உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி; விதி மீறி வழங்கியதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி; விதி மீறி வழங்கியதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய அரசின் அங்கீகாரமான 'ராம் சார்' அறிவிக்கையில் இடம் பெற்றுள்ள பெரும்பாக்கம், பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் கட்டடம் கட்ட, 'பிரிகேட்' என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விதிகளை மீறி சுற்றுச்சூழல் மற்றும் கட்டட அனுமதி வழங்கியுள்ளதாக, அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறியதாவது: நீர்நிலைகள், சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்காக, 'ராம்சார்' ஒப்பந்தப்படி, சர்வதேச அளவிலான அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அதன்படி, சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின், 3,080 ஏக்கர் நிலபரப்பு ராம்சார் தளமாக, 2022 ஏப்., 8ல் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு, ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள், கட்டடங்கள் உள்ளிட்ட எவ்வித நிரந்தர அமைப்புகளை ஏற்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியை, சூழலியல் ரீதியாக பாதுகாக்க வேண்டியது கட்டாயமாகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்நிலையில், இங்கு, 15 ஏக்கர் நிலத்தில், 2,000 கோடி ரூபாய் மதிப்பில், 1,250 வீடுகள் அடங்கிய 'பிரிகேட் மார்கன் ஹைட்ஸ்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்ட, 'பிரிகேட்' நிறுவனம், 2022 ஜூலையில் சுற்றுச்சூழல் அனுமதி கோரியது.இந்த விண்ணப்பம், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் வல்லுநர் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில், நிலத்தின் அமைவிடம் குறித்து பிரிகேட் நிறுவனம் தவறான தகவல்களை அளித்துள்ளது. இதன் பின், 2024, ஜனவரியில், தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்று, இத்திட்டம் தொடர்பாக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது.'உலக முதலீட்டாளர் மாநாட்டு ஒப்பந்த திட்டம்' என்ற அடைமொழியுடன் இத்திட்டம் தொடர்பான கோப்புகளுக்கு வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள், விதிகளை மீறி ஒப்புதல் அளித்துள்ளனர். இதன் அடிப்படையிலான ஆய்வின்போது வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் உண்மை நிலைக்கு மாறாக, தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.தவறான கருத்துகள் குறிப்பாக, ராம்சார் தள வரைபடத்தின் அடிப்படையில் பார்க்காமல், பள்ளிக்கரணை சதுப்பு நில எல்லை என்ற பெயரில் அதிகாரிகள் இந்நிறுவனத்துக்கு சாதகமாக, தவறான கருத்துகளை கோப்புகளில் பதிவிட்டுள்ளனர். இதன் அடிப்படையில், இந்த ஆண்டு ஜன., 20ல், பிரிகேட் நிறுவன திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மூன்று நாட்களில் அதாவது, ஜன., 23ல் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., இத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை, ராம்சார் அங்கீகாரத்துடன் மேம்படுத்துகிறோம் என, முதல்வர் அறிவித்து வருகிறார். அவர் முன்னிலையிலேயே சதுப்பு நிலத்தை அழித்து கட்டடம் கட்டும் திட்டத்துக்கு, அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்கிறது.இதில் நடந்துள்ள முறைகேடுகளை விசாரித்து, சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி, 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இத்திட்டத்தில், 100 கோடி ரூபாய்க்கு மேல் அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து முதல்வர், தலைமை செயலர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Balamurugan Kandasamy
அக் 25, 2025 13:14

அதிகாரிகளுக்கு 100 கோடி என்றால் அரசியல்வாதிகளுக்கு 1000 கோடி


RAMESH KUMAR R V
அக் 24, 2025 18:54

பணம் பத்தும் செய்யும்


G Mahalingam
அக் 24, 2025 18:52

ஒரு வீடு வாங்கினால் இரண்டு நீச்சல் குளங்கள் இலவசமாக கிடைக்கும்.


lana
அக் 24, 2025 17:37

தமிழன் என்று ஒரு இனமுண்டு. அது என்னவென்றால் ஆற்றில் மண் எடுத்து பக்கத்துல உள்ள மாநிலம் க்கு விற்பது. மலை ஐ வெட்டி விற்பது. காசுக்கு பக்கத்துல போய் செம்மறம் வெட்டுவது. பக்கத்து மாநில மருத்துவ கழிவுகள் ஐ காசு வாங்கி இங்க கொட்ட அனுமதிப்பது. யானை வழித்தடம் அழித்து செங்கல் சூளை வைப்பது. எவன் செத்தாலும் பிழைத்தாலும் எனக்கு காசு வரும் வேலை செய்வது. பிறகு குவாட்டார் கோழி பிரியாணி க்கு ஓட்டு போட்டு விட்டு புலம்ப வேண்டியது


V Venkatachalam, Chennai-87
அக் 24, 2025 14:26

இந்த புகாரில் ரொம்ப ஹை லைட் விஷயம் சி எம் டி ஏ 3 தினங்களில் அனுமதி வழங்கியது தான். ஒரு தனிமனிதன் அப்ரூவல் கேட்டால் ஆறு மாதங்கள் வரை அது கிடைப்பதில்லை. அப்புறமும் அது எட்டாக்கனியாகவே இருக்கும் கறக்க வேண்டியதை கறந்து கொண்டுதான் அப்ரூவல் கிடைக்கும்.இன்னொரு ஹை லைட் ஜி சதுரம் மட்டுமே எந்த அன்பளிப்பும் வழங்காமல் அப்ரூவல் வாங்கி விடும். அது மட்டுமல்ல ஒரு மாதத்தில் அந்த இடத்தில் தான் ரோடு போட்டு தெரு லைட் போட்டு ஒரு ப்ளீச் குட்டி டவுன் வந்திடும். ஜி சதுரத்துக்கு உள்ள அபாரமான சமத்து நமக்கெல்லாம் என்னான்னே தெரியாது.


திகழ்ஓவியன்
அக் 24, 2025 14:26

சதுப்பு நிலம் என்று தெரிந்து ஏன் வாங்கணும் எப்படி சதுப்பு நிலம் என்று வங்கிக்கு தெரியாத, ஏன் லோன் சாங்க்ஷன் ஆகுது, யாரும் மொத்தமா கொடுத்து வாங்குவதில்லை , இது வேண்டும் என்றே வேலை அற்றவனின் வீண் புரளி


V Venkatachalam, Chennai-87
அக் 24, 2025 16:29

சபாஷ் அப்புடி போடு அருவாளை.‌வேலை உள்ளவனின் வீண் புரளின்னா ஒத்துக்கலாம். வேலை இல்லாதவனின் வீண் பரளின்னா ஒத்துக்க கூடாது.‌ நீட் ரகசியம் மாதிரி இதுவும் ஒரு ரகசியம். கரீட்டுதான்.


SUBRAMANIAN P
அக் 24, 2025 13:42

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி விற்பதெல்லாம் திமுக. பின் எப்படி இருக்கும். மடமக்களும் சிந்திக்கவேண்டும்.. அடே, இந்த இடம் நீண்டகாலம் வாழ்வதற்கு சாதகமான இடம்தானா? நீர்நிலையா? என்றெல்லாம் தெரிந்து கொள்வதே இல்லை..


திகழ் ஓவியன்
அக் 24, 2025 13:31

நேர்மையை விரும்பாத, தமிழக மக்கள்...போட்டி போட்டு இனத்தை, இடத்தை அழிப்பதை, அவர்களே பார்த்து ரசிப்பது, அபாரம்...


Shekar
அக் 24, 2025 13:12

வெட்டுறதை வெட்டுனா வங்க கடலில் மட்டுமல்ல சென்ட்ரல் ஸ்டேஷன்ல கூட அடுக்குமாடி குடியிருப்பு கட்டகூட அனுமதி கொடுப்போம்


Rathna
அக் 24, 2025 12:34

ஏரிகள் எல்லாம் பிளாட்கள் ஆக மாற்றும் போது, மக்கள் பஸ் வசதிக்கு பதில், படகு வசதி கேட்பது தானே முறை.


புதிய வீடியோ