| ADDED : ஜன 08, 2025 06:51 PM
திருப்பம் தருபவர்
டில்லி உதயன் மார்க்கில் புதியதாக கட்டப்பட்ட திருப்பதி பெருமாள் கோயிலுக்கு சென்றால் நல்ல திருப்பம் ஏற்படும். திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க ஆண்டு முழுவதும் கூட்டம் இருக்கும். அதிலும் தற்போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதை சரிசெய்ய நாடு முழுவதிலும் முக்கிய இடங்களில் பெருமாள் கோயிலைக் கட்டித் தருகிறது திருப்பதி தேவஸ்தானம். அதோடு அக்கோயில்களில் திருப்பதியில் நடப்பதைப் போலவே உற்ஸவங்கள் நடக்கிறது. அந்த வகையில் கட்டப்பட்டதுதான் இக்கோயில். இங்கு வளாகத்தில் வெங்கடேஸ்வரர், பத்மாவதி தாயார், கோதாவரி தாயார், கருடாழ்வாருக்கு சன்னதி உள்ளன. புரட்டாசி பிரம்மோற்ஸவம், வைகுண்ட ஏகாதசியும் சிறப்பாக நடக்கிறது. டில்லியில் இருந்து 16 கி.மீநேரம்: காலை 6:00 - 10:00 மணி மாலை 5:00 - 9:00 மணி தொடர்புக்கு: 91774 14313, 011 - 2374 5248அருகிலுள்ள தலம்: குருசேத்திரா நகர் திருப்பதி 180 கி.மீ.,நேரம்: காலை 6:00 - 10:00 மணி மாலை 5:00 - 9:00 மணி