உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை

 இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை

சென்னை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில், நேற்று முன்தினம் மட்டும், 12 பேருக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதுடன், அதில் மூன்று வயது குழந்தை அநியாயமாக உயிரிழந்துள்ளது. முதல்வரே, உங்கள் ஆட்சியில் சராசரியாக, 2 மணி நேரத்திற்கு, ஒரு பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு. தினசரி பல சினிமா பிரபலங்களை சந்திக்கும் நீங்கள், உங்கள் ஆட்சியில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை, இதுவரை நேரில் சென்று சந்திக்காதது ஏன்; முதல்வரான பின்னும், நடிகர் மனநிலையிலேயே தொடரும் உங்கள் பந்தாவிற்கு, எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம், எதற்கு பலியாக வேண்டும். உங்களை நம்பி ஓட்டளித்த பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாவிட்டால், பதவி விலகுங்கள். - நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை