உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பழனிசாமிக்கு கண்ணியம் தேவை

 பழனிசாமிக்கு கண்ணியம் தேவை

கடந்த ஆட்சியில் போலீஸ் மற்றும் உளவுத்துறையை கையில் வைத்திருந்த அப்போதைய முதல்வர் பழனிசாமி, துாத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி 'டிவி'யை பார்த்து தான் தெரிந்து கொண்டதாக கூறினார். அப்படிப்பட்டவருக்கு தி.மு.க., ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று கூற தகுதியில்லை. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் நடந்ததெல்லாம் அ.தி.மு.க., ஆட்சியில் தானே? முதல்வர் மற்றும் துணை முதல்வர் குறித்து, பழனிசாமி தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவதை வன்மையாக கண்டி க்கிறோம். அரசியலில் கண்ணியத்தை பழனிசாமி கடைப்பிடிக்க வேண்டும். தலைவர்கள் பற்றி தரக் குறைவாக பேசுவதும், அவதுாறு பரப்புவதும் ஜனநாயகவாதிக்கு அழகல்ல. - செல்வப்பெருந்தகை தலைவர், தமிழக காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !