உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனிக்கட்சி துவக்குவது குறித்து பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை

தனிக்கட்சி துவக்குவது குறித்து பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தனிக்கட்சி துவக்குவது குறித்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன், இன்று ஆலோசிக்க உள்ளார்.அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை துவக்கி, தனி அணியாக செயல்பட்டு வருகிறார். தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து, அவர் தொடர்ந்த வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.பயனில்லைஅ.தி.மு.க.,வில் எவ்வித நிபந்தனையுமின்றி, தனது ஆதரவாளர்களுடன் இணைய தயாராக இருந்தும், அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ள முடியாது என பழனிசாமி கூறி விட்டார். நீதிமன்ற வழக்கில் எப்போது தீர்ப்பு வரும் என தெரியவில்லை.தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் எட்டு மாதங்களே உள்ளன. இதுவரை பா.ஜ., கூட்டணியில் இருந்த நிலையில், தற்போது அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஏற்பட்டதால், தங்கள் நிலை என்ன என்பது தெரியாத நிலை, பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பன்னீர்செல்வத்தை, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.அப்போது, இனியும் அமைதியாக இருந்தால், அரசியலில் காணாமல் போய் விடுவோம். பா.ஜ.,வை மட்டும் நம்பி பயனில்லை. கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்காமல், தனிக் கட்சியை துவக்குங்கள். தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் உரிய 'சீட்' ஒதுக்கினால், அக்கூட்டணியில் இணைந்து போட்டியிடுவோம்.இல்லையெனில், அ.ம.மு.க.,வை இணைத்துக் கொண்டு, விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்து, பழனிசாமியை தோற்கடிப்போம். எதுவாக இருந்தாலும், விரைவில் முடிவெடுங்கள் என, பன்னீர்செல்வத்திடம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது, எப்போது முடிவெடுக்கப்படும் என்பதற்கான காலவரம்பை, வரும் 21ம் தேதிக்குள் தெரிவிக்கும்படி, தேர்தல் கமிஷனுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தேர்தல் கமிஷன் முடிவு அறிந்து, அடுத்த கட்ட முடிவெடுக்கலாம் என, சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். உறுதிமூத்த நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டுக் கொண்ட பன்னீர்செல்வம், உரிய முடிவு எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, தனிக்கட்சி துவக்குவது குறித்து அனைத்து நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிய, பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். இதற்காக தனது அணியின் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் ஆலோசனைக் கூட்டத்தை, இன்று கூட்டியுள்ளார்.சென்னை, வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள, ஒய்.எம்.சி.ஏ., திருமண மண்டபத்தில் இன்று காலை 10:00 மணிக்கு, ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஜூலை 14, 2025 12:41

ததாஸ்து.


அழகு / ALAGU
ஜூலை 14, 2025 09:41

இருக்கிறதை.... விட்டுவிட்டு பறக்கிறதை பிடிக்க ஆசை


V RAMASWAMY
ஜூலை 14, 2025 07:37

Oh, one more in the gutter of politics, OMG.


RAAJ68
ஜூலை 14, 2025 06:31

ஆளாளுக்கு ஒரு கட்சி ஆரம்பிங்க நீங்க ஆரம்பிப்பீங்க அன்புமணி ஆரம்பிக்கிறாரு ஒருத்தருக்கு கூட டெபாசிட் கிடைக்காது. என்ன பல ஆயிரம் கோடிகள் கொள்ளை அடிச்சு வச்சிருக்கீங்க இல்ல அது இந்த வழியில் செலவு செய்யுங்க. வாஷியம் கிட்ட கொடுத்த பணம் என்ன ஆச்சு திரும்பி வந்ததா 400 கோடிகள் அம்பேல் தானா.


Appan
ஜூலை 14, 2025 05:40

இவர் ஆட்சிக்கு இவரின் நிழலும் சேராது .அரசியல் என்றால் என்ன என்றுதெரியுமா ?