உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணி மாற்றம் செய்ததால் அதிகாரிக்கு கத்தி குத்து

பணி மாற்றம் செய்ததால் அதிகாரிக்கு கத்தி குத்து

தஞ்சாவூர்: பணி மாற்றம் செய்த, அரசு போக்குவரத்து கிளை மேலாளரை, கத்தியால் குத்திய டிரைவர் செந்தமிழ்செல்வன், 45, என்பவரை, போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 58. அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கிளையில் மேலாளர். இதே கிளையில், மேலமாத்துாரைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன், டிரைவராக வேலை பார்த்தார். இவர், பணிக்கு முறையாக வரவில்லை என்பதால், சில நாட்களுக்கு முன், செந்தமிழ் செல்வனை, கும்பகோணத்தில் இருந்து காரைக்குடிக்கு, அதிகாரிகள் பணியிட மாறுதல் செய்தனர். இந்நிலையில், செந்தமிழ் செல்வன் நேற்று, கும்பகோணம் கிளை அலுவலகத்திற்கு வந்து, பணியிட மாறுதல் தொடர்பாக, சுரேஷிடம் தகராறு செய்து, அவரது கையில் கத்தியால் குத்தினார். மேற்கு போலீசார், வழக்கு பதிந்து, செந்தமிழ் செல்வனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !