உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சியில் துவங்கியது ஆப்பரேஷன் அகழி: நில அபகரிப்பு கும்பலின் வீடுகளில் சல்லடை

திருச்சியில் துவங்கியது ஆப்பரேஷன் அகழி: நில அபகரிப்பு கும்பலின் வீடுகளில் சல்லடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர பகுதியிலும், அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்திலும் ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து செய்வோர் பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.இந்த சம்பவங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, மாவட்ட எஸ்.பி., வருண்குமார், புதுக்கோட்டை எஸ்.பி., வந்திதா பாண்டே ஆகியோர் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 25 தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசாரை கொண்டு, திருச்சி மாவட்டத்தில், 'ஆப்பரேஷன் அகழி' என்ற பெயரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. முதல்கட்டமாக தனிப்படை போலீசார், பப்லு, கொட்டப்பட்டு ஜெய், பட்டரை சுரேஷ், டேவிட் சகாயராஜ் உள்ளிட்ட 14 பேரின் விபரங்களை சேகரித்தனர்.தொடர்ந்து, 19ம் தேதி மாலை முதல், ஆப்பரேஷன் அகழி என்ற அதிரடி சோதனையை துவக்கினர். பட்டியலில் உள்ளவர்களின் வீடு, அவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

கந்து வட்டி

அன்று இரவு வரை நடைபெற்ற சோதனையில், அவர்களுக்கு தொடர்பு இல்லாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள 258 நிலம் மற்றும் சொத்து ஆவணங்கள், 68 வங்கி கணக்கு புத்தகங்கள், 75 புரோ நோட்டுகள், 82 நிரப்பப்படாத காசோலைகள், 18 மொபைல் போன்கள், 84 சிம் கார்டு மற்றும் பிற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.இதில், மைக்கேல் சுரேஷ் என்பவர் வீட்டில், 66 அசல் பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. அவை, சட்ட விரோதமாக கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி தொழில் மூலமாக மிரட்டி பெறப்பட்டவை என்பது தெரிய வந்தது.ஆப்பரேஷன் அகழி சோதனையில், நில விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட எடமலைப்பட்டிபுதுாரைச் சேர்ந்த சந்திரமவுலி என்பவரது வீட்டை சோதனை செய்த போது, அவர் தப்பி ஓடினார். இந்த ஆப்பரேஷனை தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், 825 போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நா.த.க., நிர்வாகி

நேற்று முன்தினம், வாத்தலை போலீஸ் ஸ்டேஷன் பகுதியில், முக்கொம்பு, நடுகரை எல்லீஸ் சோதனை சாவடியில், அதிவேகமாக வந்த காரை போலீசார் நிறுத்தினர். அப்போது, எல்லீஸ் பூங்கா சுவரில் காரை மோதி, காரில் இருந்தவர்களில் இருவர் தப்பி ஓடினர்.போலீசார், அந்த காரில் இருந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில், எடமலைப்பட்டிபுதுாரைச் சேர்ந்த சந்திரமவுலி என தெரிய வந்தது.காரை சோதனை செய்த போலீசார், அரிவாள், இரும்பு வாள், கம்பி போன்ற ஆயுதங்களை கைப்பற்றினர்.நாம் தமிழர் கட்சியில் சந்திரமவுலி மாவட்ட பொறுப்பில் இருந்தவர். போலீஸ் சரித்திர பதிவேடு குற்றவாளி. அவரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் இருவரை தேடி வருகின்றனர்.திருச்சி எஸ்.பி., வருண்குமார் கூறுகையில், ''ஆப்பரேஷன் அகழி சோதனைக்காக மூன்று பட்டியல் தயார் செய்யப்பட்டது. முதல் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே தற்போது சோதனை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் இரண்டு பட்டியலில் உள்ளவர்கள், அடுத்ததாக சோதனை செய்யப்படுவர்.''இந்த தேடுதல் வேட்டையில், நில அபகரிப்பு தொடர்பாக அதிகமான தகவல் பெறப்பட்டுள்ளது. நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Vetrivel Arumugam
செப் 22, 2024 16:44

2019 ல் திருச்சி நில அபகரிப்பு பிரிவில் நாங்கள் கொடுத்த வழக்கே 5 வருடங்கள் ஆகியும் இன்றும் நிலுவையில் உள்ளது.முதலில் பழைய வழக்குகளை முடித்து வையுங்கள் பிறகு புது வழக்குகலை பார்க்கலாம்.


Raama Subramanian (Ramani)
செப் 22, 2024 12:51

முதலில் வருவாய் துறை நபர்களை ரைட் செய்தாலே பல விஷயங்கள் வெளிச்சத்தில் வரும்.


Kanns
செப் 22, 2024 09:46

Arrest-Prosecute-Punish All such Criminals in All Places Only vHigh-Interest MoneyLenders Must be Acted. Sack & Punish Police Never Acting Against Ruling Party Criminal/Goondas.


RAMAKRISHNAN NATESAN
செப் 22, 2024 08:24

நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும், என்றார். 2011 இல் ஜெ இதுபோன்ற வழக்குகளை தூசு தட்டியதால் திமுகவே கலகலத்தது ......


raja
செப் 22, 2024 08:03

அண்ணே.. திருச்சி அறிவில்லா ஆலயம் மிரட்டி கட்டபஞ்ச்சாயத்து பண்ணிதான் கட்டபட்டதுண்ணு திருச்சி மக்கள் சொல்றாங்க அத எப்போ மீட்பீங்க... அந்த கட்ட பஞ்சாயத்து தலைவரை எப்போ கைது செய்வீங்க...


ஆரூர் ரங்
செப் 22, 2024 09:32

சென்னை ஆலயத்தை ஒட்டியிருந்த தனியார் பெட்ரோல் பங்க் என்னவானது என்பது விடியல் ஆட்களுக்கே தெரியும். உரிமையாளர் கண்ணீர் விட்டு அழுத கதை பலருக்குத் தெரியாது.


RAMAKRISHNAN NATESAN
செப் 22, 2024 06:07

அதானே ...... அவங்க எப்படி டீம்காவுக்கு போட்டியா கிளம்பலாம் ???? .........


RAMAKRISHNAN NATESAN
செப் 22, 2024 06:00

\\ ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து செய்வோர் பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. //// அதானே ...... அவங்க எப்படி டீம்காவுக்கு போட்டியா கிளம்பலாம் ????


Kasimani Baskaran
செப் 22, 2024 05:56

நான் ஏதோ பழைய மாணவர் கூட்டத்திலுள்ளவர்களை பழிவாங்க ஆரம்பித்து விட்டார்களோ என்று நினைத்து விட்டேன். லட்சுமிகளை வைத்து மடக்காமல் சைமனை புது கன்னோட்டத்தில் அணுகுவது சிறப்பு.


ராமகிருஷ்ணன்
செப் 22, 2024 05:08

நேரு, மகேஷ் இவர்களிடம் கேட்டு தானே செய்கின்றீர்கள். இல்லை அவர்களுக்கு கமிஷன் தராதவர்களிடமா சோதனை நடக்குது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை