உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொடி கம்பங்கள் அகற்றும் உத்தரவு; சுப்ரீம் கோர்ட்டில் இ.கம்யூ., வழக்கு

கொடி கம்பங்கள் அகற்றும் உத்தரவு; சுப்ரீம் கோர்ட்டில் இ.கம்யூ., வழக்கு

தமிழகம் முழுதும், நெடுஞ்சாலைகள் மற்றும் ஊராட்சிக்கு சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் உள்ளிட்டவற்றின் கொடி கம்பங்களை அகற்ற, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு, தமிழக அரசுக்கு நோட்டீசும் அனுப்பியது. இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஏற்கனவே, இதே மாதிரியான வழக்கு, நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன் நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கையும், அந்த அமர்வு முன் பட்டியலிட வேண்டும்' என நீதிபதிகள் தெரிவித்தனர். இதில், ஏதும் சந்தேகம் இருந்தால், தலைமை நீதிபதியிடம் முறையிடலாம் எனவும் நீதிபதிகள் கூறினர். -- டில்லி சிறப்பு நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை