உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டாசு கடைகள் அமைக்க ஆன்லைனில் விண்ணப்பம்

பட்டாசு கடைகள் அமைக்க ஆன்லைனில் விண்ணப்பம்

சென்னை:'தீபாவளி பண்டிகையை ஒட்டி, தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க, ஆன்லைன் வழியே, 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.அரசு வெளியிட்ட அறிக்கை:தீபாவளி பண்டிகையை ஒட்டி அனைத்து மாவட்டங்களிலும், தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோர், அனைத்து இ - சேவை மையங்கள் வழியாகவும், https://www.tnesevai.tn.gov.inஎன்ற இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் நடைமுறை, சென்னை காவல் துறையின் மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, ஆவடி மற்றும் தாம்பரம் மண்டலங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது.விண்ணப்பம் ஏற்கப்பட்டு, தற்காலிக உரிம ஆணை வழங்கப்பட்டால், அதை மனுதாரர் இணையதளம் வழியே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ