உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 5 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பணிகளை துவங்க உத்தரவு

5 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பணிகளை துவங்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 5 தொகுதி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏற்பாடுகளை செய்ய கலெக்டர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்து உள்ளது.சட்டசபை தேர்தலில் முதல்வர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றார். பிறகு, திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ததால், அத்தொகுதி காலியாக உள்ளது.பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். இதனால், 4 தொகுதிகளும் காலியனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 5 தொகுதிகளிலும் தேர்தல் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இடைத்தேர்தலுக்கான பணிகளை துவக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக திருச்சி, ஈரோடு, செங்கல்பட்டு, திருப்பூர், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடிதம் எழுதி உள்ளார். மேலும், அத்தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ragukkumar T
ஜூன் 10, 2026 19:02

ஒருத்தர் இறந்தால் மட்டுமே தேர்தல் வைக்கணும்னு சட்டம் வரணும், இவங்க சும்மா கட்சி மாறிட்டு, பதவிய ராஜினாமா பண்ணுவாங்க , மறுபடியும் தேர்தல் வைக்கணும் இது வேலைய


தத்வமசி
ஜூன் 10, 2026 18:18

எதுக்கு மீண்டும் தேர்தல். அவசியமே இல்லை. இரண்டாவதாக வந்தவரை வென்றவராக அறிவிக்கவும்.


Chandradas Appavoo
ஜூன் 10, 2026 18:03

இவர்கள் ராஜீனாமா செய்த இடத்தின் கடந்த எலெக்ஷனுக்கான பணத்தை அவர்களீடம் வசூல் செய்ய வேண்டும்


Aam Aathmi (Mango Man)
ஜூன் 10, 2026 17:51

கோர்ட்டில் யாரும் தகுதி நீக்கம் செய்ய வழக்கு தாக்கல் செய்யவில்லையா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை