உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நம் ரத்தம் ஒன்றல்லோ...தேசம் ஒன்றன்றோ

நம் ரத்தம் ஒன்றல்லோ...தேசம் ஒன்றன்றோ

புதுடில்லி: பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு நேசக்கரம் நீட்டும் பி.சி.சி.ஐ.,க்கு எதிர்ப்பு வலுக்கிறது. மனசாட்சியுள்ள 140 கோடி இந்திய மக்களும் பாகிஸ்தான் உடனான போட்டியை புறக்கணிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு 'ஆப்பரேஷன் சிந்துார்' மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது. ரத்தம் சிந்திய நம் உறவுகளை பற்றி கவலைப்படாமல், ஆசிய கோப்பை லீக் போட்டியில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் துபாயில் மோத உள்ளன. நல்ல வருமானம் கிடைக்கும் என்பதால், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) இப்போட்டிக்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இதை தேசப்பற்று கொண்ட இந்திய ரசிகர்கள் எதிர்க்கின்றனர்.

திவேதி கோபம்

இது குறித்து பஹல்காம் தாக்குதலில் கணவரை பறிகொடுத்த ஐஷன்யா திவேதி கூறுகையில்,''இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு பி.சி.சி.ஐ., அனுமதி அளித்திருக்க கூடாது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 26 குடும்பங்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கவில்லை. நமது கிரிக்கெட் வீரர்கள் என்ன செய்கின்றனர்? ஒரு சிலரை தவிர மற்றவர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டுமென குரல் கொடுக்கவில்லை. இவர்களை துப்பாக்கி முனையில் பி.சி.சி.ஐ., விளையாட வைக்க முடியாது. ஒவ்வொரு வீரரும் தங்கள் நாட்டுக்காக நல்ல முடிவை எடுத்திருக்க வேண்டும். இதை செய்ய தவறிவிட்டனர். பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு. இப்போட்டி மூலம் கிடைக்கும் வருமானத்தை மீண்டும் தாக்குதலுக்கு தான் பயன்படுத்தும். இதை ஒளிபரப்பு நிறுவனம், 'ஸ்பான்சர்'கள் புரிந்து கொள்ளாதது புதிராக உள்ளது. இந்த போட்டியை 'டிவி' மூலம் பார்க்காமல், இந்திய ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும்,'' என்றார்.சிவசேனா (யுபிடி) கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில்,''ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக பாயாது என்றனர். இப்போது கிரிக்கெட்டும் ரத்தமும் மட்டும் ஒன்றாக பாயுமா? ஒரே நேரத்தில் போரும் கிரிக்கெட்டும் நடக்குமா? வருமானத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு போட்டியை நடத்துகின்றனர்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

Padmasridharan
செப் 15, 2025 09:38

இவங்க சந்தோசத்த மத்த இந்தியர்களோடு பகிர்ந்துக்கிட்டாங்களா சாமி. துக்கத்த மட்டும் பகிரச்சொல்றாங்க. விளையாட்ட விளையாட்டா பாக்கணும். இந்த நாட்டில அரசதிகாரிகள் லஞ்சம் வாங்கும் பயங்கரவாதிகள் இல்லையா. அது போல அந்த நாட்டு வீரர்கள் நல்ல மனிதர்கள் இல்லையா.. இந்தியப் பொருளாதாரம்தான் முக்கியம், கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்ந்தா என்ன, வாழலன்னா என்ன.. வேலை செஞ்சி வரி கட்றதுதான், அரசுக்கு முக்கியம். .


Tamilan
செப் 14, 2025 21:19

நடிகர்கள் பலவிதம்


ஜெய்ஹிந்த்புரம்
செப் 14, 2025 20:59

ஆப்பரேசன சிந்தூர் ன்னு இன்னும் விளம்பரம் தேடிக் கொள்ள இந்த விவாதத்தை ஜவ்வாக இழுத்தடிப்பார்கள். ஆனால் குசராத்தி பணம் பார்க்க, பெட்டிங்கில் கோடி கோடியாய் கொள்ளை அடிக்க போட்டியை நடத்தியே தீருவார்கள்


ஜெய்ஹிந்த்புரம்
செப் 14, 2025 20:51

பணத்துக்காகவே கிரிக்கெட்டே தெரியாத ஒருத்தனை அந்த அமைப்புக்கு தலையாக போட்டதிலிருந்தே தெரியவேண்டாமா?


ஆரூர் ரங்
செப் 14, 2025 22:20

ராஜிவ் சுக்லா MP கிரிகெட் தெரியாதவர் ன்னு அவருடைய தலைவர் ராகுல் கிட்ட சொல்லிப் பாருங்கள்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 15, 2025 03:52

ரத்தம் சொட்ட சொட்ட ஐபிஎல் மேட்ச் நடத்தலாம், அது தப்பில்லையா ரங்கு ??


Amar Akbar Antony
செப் 14, 2025 19:35

ஆயிரம் சொல்லுங்கள் கிரிக்கெட் என்பது இரசிக்கவேண்டியது தான். ஆனால் கண்டிப்பாக என் கண்ணீர் ஈரம் காயும் முன்னர் என் கண்ணால் காணமுடியாது. கோடிகள் கொடுத்தாலும் அவனுடன் கிரிக்கெட் விளையாடுவதை என் கண்கள் காண என் இதயம் ஏற்றுக்கொள்ளாது. காரணம் என் சகோதரிகளின் செந்தூரை அழித்தவனை ஆதரவு அளித்தவனின் குடும்பமே அழியும்வரை என் இதயம் கணைத்துக்கொண்டிருக்கும்..


Nachiar
செப் 14, 2025 19:20

இந்த கிரிக்கெட் ஒரு காலனித்துவ விளையாட்டு. காலனித்துவ எச்சங்கள். இதை விட கால் பந்து பேஸ் போல் போன்ற விளயாட்டுகளை விளையாடலாம்.


MUTHU
செப் 14, 2025 19:35

உண்மையே. பொதுவாக இந்தியர்கள் மற்ற விளையாட்டுகளில் ஸெல்ப் எடுக்காதவர்கள். நோஞ்சான்கள். மண்ணுள்ளி. அதனை மறைக்க கிரிக்கெட்டில் புலி என்பது போல் பேசுவார்கள்.


என்றும் இந்தியன்
செப் 14, 2025 19:20

கிரிக்கெட் 1960க்கு முன்பு தேசிய உணர்வு கொண்ட விளையாட்டு வீரர்கள் இருந்த ஒரு விளையாட்டு குழுமமாக இருந்தது .இப்போது இருக்கும் இந்திய கிரிக்கெட் விளையாட்டு குழுமம் வெறும் பணம் ஒன்றே குறி கொண்ட தேசிய உணர்வே இல்லாத குழுமமாக உள்ளது


Nachiar
செப் 14, 2025 19:14

முதலில் கிரிக்கெட் விளையாடுபவர்கள் வீரர்கள் அல்ல. விளையாட்டாளர் என்று அல்லது வேறு பொருத்தமான பெயரை கொடுக்கலாம். இந்த விளயாட்டாளர்கள் ஒருமித்த கருத்துடன் பாக்கிகளுடன் விளையாடுவதை எதிர்த்தார்களா? பணம் வென்று நாட்டுப் பற்று தோற்று விட்டது. புறக்கணியுங்கள் கிரிக்கெட்டை .


K V Ramadoss
செப் 14, 2025 17:03

கிரிக்கெட் விளையாடி பணம் குவிக்கும் இவர்களா வீரர்கள் ?


kumarkv
செப் 14, 2025 15:03

இந்த போட்டியில் இந்தியா வளையாடினால் பிஜெபி கடாயமாக தேர்தலில் தொற்றுவிடும்.


சமீபத்திய செய்தி