உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆபரேஷன் சிந்துார் ஒரு திருப்பு முனை நிகழ்வு: தமிழக கவர்னர் புகழாரம்

ஆபரேஷன் சிந்துார் ஒரு திருப்பு முனை நிகழ்வு: தமிழக கவர்னர் புகழாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஆபரேஷன் சிந்துார்' இந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனை நிகழ்வாக இருந்து வருகிறது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டினார்.பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து 'ஆபரேஷன் சிந்துார்' மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஆயுதப்படை வீரர்களை கவுரவிக்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசினார்.தமிழக கவர்னர் ரவி பேசியதாவது:'இந்திய வரலாற்றில் 'ஆபரேஷன் சிந்தூர்' ஒரு திருப்புமுனை நிகழ்வாக இருந்து வருகிறது. நமது பிரதமர் மோடி, 'இது ஒரு எழுச்சி பெறும் புதிய இந்தியாவின் இடிமுழக்கம் என பாராட்டினார்,இது பல வழிகளிலும், குறிப்பாக பயங்கரவாதத்தை எவ்வாறு எதிர்ப்பது என்பது குறித்து ஒரு திருப்புமுனை இயக்கமாக இருந்தது' என்றார்.அதன்படி,பயங்கரவாத எதிர்ப்பு உத்திகளில், இந்திய ராணுவ திறன் மற்றும் தீர்மானத்தையும், உலகளாவிய பாதுகாப்பு கவலைகளுக்கு எதிரான தயார் நிலையையும் உறுதிப்படுத்தியது.பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் நமது தீர்மானத்தின் அடையாளமாக காணப்பட்டது.பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான துணிச்சலான நடவடிக்கை என்பதால், இது இந்திய பாதுகாப்பு உத்தியில் ஒரு புதிய அத்தியாயம் என்று கருதப்படுகிறது.இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

கொங்கு தமிழன் பிரசாந்த்
ஜூன் 23, 2025 02:17

எந்த முகத்தை வைத்துக்கொண்டு இவர்கள் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி போல் காட்டிக்கிறார்கள். அப்பாவி மக்களை கொன்று குவித்த தீவிரவாதிகளை இன்னும் பிடிக்கவில்லை என்று எல்லோர் மக்களின் மனதிலும் ஆறா வடு போல் உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் ஒரு கண்துடைப்பு நாடகம். அமெரிக்க பாகிஸ்தான் உடன் உள்ளது என்று தெரிந்தவுடன் நிறுத்தப்பட்ட நாடகம்.


ஆரூர் ரங்
ஜூன் 23, 2025 14:35

தா கிருட்டிணன், ராமஜெயம் , சாதிக் பாட்சா கொலையாளிகளை கண்டுபிடித்து விட்டார்களா கொலைகள் நடந்து ஒரு மாமாங்கத்துக்கும் மேல் ஆகுது,


முருகன்
ஜூன் 22, 2025 23:24

இன்று வரை பல அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற பயங்காரவதிகளை கண்டு பிடிக்க முடியவில்லை


Oviya Vijay
ஜூன் 22, 2025 23:12

கவர்னர்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் கூறிய நெத்தியடி தீர்ப்பு கூட இந்திய வரலாற்றில் ஒரு மிகச்சிறப்பான திருப்புமுனை ஏற்படுத்தியிருக்கிற தீர்ப்பு தான்... இப்போதெல்லாம் இந்த மசோதாவுக்கு அனுமதி கொடுத்தார் அந்த மசோதாவுக்கு அனுமதி கொடுத்தார் என்றெல்லாம் கவர்னரைப் பற்றிய நியூஸ் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறதே... இதுவே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கவர்னர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிற கிலி தானே... அதற்காக சுப்ரீம் கோர்ட்டையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்...


vivek
ஜூன் 23, 2025 07:50

பலமுறை கழுவி உத்தியும் மறுபடியும் ......