உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி, ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி: இபிஎஸ் ஆவேச பேட்டி

எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி, ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி: இபிஎஸ் ஆவேச பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இந்த அரசாங்கம் எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி, ஆளுங்கட்சிக்கு ஒரு நீதியாக தான் பார்க்கப்படுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் சம்பவம் தொடர்பாக சட்டசபையில் பேச எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நாங்கள் கருத்து கூறிய பிறகு முதல்வர் பதில் அளிக்க வேண்டும் என சட்டசபையில் கேட்டோம். கரூரில் உரிய பாதுகாப்பை கொடுத்திருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம். ஆனால் இந்த அரசாங்கம் எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி, ஆளுங்கட்சிக்கு ஒரு நீதியாக தான் பார்க்கப்படுகிறது. அது எந்த எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, அந்த அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு வேலுச்சாமிபுரத்தில் நடந்த கூட்டத்திற்கு அளிக்கவில்லை. கரூர் சம்பவத்திற்கு பாதுகாப்பு குறைபாடே காரணம். இந்த அரசின் அலட்சியத்தால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். கூட்டம் நெரிசல் நடந்த இடத்தில் 500 போலீசார் எல்லாம் இல்லை. நான் ஊடகங்களில் பார்த்தேன். தெளிவாக தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகத்தலைவர் பேசும் போது அந்த இடத்தில் எத்தனை போலீசார் இருந்தார்கள். ஏடிஜிபி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது போலீசார் 500 பேர் பாதுகாப்பு பணியில் இருந்ததாக சொல்கிறார்கள். இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் 660 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக சொல்கிறார். இதிலே முரண்பட்ட கருத்து. இதனால்தான் மக்களுக்கு மிகப்பெரிய சந்தேகம் எழுந்திருக்கிறது. எங்களுக்கு நிராகரித்த இடத்தை தவெகவிற்கு எதற்காக அரசு கொடுத்தது? அசம்பாவிதம் நடக்க வேண்டும் என திட்டமிட்டு வேலுச்சாமி புரத்தில் இடத்தை கொடுத்ததாக மக்களும் சந்தேகிக்கின்றனர். அவசர அவசரமாக ஒரு நபர் ஆணையத்தை எப்படி அமைக்க முடியும். உண்மை சம்பவத்தை மறைக்க அரசு நினைக்கிறது. ஒரு நபர் ஆணையம் முறையாக செயல்பட எந்த உதவியும் செய்யவில்லை. தவெக தலைவர் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பத்து நிமிடம் பேசியிருப்பார். அப்போது ஒரு செருப்பு வந்து விழுகிறது. சட்டசபையில பேசினா, நீக்கிவிடுவார்கள்: அதனால் மக்களுக்கு தெரிவிக்க ஊடகங்கள் வாயிலாக பேசுகிறேன். கரூர் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை; மக்களுக்காக பேசுகிறோம். கரூர் பற்றி பேசினால் ஆளும் கட்சியினருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? இவ்வாறு இபிஎஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

திகழ்ஓவியன்
அக் 15, 2025 19:42

எப்படி உடனே போஸ்ட்மார்ட்டரும் செய்தீர்கள் , குஜராத்தில் விமானவிபத்தில் கறிகட்டையான 169 பேர் உடல்கள் 16 ஹௌர்ஸ் இல் எப்படி உடற்கூராய்வு நடந்தது.என்று கேட்டு இருப்பிரா , இங்கு 41 பேர் அதுவும் 14 மணிநேரம் உடற்கூராய்வு நடந்தது. குஜராத் இல் TN இல் இருப்பது போல ஹாஸ்பிடல் FACILITY இல்லை


திகழ்ஓவியன்
அக் 15, 2025 19:31

நேற்றுவர போலீஸ் இல்லை என்றவர் இன்று 500 போலீஸ் தான் என்கிறார் , இவர் பேச்சு எதிர்க்கட்சி தலைவர் போல் இல்லை


T.sthivinayagam
அக் 15, 2025 19:26

உண்மை தான் நீதிபதிகளின் தீர்ப்புகள் கூட மாறும் தன்மையில் தான் சமீபகாலமாக உள்ளதாக அனைவரும் பேசுகின்றனர்.


M Ramachandran
அக் 15, 2025 18:47

அந்த நிகழ்வுக்கு பல தரப்பிலிருந்தும் ஆளும் கட்சியை முக்கியமா அங்கு கருரையே தன கையில் வைத்து கொண்டிருக்கும் ஒரு ஆளும் கட்சி பிரமுகரை தான் குறை கூறி விரல் காட்டுகிறார்கள்.


Vasan
அக் 15, 2025 18:34

இருவருக்குமே நீதி என்றால் சந்தோஷ பட வேண்டியது தானே? ஏன் ஆவேசம் அடைய வேண்டும்?


V Venkatachalam
அக் 15, 2025 19:19

மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் நிதி குடுக்குது. ஆனா சாராய யாவாரி மட்டும் பணம் குடுக்கலைன்னு ஆவேசம். அதான் எல்லா மாநிலத்துக்கும் குடுத்து கிட்டே இருக்கே. முட்டு குடுக்கிறவிங்க கண்ணை மூடி கிட்டு முட்டு குடுக்க கூடாது.


திகழ் ஓவியன்
அக் 15, 2025 16:45

யாருக்கும் காவடி தூக்கினாலும், தூக்காவிட்டாலும், சிங்கநடை எடப்பாடியார் வெற்றி உறுதி...


Vasan
அக் 15, 2025 16:38

திமுக = நீதி அதிமுக = அநீதி


V Venkatachalam
அக் 15, 2025 17:16

திருட்டு தீயமுக நீதியை கொல்லும் அதிமுக அநீதியை கொல்லும் என்று பொருள் காண்க. கூடவே முட்டுக்களின் கேவலத்தையும் காண்க.


சேகர்
அக் 15, 2025 16:18

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தலைவர் விஜய் பக்கம் நிற்கின்றனர், அதற்கு கூடும் கூட்டமே சாட்சி. அதே டத்தில் இவருக்கு 20 இல் ஒரு பங்கு கூட கூட்டம் கூடவில்லை. இதில் கூச்சப்பட ஏதுமில்லை. 150 தொகுதியில் விஜய் அவர்களும் 80 தொகுதியில் அ.தி.மு.க வும் போட்டியிடலாம். இதன் மூலம் நாம் பிரமாண்ட வெற்றியை பெறலாம்.


V Venkatachalam
அக் 15, 2025 15:56

எடப்பாடியாரே, அவிங்க பதற்றத்தை நீங்க கண்டுபிடிச்ச துக்கு அவிங்களுக்கு இன்னும் பதட்டம் ஜாஸ்தியாயிட்டுது. அவிங்களுக்கு எங்க ஒளிஞ்சுக்குறதுன்னே தெரியலை. எத்தனை பொய் அறிக்கை குடுத்தாலும் அத்தனை அறிக்கைகளிலும் கேள்வி கேட்டு அவிங்க பொய்களை கிழித்து தொங்க விடுகிறீர்கள். எதுக்குமே அவிங்க கிட்ட பதில் இல்லை. இதோடு விடாதீர்கள். அந்த பொய்யன்களை ஓட ஓட விரட்டுங்கள்.


நிவேதா
அக் 15, 2025 15:15

முதலில் விஜய் அதிமுகவுடன் கூட்டணியா என தெரிவிக்கட்டும். அதற்குமுன்பே, ஏன் திரும்ப எடப்பாடி தவழ்கிறார்?


V Venkatachalam
அக் 15, 2025 17:03

சட்ட சபையில் சட்டையை கிழிச்சுகிட்டு ஓடி வந்தவர் பைத்தியமா? தவழ்பவர் பைத்தியமா? இந்த 200 ரூவா கேஸுங்க தன் முதுகில் என்ன இருக்குன்னு பாக்க மாட்டானுங்க. அடுத்தவன் முதுகில் ஏன் இப்புடி இருக்கும்பானுங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை