உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாகிஸ்தான் ராணுவம் அடங்கி போகாது: அண்ணாமலை பேச்சு

பாகிஸ்தான் ராணுவம் அடங்கி போகாது: அண்ணாமலை பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' பாகிஸ்தான் பொருளாதாரத்தில் 35 சதவீதத்தை கட்டுப்படுத்தும் அந்நாட்டு ராணுவம் அடங்கி போவார்கள் என நினைக்க முடியாது. நினைக்கவும் கூடாது,'' என அண்ணாமலை கூறியுள்ளார்.'சாணக்யா' யுடியூப் சேனல் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: தாக்குதல் நடந்த நேரத்தில் 15 சதவீத நேரத்தை போலி செய்திகளை எதிர்கொள்ள செலவு செய்தோம் என ராணுவ தளபதி கூறியுள்ளார். சர்வதேச பொய் செய்திகள் பரவின. அதனை உண்மையான நேரத்தில் பதிலளித்தோம்.நிறைய இழப்புகள் ஏற்பட்ட போதும் பாகிஸ்தான் கொண்டாடி வருவது ஆச்சர்யம் அளிக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் செல்லும் இடம் எல்லாம் ராணுவ தளபதியை அழைத்து செல்கிறார். அவரை தள்ளி வைத்தால், புரட்சி ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்றி விடுவார் என பயம் உள்ளது.எதிர்காலத்தில் இரு முனை போரை பார்க்க போகிறோம். ஒரு பக்கம் சீனாவையும், ஒரு பக்கம் பாகிஸ்தானையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் சூழ்நிலை வரப் போகிறது. தவறு நம் மீது கிடையாது. தவறு இரண்டு நாடுகள் மீதும் உள்ளது. நாம் எந்த நாட்டின் எல்லையை அபகரிக்கும் எண்ணம் கிடையாது. ஆனால் இரு நாடுகளும் ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்டவை.சின்ன சின்ன தீவுகளுக்கு கூட சீனா பிரச்னை செய்கிறது. பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் சீனாவுக்கு பிரச்னை இருக்கிறது. எப்போது என தெரியாது. நம் தலைமுறையில் போர் வரலாம். அல்லது அடுத்த தலைமுறையில் போர் வரலாம்.நமது பொருளாதாரம் வலிமையாக இருக்கிறது. இந்த போர் மிகவும் வித்தியாசமான போர். உலகில் 3 அணுசக்தி நாடுகள் உறவினர்களாக கிடையாது. இரண்டு அணுஆயுதம் கொண்ட நாடுகளுக்கு மத்தியில் இந்தியா உள்ளது. இந்தியாவில் பிரதமர் தன்னிச்சையாக செய்ய முடியாது. அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுவது தான் இந்திய ஜனநாயகம். இதனை எப்போதும் மோடி செய்தது கிடையாது.முப்படைகளுக்கு எல்லை தெரியும். கட்சிகளுக்கு எல்லை தெரியும். அரசுக்கு எல்லை தெரியும். இந்த 3 எல்லைகளும் பாகிஸ்தானுக்கு பொருந்தாது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.பஹல்காம் தாக்குதல் நடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் பேசியது பார்த்தால் போன்று அரசியல்வாதி கூட அப்படி பேச மாட்டார். அவர் பேசுவதை பார்த்தால், பாகிஸ்தான் நாடு இருப்பதே இந்தியாவை எதிர்ப்பதற்காக தான் என பேசுவார். இந்தியாவில் முப்படை தளபதிகள் பொறுப்பாக பேசுவார்கள்.பாகிஸ்தான் என்ற முரட்டு குணம் கொண்ட நாட்டுடன் நாம் சண்டை போடுகிறோம். இது கடைசி சண்டை கிடையாது. லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் பழிவாங்க நினைக்கின்றனர். பாகிஸ்தானை பொறுத்தவரை இந்தியா எதிர்த்தால் மட்டும் அந்த நாடு அங்கு இருக்க முடியும். அப்போது தான் ராணுவத்துக்கு மரியாதை. பாகிஸ்தான் ராணுவம் சிமென்ட், இரும்பு கம்பெனி நடத்துகின்றனர். பிஸ்கட், வேபர் உற்பத்தி செய்கின்றனர். 35 சதவீத ஜிடிபியை கட்டுப்படுத்துகின்றனர். இதனால், ராணுவம் அடங்கி போவார்கள் என நினைக்க முடியாது. நினைக்கவும் முடியாது.இந்தியா பொறுப்பான நாடு என உலக நாடுகள் பார்க்கின்றன.. பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்த மட்டுமே விமானப்படைக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவம், ரேடாரை தாக்க கூறவில்லை. 7 ம் தேதி இந்திய ராணுவத்தின் திறமையை உலக நாடுகளுக்கு புரிய வைத்தோம். அன்றைக்கு நடவடிக்கை முடிந்துவிட்டது என தெரிவித்துவிட்டோம்.ஆனால், பாகிஸ்தான் சிவிலியன் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியதுடன் அத்துமீறலில் ஈடுபட துவங்கியது.70 சதவீத வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம். ஆனால், தற்போது, ராணுவத்துக்கு 65 சதவீதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. 2030ல் இதனை 90 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.சமீபத்தில் பாகிஸ்தான் பிட்காயினை அங்கீகரித்து உள்ளது. இதனை பயங்கரவாதம், போதை மருந்துக்கு பாகிஸ்தான் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.பாகிஸ்தானை போரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. உலக நாடுகளுக்கு அனைத்து கட்சியை அனுப்பியதால் என்ன பயன் என கேட்கின்றனர். கொலம்பியாவில் நடந்தது ஒரு வெற்றி தான். அடுத்த பாகிஸ்தான் என்ன செய்ய போகிறது என பார்க்க வேண்டும் நாம் வளர்ச்சியை விரும்பும் நாடு. பாகிஸ்தான் போரை விரும்பும் நாடு. நாமாக சண்டையை விரும்புபவர்கள் கிடையாது.பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். ராணுவ வீரர்கள் விடுமுறையில் திரும்பும்போது சீருடையில் பயணிக்க அனுமதிக்க வேண்டும். இதனை பார்க்கும் குழந்தைகள் மத்தியில் ஆர்வம் வளரும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ramaswamy N
ஜூன் 03, 2025 08:57

இந்த மாதிரி பேசியது நல்லது. பாரா மில்டரி ஸ்போர்ட்ஸ் க்கும் சேர்ந்து இருக்கவேண்டும்.சேர்ந்து சொல்லலாம். அடுத்து வேண்டுகோள். எந்த ரயில் வண்டியில் போனாலும், வந்தாலும் ரிஷர்வேஷன் கிடைப்பதில்லை. ஜெனரல் பெட்டியில் இரண்டு நாள், மூன்று நாள் போக வேண்டிய உள்ளது. எங்களுக்குனு இடம் ஒதுக்கப்பட வேண்டும்.ஒவ்வொரு பெட்டியிலும் எங்களுக்கு முதலில் இருந்தபடியே, ரிஸர்வேஷன் கிடைக்கவில்லை என்றாலும், ரிஸர்வேஷன் பெட்டியில் ஏறி போகலாம் ஏறலாம் சலுகை கொடுத்தாலே போதும். பெரிய யூர்னி பார்மில் போனுமா வீட்டை விட்டு கிளம்பி போகும் போது ரிஸர்வேஷன் கிடைக்காமல் வெயிட்டிங் லிஸ்ட்டில் ஜெனரல் பெட்டியில் பயனம் செய்ய வேண்டிய உள்ளது. அதை எங்களுக்கு காப்பாத்தினாலே போதும்.


Shanmuga Sundaram
ஜூன் 02, 2025 21:07

முற்றிலும் வரவேற்க தக்கது.


அப்பாவி
ஜூன் 02, 2025 13:31

இவரை பதவியில் இருந்து நீக்கிய பின் குழப்பம்ல உண்டாக்குறார்.


தர்பூஸ் வலைதேவன்
ஜூன் 01, 2025 23:10

பாகிஸ்தானிய ராணுவம் மற்றும் தளபதி பற்றி இவர் கூறிய விஷயங்கள் முற்றும் உண்மையானவை. இந்தியா வரும் காலங்களில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


பர்வேஷ் பலதேவன்
ஜூன் 01, 2025 23:05

எந்த ஒரு விஷயத்தைச் சொன்னாலும் எத்தனை புள்ளி விவரங்களோடு சொல்லுகிறார்? என்னமாய் ஒரு விஷய ஞானம். இது போன்ற ஒரு தலைவரை தோற்கடித்து ஊழல் வாதிகளுக்கு வாய்ப்பளித்தது தமிழகத்தின் மோசமான தலையெழுத்து.


kannan
ஜூன் 01, 2025 22:47

அண்ணாமலை எனும் தேசியவாதியின் சேவை நமது தமிழகத்திற்கு நிறைய தேவை இந்த திராவிட கூட்டத்தால் தமிழகம் வெட்கி தலை குனிய வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.


துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 01, 2025 22:15

யாரை நீங்க தற்குறி என்கிறிரோ அவரே உங்கள பதவில இருந்து இறக்கி விட்டார் , ஒருத்தர் சிறையில் இருந்தே உங்கள்ள 130000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கிறார் அவர்கள் தான் ஆளுமை உள்ள தலைவர்கள் , நீங்களும் வெற்றி பெறவில்லை உங்க கட்சியும் வெற்றி பெற வில்லை , இதில் தம்பட்டம் வேறு கருமம்


சர்வேஷ் மகாதேவன்
ஜூன் 01, 2025 22:39

அண்ணாமலை போன்ற தலைவரின் தோல்விக்கு வருத்தப்படாமல் சிறை சென்ற குற்றவாளிக்கு ஆதரவாக வந்திருக்கும் இந்த பதிவு தான் உண்மையிலேயே கர்மம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளையே தலைவர்களாக ஏற்று பழக்கப்பட்டது நமக்கு வாய்த்த வெட்கக்கேடான விஷயம். அப்படியே ஒதுங்கினாலும் தீயவர் ஒழிந்து நாட்டுக்கு நல்லது நடக்க அவர் செய்த தியாகமாக எடுத்துக் கொள்ளலாமே. ஊழல்வாதிகளை பொதுவெளியில் வக்காலத்து வாங்கி பதிவிடுவது நம்நாட்டிற்கே உரிய சாபக்கேடு.


சர்வேஷ் மகாதேவன்
ஜூன் 01, 2025 22:42

அண்ணாமலை தமிழகத்தின் பொக்கிஷம். வருங்கால பிரதமர். மக்களை காசு கொடுத்து அடிமை ஆக்கி, வாக்கு வாங்கும் போலி அரசியல்வாதிகளிடமிருந்து இந்த மாதிரி தான் பதிவு வரும். வாழ்க அண்ணாமலை.


Murugesan
ஜூன் 01, 2025 21:55

தமிழக திமுக அதிமுக திராவிட அரசியல்வாதிகள் மற்றும் அல்லக்கை அடிமை அயோக்கியர்களுக்கு அண்ணாமலை பெயரைக்கூட கூட உச்சரிக்க அருகதையற்றவர்கள், தமிழக மக்களே வருங்கால சந்ததிகள் தமிழகத்தில் வளமுடன் வாழ, அண்ணாமலைக்கு ஆதரவாக இருங்கள், அதிமுக திமுக திராவிட காங்கிரஸ்காரர்ங்கள் தமிழகத்தை சீரழித்த நயவஞ்சக கொள்ளைக்கார கொலைகார திருடர்கள்


துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 01, 2025 22:12

இவரே பாவ யாத்திரை சென்று மணல் கல் குவாரி இடம் மாமூல் வாங்கி பல்லாயிர கோடி சேர்த்து விட்ட உத்தமர் , அப்போ இவருக்கு முன்னரே இந்தியா என்ன தருதலைய இருந்ததா


துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 01, 2025 22:17

சாரி வாய்ப்பில்லை ராஜ கொள்ளிக்கட்ட எடுத்து தலையை சொரிந்து கொள்ள நாங்கள் தயார் இல்லை


முக்கிய வீடியோ