K.aravindhan aravindhan
டிச 14, 2025 10:59

மூடுவிழாவுக்கான சமிக்கை விளக்கு


K.aravindhan aravindhan
டிச 14, 2025 10:58

திட்டத்தை மூடும் முன் இந்த எச்சரிக்கை


Chandru
டிச 14, 2025 10:45

நான் அன்று என் வீட்டருகில் உள்ள பள்ளியில் ஒரு மூன்றாம்வகுப்பு குழந்தயிடம் சாப்பாடு பள்ளயில் எப்படி இருக்கிறது என்று கேட்டேன். அந்த பிஞ்சு வாயில் இருந்து வந்த பதில் -நல்லாவே இல்ல அங்கிள் .


Kasimani Baskaran
டிச 14, 2025 10:22

சுகாரத்துடன் சுவையாக சமைத்து போட்டால் நிச்சயம் பிள்ளைகள் சாப்பிடத்தான் செய்வார்கள். சமைப்போருக்கு பயிற்சி, சுத்தம் ஆகியவை முக்கியம்.


sundarsvpr
டிச 14, 2025 08:56

சிறைச்சாலைகளில் கைதிகள் குறைந்தால் காவல்துறையை பாராட்டவேண்டும். பள்ளிகளுக்கு இலவச உணவு மாணாக்கர்கள் குறைந்தால் குடும்பங்கள் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது என்று அரசை பாராட்டவேண்டும். பள்ளிக்கு வரும் மாணாக்கர்கள் எண்ணம் குறையவில்லை எனின் இலவச உணவு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவை இல்லை.


புதிய வீடியோ