உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓபிஎஸ் - தினகரன் சந்திப்பு

ஓபிஎஸ் - தினகரன் சந்திப்பு

சென்னை: சென்னையில் நடந்த திருமண விழாவில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உடன் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்து பேசினர்.லோக்சபா தேர்தலில் பாஜ கூட்டணியில் ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். சட்டசபை தேர்தலுக்காக அதிமுக உடன் பாஜ கூட்டணி அமைத்துள்ளது. இதில் இபிஎஸ் ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது எனக்கூறி தினகரன் கூட்டணியில் இருந்து வெளியேறினார். அதேபோல் ஓபிஎஸ்சும் கூட்டணியில் இருந்து வெளியேறினார்.அவர்கள் இருவரும் மீண்டும் கூட்டணிக்கு வர வேண்டும் என அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக பாஜ நிர்வாகிகள் கூறியிருந்தனர்.இந்நிலையில் சென்னையில் நடந்த திருமண விழாவில் ஓபிஎஸ் தினகரன் இருவரும் 10 நிமிடம் சந்தித்து பேசினர். இரு வரும் கைகுலுக்கி கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Vasan
செப் 27, 2025 05:22

தமிழகத்தில் அப்பா ஆட்சி போய் அம்மா ஆட்சி வர வேண்டும் என்பது 60% பேரின் விருப்பம். ஆனால் அந்த 60 ஆனது, 30, 8, 7, 6, 5, 4% என்று சிதறியுள்ளது. எனவே 40% தான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.


ramesh s
செப் 27, 2025 00:32

இனி உலக அரசியலில் என்னவெல்லாம் நடக்க போகிறதோ. டிரம்ப் மற்றும் புதின் கவனமாக இருக்க வேண்டும்.


முக்கிய வீடியோ