உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026 தேர்தலில் தி.மு.க.,வை மக்கள் ஒதுக்கித் தள்ளுவார்கள்; விஜய் உறுதி

2026 தேர்தலில் தி.மு.க.,வை மக்கள் ஒதுக்கித் தள்ளுவார்கள்; விஜய் உறுதி

சென்னை: 'தி.மு.க.,வை 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவார்கள்' என நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்கள், நபர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. பின்னர், கணக்கில் வராத பணம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=708mjk40&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஊழல் இலக்கியம்

இந்த முறைகேடு பற்றி விளக்கும்போது, நன்கு திட்டமிடப்பட்ட கணக்கில் வராத பணம் ஈட்டுதல் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான பணம் பெறுதல், டிஸ்டில்லரீஸ் கம்பெனிகளுக்கும் பாட்டில் கம்பெனிகளுக்கும் இடையில் இருந்த மிகப் பெரிய கூட்டு இருந்துள்ளது. அமலாக்கத் துறை, டாஸ்மாக்கில் நடந்துள்ள கணக்கில் வராத பணமோசடி குறித்துப் பயன்படுத்தி உள்ள வார்த்தைகளைப் பார்த்தால், வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதும் அளவிற்கு இருக்கிறது.

மதுவிற்கு அடிமை

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதைப் பெருமையாகப் பறைசாற்றும் இதே அரசுதான் மக்கள் நலனைக் கெடுத்து, மதுவிற்கு அடிமையாக்கும் மது விற்பனையையும் செய்கிறது. அதே மதுவை வைத்துத் தான் முறைகேடும் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. எவ்வகையிலும் இதுபோன்ற முறைகேடுகளை ஏற்கவே இயலாது எனப் பொதுமக்களே கோபத்தில் கொந்தளிக்கத் தொடங்கி உள்ளனர்.

நியாயமான விசாரணை

ஊழலில், காட்டாற்றையே உருவாக்க வல்லவர்கள் என்பதே தி.மு.க.வின் ஆட்சி அதிகார வரலாறு. அமலாக்கத் துறை தற்போது கையில் அள்ளி இருப்பது ஆயிரம் கோடி ரூபாய் என்ற கையளவு நீரே. இன்னும் தீவிரமாக ஆழ்ந்து ஆராய்ந்தால், இந்த டாஸ்மாக் முறைகேட்டில் மட்டுமே சிறுமீன்கள் முதல் திமிங்கிலங்கள் வரை சிக்கும் என்றே தெரிகிறது. ஆகவே, இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை முறையான, நியாயமான விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

ஊழல் வித்தைகள்

விசாரணை நியாயமாக நடக்குமா என்பது மேலே இருக்கும் மறைமுக முதலாளிகளுக்கும் இங்கிருக்கும் அவர்களின் உறவுக்காரர்களுக்கும் மட்டுமே வெளிச்சம். இந்த வேளையில், இன்னொன்றையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். இதுபோன்ற முறைகேடுகள் மூலம் ஈட்டப்பட்ட பணம்தான் 200 தொகுதிகளை வெல்வோம் என்ற இறுமாப்புச் சூளுரையின் பின்னணியாக இருக்கும் போல. ஆனால், எத்தனைக் கோடிகளைக் கொட்டினாலும், இனி இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் ஊழல் வித்தைகள் செல்லாது. இவர்களை 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவார்கள் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Oviya Vijay
மார் 17, 2025 08:30

கொஞ்சமாவது திருந்துங்கயா...


Shivam
மார் 16, 2025 21:11

ஏப்பா விசய், இது என்ன அடுத்த படம் டயலாக்கா? ட்ரெய்லர் உட்ருக்கியா


Mr Krish Tamilnadu
மார் 16, 2025 20:27

திராவிட கட்சிகள் கட்டுக்கோப்பான, செயல்திறன் மிக்க தலைவர்களை உடைய கட்சி என்ற மாயையை மக்கள் மனதில் உடைத்து எறிய வேண்டும். பாகுபலி ஸ்டைலில் - எது கட்டுகோப்பு? சட்டசபைகளில் வேட்டி உருவி அடித்து கொள்வதா? ரிச்சர்ட் களில் எம்.எல்.ஏ. களை சிறை வைப்பதா? இல்லை மாநகராட்சி மாமன்றங்களில் மை உடைத்து கை கலப்பில் ஈடுபடுவதா?. இதோ? வந்து விட்டார், வந்து விட்டார் என ஊர் மக்களை ஒரு நாள் முழுக்க ஏமாற்றுவது தான் செயல் திறனா?. தியாக தலைவர்கள் மறைந்து, ஊழல் தலைவர்கள் நிறைந்ததால் தமிழகத்தை மீட்டெடுத்து புது சகாப்தம் படைப்போம். - என அரசியலின் அரிச்சுவடியையே மாற்றினால் மட்டுமே உண்டு. புது அத்தியாயம்.


HoneyBee
மார் 16, 2025 20:11

நீயும் திராவிட மாடல் ஆட்சியும் ஒழிய வேண்டியதுதான்... என் தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன சொரியான் கூட்டம் ஒழிக்க வேண்டியது தானே


M Ramachandran
மார் 16, 2025 19:46

இப்போதும் ஜோசப் விஜய் பாதி தீ மு க்கா காரன் தான. தீ மு க்கா காரா தலைகள் செய்யும். ஓட்டுக்காக குல்லா போட்டு கஞ்சி குடிப்பது ,மத்திய அரசை எதிர்ப்பது சர்ச்சில் கிறிஸ்துவ மகனாக ஓதுவது எல்லாமென தி மு க்கா ஆதியிலிருந்து செய்யும் தகிடு தித்தம் அதையெ பின் பற்றுவதில் வித்தகியாசம் ஏது? சும்மா அண்ணாமலை வெளியிடும் தகல்களை மேடைய்ய பேச்சாக்கி ஊழல் தீ மு க்கா வை அகற்ற வேண்டும் என்று கோக்ஷம் வேலைக்காகது. மக்களுக்கு ஆட்சிக்கு வந்தால் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்றும் கூரவேண்டும். சும்மா வெத்து வேட்டு சினிமா மாடல் தற்கால அரசிலுக்கு உதவாது.


Sampath Kumar
மார் 16, 2025 17:03

உன்னையும் சேர்த்துதான் அணில் குஞ்சு வந்து சேரனுக பாரு யோர்தான் ஆட்டுக்குட்டி


venugopal s
மார் 16, 2025 16:10

ஊருக்கு எல்லாம் பலன் சொல்லுமாம் பல்லி அது துள்ளி விழுமாம் கழுநீர்ப் பானைக்குள் என்பது போல் ஆகப் போகிறார் விஜய்!


vadivelu
மார் 17, 2025 02:51

உண்மை. தி மு க வின் எதிரான வாக்குகளில் 10 விழுக்காடு விஜய் எடுத்து கொள்வார். விஜய் இல்லையென்றால் அந்த பத்தும் எடப்பாடி பக்கம் செல்லும், அதுவே தி மு க வை ஒதுக்கி விடும். அதற்காகவே விஜய் இறக்க பட்டு இருக்கிறார். தி மு க வெற்றி முபை காட்டிலும் 8-10 % வாக்குகளை இழந்தாலும் வெற்றி பெரும். விஜய் கமல் கட்சி போல ஆகி விடுவார்.


கோபாலன்
மார் 16, 2025 15:41

திமுகவை பிடிக்காதவர்கள் குறிப்பாக இளைஞர்கள் சோசப் விஜய்க்கு ஓட்டு போட்டு மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போடாமல் இருந்தால் திமுகவின் வெற்றி உறுதியாகும். இது திராவிட திட்டம். ஆஹா... சூப்பர் திட்டம்...


Balasubramanian
மார் 16, 2025 14:37

இதை சொல்லவும் வேண்டுமா? அங்கிருந்து பிரசாந்த் கிஷோர் உங்கள் பக்கம் வந்து விட்டாரே! உங்கள் வசம் விசுவாசமாக இருக்கிறாரா என்று கவனியுங்கள்! ஏனெனில் 2025 இல் வரும் தமிழ் வருடம் விசுவா வசம் எனப்படும்! தேர்தல் நடைபெற இருக்கும் 2026 இல் தமிழ் வருடத்தின் பெயர் பராபவம் என்பது! தோல்வி அவமானம் என்று பொருள்! இது எல்லாம் சௌமிய ஆண்டு பிறந்து சௌமியன் என்ற பேனா பெயரில் எழுதிய அறிஞர் அண்ணாவிறகு தெரிந்து இருக்கலாம்! உங்களுக்கோ தமிழ் புத்தாண்டு மற்றும் ₹ ஐ ரூ என்று வெற்று விளம்பரத்திற்காக மாற்றிய நிதி வம்சத்தினருக்கு தெரிய வாய்ப்பில்லை! ஆகவே 2026 உங்கள் இருவருக்கும் பராபவம் நிச்சயம்!


BHARATH
மார் 16, 2025 14:12

இப்படித்தான் மையம்னும் சொன்னிச்சு. இப்போ அவனுங்களோட. உனக்கு எப்போ ராஜ்ய சபா சீட் ???


சமீபத்திய செய்தி