உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மண்டியிட்டு பா.ஜ.,வுடன் பழனிசாமி கூட்டணி : ஸ்டாலின்

மண்டியிட்டு பா.ஜ.,வுடன் பழனிசாமி கூட்டணி : ஸ்டாலின்

சென்னை: 'உண்மையான அ.தி.மு.க., தொண்டர்களே மனம் புழுங்குகிற வகையில், அடிப்படை கொள்கைகள் ஏதுமற்ற அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, டில்லி வரை சென்று மண்டியிட்டு, பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க., தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

அரசு பணிகளுக்கு இடையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம், கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறேன். இதுவரை, 39 சட்டசபை தொகுதிகளின் நிர்வாகிகளை சந்தித்துள்ளேன். தி.மு.க.,வின் நான்காண்டு கால ஆட்சியில், தினமும் மாநில உரிமைகளுக்கான போராட்டம் தான். முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், 'நீட்' தேர்வு, உதய் மின் திட்டம், சொத்து வரி உள்ளிட்ட மத்திய அரசின் வஞ்சக திட்டங்களுக்கு, அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததால், தமிழகம் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் நலன் மீது, கொஞ்சமும் அக்கறையில்லாத அ.தி.மு.க., தமிழகத்தை வஞ்சிக்கும் பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்து, தமிழர்களுக்கு மிகப் பெரும் துரோகத்தை இழைத்து வருகிறது. உண்மையான அ.தி.மு.க., தொண்டர்களே, மனம் புழுங்குகிற வகையில், அடிப்படை கொள்கைகள் ஏதுமற்ற பழனிசாமி, டில்லி வரை சென்று மண்டியிட்டு, பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். சேராத இடந்தன்னில் சேர்ந்து, தீராத பழி சுமந்தபடி, ஊர் ஊராக பயணித்து, பொய்களை பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். தமிழை காக்கவும், தமிழகத்தின் உரிமைகளை மீட்கவும், கருணாநிதி வழியில் உறுதியுடனும், தெளிவுடனும், தி.மு.க., தன் போராட்டத்தை முன்னெடுக்கும். ஆக., 7ல் கருணாநிதி நினைவு நாளில், அவரது நினைவிடம் நோக்கி நடக்கும் அமைதிப் பேரணியில் வணக்கம் செலுத்துவோம். இவ்வா று முதல்வர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ