உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளைஞர்கள் எதிர்காலம் அழிப்பு; அரசு மீது பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

இளைஞர்கள் எதிர்காலம் அழிப்பு; அரசு மீது பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அ.தி.மு.க., ஆட்சியில் நிறுவப்பட்ட, தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம், தற்போது மூடுவிழா கண்டுள்ளது. இதன் வாயிலாக, அரசு வேலை வேண்டி காத்திருக்கும் இளைஞர்கள் எதிர்காலத்தை அழிக்கும் பணியை, தி.மு.க., அரசு மேற்கொண்டு வருவது கண்டனத்திற்குரியது' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழக வனத் துறையின் கீழ் உள்ள வனவர், வனக்காப்பாளர் உள்ளிட்ட பதவிகளில், காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், 2012ம் ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியி-ன்போது, 'தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம்' உருவாக்கப்பட்டது.ஆனால், தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் வாயிலாக, எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. மாறாக, வனக் காப்பாளர் உள்ளிட்ட, 1,161 பணியிடங்கள், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ், நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு ஜன., 30ம் தேதி வெளியானது. இதற்கான தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியான நிலையில், தற்போது வரை பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளன.இதன் வாயிலாக, அ.தி.மு.க., ஆட்சியில் நிறுவப்பட்ட, இக்குழுமத்திற்கு மூடு விழா நடத்த, தி.மு.க., முடிவெடுத்திருப்பது உறுதியாகி உள்ளது. இதன் வாயிலாக, அழிக்கும் பணியை, தி.மு.க. அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனால் அரசு பணி வேண்டி காத்திருக்கும் இளைஞர்கள் எதிர்காலம் அழிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

pmsamy
மார் 20, 2025 07:04

மிஸ்டர் பன்னீர்செல்வம் உங்களுக்கு பேசக்கூட தெரியுமா


Padmasridharan
மார் 20, 2025 04:34

எப்ப குடிக்கடைகள் திறந்து வெச்சாங்களோ அப்பவே பழக்குடிகளி்ல் இளைஞர்களின் வாழ்க்கை அழிந்துவிட்டது பலக்காவலர்களும் அப்பா மாதிரி தங்கள் கையிலே சட்டத்தை ஒழுங்கா செய்யாமல் சாதகமாக உபயோகிக்கின்றனர்


Kasimani Baskaran
மார் 20, 2025 04:04

கள்ளச்சாராயத்தையும் டாஸ்மாக்கில் கலந்து விற்பதால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் உயிர்வாழ்வார்கள். திராவிடம் என்பது குடிகாரர்களுக்கு விஷம் கொடுத்து கொல்லும் ஒரு அமைப்பு. மகா கொடூரமானவர்கள்...


தமிழன்
மார் 20, 2025 02:03

மச்சி சேவல் பல யுகங்கள் கழித்து கூவுதூடா


சமீபத்திய செய்தி