உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சியில் கொள்முதல் செய்தும் சாலையில் தேங்கி கிடக்கும் நெல்

திருச்சியில் கொள்முதல் செய்தும் சாலையில் தேங்கி கிடக்கும் நெல்

திருச்சி: திருச்சி மாவட்டத்தில், கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுடன், விவசாயிகள் சாலையில் காத்திருக்கின்றனர். திருச்சி மாவட்டத்தில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை, சாக்குகளில் மூட்டையாக கட்டி வைத்துள்ளனர். அவற்றை குடோன்களுக்கும், அரவை ஆலைகளுக்கும் கொண்டு செல்ல லாரிகள் வராததால், நெல் மூட்டைகள் சாலையிலேயே தேங்கி கிடக்கின்றன. கடந்த, மூன்று தினங்களாக, மழை குறைந்து, வெயில் நிலவுவதால், வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிந்துள்ளதால், அறுவடை செய்த நெல்லையும், கொள்முதல் நிலையங்களுக்கு துாக்கி வந்துள்ளனர். உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுடன், கொள்முதல் செய்ய வேண்டிய நெல்லையும் சாலையில் கொட்டி வைத்து, விவசாயிகள் காத்திருக்கின்றனர். விவசாயிகள் கூறுகையில், 'திருச்சியில், இந்த கிராமங்களில் அறுவடை செய்த நெல் மட்டும் 1 கி.மீ., தொலைவுக்கு, 3,000 நெல் மூட்டைகளாகவும், 10,000 மூட்டை நெல் குவியலாகவும் தேங்கி கிடக்கிறது. வெயில் அடிப்பதால், மூட்டையாக கட்டி வைக்கப்பட்ட நெல் மணிகள் அவிந்து போக வாய்ப்பு உள்ளது. மழை பெய்தால், நனைந்து வீணாகி விடும். மூட்டைகளை ஏற்றி செல்ல, குடோனில் இருந்து லாரிகள் வராததால், மூன்று நாட்களாக காத்து கிடக்கிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை