உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினம் தினம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே கேள்வி: திருமாவின் இன்றைய குறி விஜய்!

தினம் தினம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே கேள்வி: திருமாவின் இன்றைய குறி விஜய்!

சென்னை: தினம், தினம் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே கேள்வி கேட்கும் வழக்கம் உள்ள திருமாவளவன் இன்று (செப் 24), ''வெறுப்பு அரசியல் செய்கிறார் விஜய். அவர் பேசுவது திமுக எதிர்ப்பு அரசியல், மக்களிடம் எடுபடாது'' என தெரிவித்துள்ளார்.இது குறித்து நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: ஜிஎஸ்டி மூலம் பெரும் பாதிப்பு அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டது என்பதை நாம் அறிவோம். காலம் தாழ்ந்த முடிவாக பிரதமர் மோடியின் முடிவு உள்ளது. இதனால் பெரிய பலன் எளிய மக்களுக்கு கிட்டவில்லை என்றாலும் கூட இந்த முடிவை விடுதலை சிறுத்தை கட்சி வரவேற்கிறது. பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு என்றாலே இதுபோல கட்டுப்பாடுகள் இருக்கும் தான். திமுக எதிர்ப்புவிஜய்க்கு தான் அவையாவும் புதிதாக இருக்கிறது. எங்களுக்கு 35 வருடங்களாக பழகிவிட்டது. எந்த மாநாடு நடத்தினாலும், பேரணி நடத்தினாலும் ஆளுங்கட்சி கூட்டணியாக இருந்தாலும் எங்களும் தரும் நிபந்தனைகள் தான் அவருக்கும் அளிக்கப்படுவதாக நான் நம்புகிறேன். அவருக்கு அரசோ, போலீசாரோ நெருக்கடி தருவதாக எனக்கு தெரியவில்லை.சுதந்திரமாக பயணிக்கிறார். அவர் சுதந்திரமாக பேசுகிறார். திமுக எதிர்ப்பு என்பதை விட திமுக வெறுப்பை அவர் அரசியலாக பேசி கொண்டு இருக்கிறார். வெறுப்பு அரசியல்எதிர்ப்பு என்பது வேறு, வெறுப்பு என்பது வேறு. அவர் தான் என்ன செய்ய போகிறோம். தான் செய்யப்போவது என்ன என்பதை விட, திமுக அரசுக்கு எதிரான கருத்துக்களை வெறுப்பு அரசியலாக முன் வைக்கிறார் விஜய். வெறுப்பு அரசியல் பெரிதும் மக்கள் மத்தியில் எடுபடாது. ஆகவே அவருடைய செயல் திட்டங்கள் குறித்து என்ன பேசுவார் என்று மக்கள் மத்தியில் இருக்கிறது. அதற்கு அவர் தீனி போடுவதாக தெரியவில்லை.மக்கள் செல்வாக்குஅதிமுக மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு உடைய கட்சி என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அது ஒரு திராவிட இயக்கம். ஈவெரா, அண்ணாதுரை கொள்கைகளை உள்வாங்கி கொண்டு மக்களுக்கு பணியாற்றி இயக்கம். இன்றைக்கு சங்கப் பரிவாரின் கட்டுப்பாட்டிற்கு போய் விடுமோ என்ற ஐயத்தை எழுப்பும் வகையில் அதிமுக தலைவர்களின் போக்கு இருக்கிறது என்பது எல்லோருக்கும் கவலை அளிக்க கூடிய ஒன்று தான். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Madras Madra
செப் 25, 2025 12:45

திராவிடத்தை பிடித்து தொங்குவதை விட்டு காலத்துக்கு ஏற்ற மாதிரி சிந்திக்க கற்று கொள்ளுங்கள் திருமா


joe
செப் 24, 2025 19:59

மீடியா பக்கமே வராதே .


joe
செப் 24, 2025 19:58

இன்று சின்ன பசங்கெல்லாம் அரசியலில் இறங்கிட்டாங்க, நீங்கெல்லாம் ஓரங்கட்டுங்க.இல்லையென்றால் உம்மை பதம் பார்த்து விடுவார்கள் உம் யோக்கியதை தெரிந்துதான் உமக்கு நிறைய பேர் ஆப்பு வைக்க காத்திருக்கிறார்கள். போதுமா? இன்னும் வேணுமா? உமது யோக்கியதை உமது முகத்திலேயே வழிகிறது .துடைத்துக்கோங்க.


Balamurugan
செப் 24, 2025 19:48

ஆம்பளையா இருந்தா ஆளும் கட்சியின் குறைகளை பேசுங்க பாப்போம்.


Anand
செப் 24, 2025 19:41

அண்ணாமலை என்ன மோடியவா கேள்வி கேட்பார்?


பேசும் தமிழன்
செப் 24, 2025 19:36

நீங்கள் செய்வதும் பிஜெபி எதிர்ப்பு அரசியல் அல்ல... வெறுப்பு அரசியல் தான்.... தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்கிறேன் பேர்வழி என்று கட்சி ஆரம்பித்து.... தனக்கு மட்டும் பதவி பெற்று.... வாங்கும் காசுக்கு மேலே கூவி கொண்டு இருப்பது ஏன்..... ஆமாம் நீங்கள் கூட்டணியில் இருக்கும் திமுகவை விட அதிமுக மேல் பாசம் எதற்கு..... அறிவாலயத்தில் சீட் பங்கீடு செய்யும் போது முட்டிக் கொண்டால்.... எம்ஜியார் மாளிகையில் போய் அடைக்கலமாகி விடலாம் என்ற எண்ணத்தில் தான் அப்படி பேசி கொண்டு இருக்கிறீர்களா ???


Venkatesan Ramasamay
செப் 24, 2025 18:04

இந்தோ ...இந்தோ ... வந்துட்டான்ல ... அரசியல் கோமாளி.. பிளாஸ்டிக் chair வளவன் ... பிரியாணி வளவன்.


Mr Krish Tamilnadu
செப் 24, 2025 17:53

எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அதனது அரசியல் பயணத்திற்கு முட்டுக்கட்டையாக உள்ளது ஆளும் கட்சி தான். அதுவே அரசியல் எதிரி. அவர்களை விட நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். இந்த இந்த பிரச்சினை இன்னும் தீர்க்கப்பட வில்லை என மக்களிடம் கூறுவது தவறா?. தமிழக மக்களை எல்லா விதத்திலும் உயர்த்த வேண்டும் என்ற கட்சி கொள்கைக்கு முட்டுக்கட்டையாக செயல்படும் மத்திய அரசு கொள்கை எதிரி. நீங்களும் தான் அன்பு அரசியலாக போதை இல்லா தமிழகத்திற்கு ஆசைப்படுகிறீர்கள். பரிசோதனை முயற்சியாக போதை இல்லா நகரங்களை கூட உருவாக்க வில்லை, உங்களை வெறுக்காத அரசியல் கூட்டணி கட்சி.


Sivaram
செப் 24, 2025 17:52

ப்ளூ சட்டை கருப்பு எண்ணம் எப்பொழுதும் தமிழ் மக்களை பற்றி கவலை படுவது போல் அறிக்கை முதுகெலும்பு என்றால் என்ன


Haja Kuthubdeen
செப் 24, 2025 17:47

பொத்திக்கிட்டு போ குருமா...பெரீய்ய அரசியல் சாணக்கியர் போல எதிர் கட்சிகளுக்கெல்லாம் புத்திமதி சொல்லிக்கிட்டு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை