உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வயிற்றெரிச்சலில் புலம்பிகிட்டே இருக்கிறார் பழனிசாமி; முதல்வர் ஸ்டாலின் தாக்கு

வயிற்றெரிச்சலில் புலம்பிகிட்டே இருக்கிறார் பழனிசாமி; முதல்வர் ஸ்டாலின் தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: வயிற்றெரிச்சல் காரணமாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி புலம்பிகிட்டே இருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.ஈரோட்டில் 50,088 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியை, கேரளா மக்களும் பாராட்டுகின்றனர். அத்திக்கடவு, அவினாசி திட்டத்தின் மூலம் ஈரோட்டில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது. ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் மறைவு எனக்குள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவு ஈரோடு மக்களுக்கு மட்டுமல்ல. தமிழகத்திற்கே இழப்பு. வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டுவிட்டு அதை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் முந்தைய அ.தி.மு.க., அரசு மாதிரி இல்லை இந்த அரசு.

தொடர் வெற்றி

சொன்னதை செய்வோம் என்று செய்துக்காட்டிய கருணாநிதி வழியில் நடைபெறும் உங்கள் ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு இது. ஏரளாமான திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறோம். ஈரோடு மாநகராட்சி அந்தியூர், கோபி, முடக்குறிச்சியில் உள்ள சாலைகள் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும். சென்னிமலை உள்ளிட்ட 50 கிராமங்களில் ரூ.15 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்டப்படும். தொடர் திட்டங்களை தந்து கொண்டு இருப்பதால், மக்கள் எங்களுக்கு தொடர் வெற்றியை தந்து கொண்டு இருக்கிறார்கள்.

பொய் சொல்லாதீங்க

கடந்த கால ஆட்சியாளர்கள், அதாவது இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் அவர்களால் தி.மு.க.,வின் வெற்றியை தாங்கி கொள்ள முடியவில்லை. தி.மு.க., அரசு தொடர்ந்து திட்டங்களை அறிவிக்கிறது சொன்ன படி திட்டங்களை நிறைவேற்றுகிறது. அவர்களுக்கு மக்கள் ஆதரவு தொடர்ந்து கிடைக்கிறது என வயிற்றெரிச்சல் காரணமாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி புலம்பிகிட்டே இருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் ஆளுங்கட்சியை விமர்சிக்கலாம் தவறு கிடையாது. நியாமான புகார்களை சொல்லலாம். தி.மு.க., ஆட்சி மீது குற்றம்சாட்ட ஏதும் கிடைக்காமல் பொய் சொல்லக் கூடாது.

பொய் குற்றச்சாட்டு

பழனிசாமி என்ற தனிநபராக அவர் பொய் சொல்லவில்லை. எதிர்க்கட்சி தலைவராக சொல்கிறார். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. மத்திய அரசு நிதிக்காக காத்து இருக்காமல் மாநில அரசே எல்லாம் செய்து கொண்டு இருக்கிறோம். இதனை பழனிசாமியால் பொறுத்து கொள்ள முடியாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லி கொண்டு இருக்கிறார். முன்னெச்சரிக்கை இல்லாமல் சாத்தனூர் அணையை திறந்து விட்டார்கள் என்று பொய்யை பரப்பினார். அதிமுக ஆட்சியில் இருந்த போது நிலைமை என்ன?

செந்தில் காமெடி

செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டு 200 அப்பாவி மக்கள் உயரிழந்தனர். இதை எல்லாம் மக்கள் மறந்து விட்டார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் நினைக்கிறாரா? செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டு செயற்கைப் பேரிடரை ஏற்படுத்தியது அதிமுக. டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, செந்தில் கவுண்டமணி காமெடி போல, சொன்னதை திரும்ப திரும்ப சட்டசபையில் பழனிசாமி சொன்னார். நான் உறுதியோடு எழுந்து நான் முதல்வராக இருக்கும் வரை அனுமதிக்க மாட்டோம் என தெளிவாக சொன்னேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

AMLA ASOKAN
டிச 20, 2024 23:56

வரும் 2026 தேர்தலில் எதிர்கட்சியாகவாவது வர முடியுமா என கவலை படுவது நலம் . வயிற்று எரிச்சலால் பலனில்லை .


T.sthivinayagam
டிச 20, 2024 21:34

அவர் பிரச்சினை அவருக்கு


visu
டிச 20, 2024 20:38

EPS பரவாயில்லை admk ஆட்சில இருந்த காலம் முழுதும் நீங்க இதைவிட அதிகமா புலம்பினீங்க...


சுராகோ
டிச 20, 2024 20:32

இங்கு மக்கள் தான் வயிறெரிகிறார்கள்


நிக்கோல்தாம்சன்
டிச 20, 2024 20:04

இன்றில் இருந்து உங்களுக்கு தூக்கம் வராது என்றே நினைக்கிறேன்


Sundaran
டிச 20, 2024 18:09

நீதிமன்ற வாசலில் கொலை ,காவலர்கள் கஞ்சா பிசினஸ் ,ஆசிரியர் கற்பழிக்கிறார் 16 கோடியில் கட்டிய பாலம் மூன்று மாதத்தில் இடிந்து விழுகிறது என்ற லக்ஷணத்தில் ஆட்சி நடக்குறது எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ...


Anand
டிச 20, 2024 17:41

சரி சரி ஜெலுசில் குடி.


என்றும் இந்தியன்
டிச 20, 2024 16:59

மக்கள் எங்களுக்கு மாக்களுக்கு அல்ல உனது பதவி அவமானமாக இருக்கின்றது


V வைகுண்டேஸ்வரன்
டிச 20, 2024 16:45

அதிமுக மட்டுமல்ல, எந்த கட்சிக்குமே தமிழ்நாட்டில் ஆளும் திமுக விற்கு எதிராகப் பேச எதுவும் இல்லை. கல்வி, விளையாட்டு, போக்குவரத்து, மின்சாரம், தொழில் முன்னேற்றம், மருத்துவ வசதிகள், மக்கள் நலத் திட்டங்கள் என்று எல்லா விஷயங்களிலும் சிறப்பான நிர்வாகம், வளர்ச்சி, முன்னேற்றம் நடந்து கொண்டிருப்பதால் எதிர்க்கட்சிகளால் எதுவும் பேச முடியவில்லை என்பது தான் உண்மை. அதிமுக வின் வாக்கு வங்கி 2021 ஆம் ஆண்டை விட 2024 ல் குறைந்து விட்டது. கட்சியை பலப்படுத்த பொதுக்குழு கூட்டாமல் திமுக எதிர்ப்பு தீர்மானக் குழு நடத்தி, தன்னையே முதல்வர் ஆக்கணும் என்று தானே தீர்மானம் போட்டுக்கிட்டு கலைந்து விட்டார்கள். அந்த குழுவில், கூட்டணி, புதிய தவெக வை அதிமுக எப்படி பார்க்கிறது, பாஜக வின் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் பற்றிய விமர்சனம் எதுவும் இல்லாமல் ஒரு பொதுக் குழு மீட்டிங் போட்டார்.


ஓவிய vijay. Mumbai
டிச 20, 2024 19:09

வை குண்டர் உம்மை நெனைச்சா பாவமா இருக்கு. நீர் காலம் காலமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளுக்கு அடிமை சாசனம் எழுதி வைத்து மூட்டு குடு...ம்


சுராகோ
டிச 20, 2024 20:33

செம காமெடி


Barakat Ali
டிச 20, 2024 15:25

கவுண்டமணி-செந்தில் காமெடி என்று இவரே சொல்லிவிட்டார் ..... பேசாமே கவுண்டமணியை முதல்வராகவும், செந்திலை எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆகியிருக்கலாம் ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை