உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சார் - பதிவாளர் அலுவலகங்களில் கூட்டம் தவிர்க்க அனுமதி அட்டை முறையை அமல்படுத்த திட்டம்

சார் - பதிவாளர் அலுவலகங்களில் கூட்டம் தவிர்க்க அனுமதி அட்டை முறையை அமல்படுத்த திட்டம்

சென்னை: சார் - பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவின் போது, 'டோக்கன்' பெற்றவர்கள் மட்டும் உள்ளே செல்லும் வகையில், அனுமதி அட்டை பயன்படுத்துவதை கட்டாயமாக்க, பதிவுத்துறை முடிவு செய்துள்ளது.

'ஆன்லைன்'

தமிழகத்தில், 582 சார் பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பத்திரப்பதிவுகள் நடைபெறுகின்றன. இதில், பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள் குறித்த விபரங்களை, 'ஆன்லைன்' முறையில் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.அடிப்படை விபரங்கள் சரியாக இருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட பத்திரத்தை பதிவு செய்வதற்கான நேரம் ஒதுக்கப்படும். இதற்கான டோக்கன்கள், 'ஆன்லைன்' முறையில் வழங்கப்படுகின்றன. இதன்படி, டோக்கன் பெற்றவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், சார் - பதிவாளர் அலுவலகத்துக்குள் சென்றால் போதும். சமீபநாட்களாக, டோக்கன் வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாது, வேறு நபர்களும் உள்ளே செல்வதாக புகார்கள் வந்துள்ளன. சமீபத்தில் சில இடங்களில், சார் - பதிவாளர்களை அலுவலகத்திற்குள் புகுந்து வெளியாட்கள் தாக்கியதாகவும் புகார்கள் எழுந்தன. அதனால், பணியிடத்தில் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்று, சார் - பதிவாளர்கள் முறையிட்டனர். இந்நிலையில், பத்திரப்பதிவின் போது, சம்பந்தம் இல்லாத நபர்கள் அலுவலகத்துக்குள் வருவதை முழுமையாக தடை செய்ய, பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் துவங்கிஉள்ளன.

டோக்கன்

இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பத்திரப்பதிவின் போது சம்பந்தம் இல்லாத நபர்களை, அலுவலகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என, ஏற்கனவே உத்தரவிட்டு இருக்கிறோம். இருப்பினும், வெளியார் நுழைவு தொடர்கிறது. இந்நிலையில், சென்னை அடையாறு சார் பதிவாளர் அலுவலகம், மாதிரி அலுவலகமாக சமீபத்தில் மாற்றப்பட்டது. இதில், சொத்து வாங்குவோர் உள்ளே செல்ல, 'அனுமதி அட்டை' வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, சொத்து வாங்குவோர் தங்களுக்கான டோக்கன் விபரங்களை, அலுவலகத்தின் முகப்பில் உள்ள பணியாளரிடம் காட்டினால், அவர் ஒரு கார்டு கொடுப்பார். அதை காட்டினால் மட்டுமே, சார் - பதிவாளர் இருக்கும் இடத்துக்கு செல்வதற்கான கதவு திறக்கும். மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, இதைஅடுத்து, அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களிலும் இதை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில், இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramona
மார் 21, 2025 08:06

அதை போல ,ஸ்டாம்ப் வெண்டார்கள் ,இடைதரகர்களாக , லஞ்ச பணத்தை வசூலிக்கும் அடிக்கும் கொள்ளைக்கு ,ஒன்றும் செய்ய முடியவில்லயே?


சிட்டுக்குருவி
மார் 21, 2025 03:28

தமிழ்நாட்டிலேயே மிகவும் லஞ்சம் கொழிக்கும் கறுப்புப்பணம் உற்பத்தி செய்யும் துறை தான் பதிவுத்துறை.எவ்வளவோ டிஜிட்டல் மயமனாலும் பதிவுத்துறையில் லஞ்சதையும் கருப்புபனதையும் ஒழிக்கும் நடவடிக்கை மட்டும் நடைபெறாது.காரணம் யாவரும் அறிந்ததே.மாநிலத்தின் வருவாயை பெருக்கவெண்டும் என்றால் ,கருப்பு பணம் ஒழிக்கபடவெண்டும் என்றால் அரசு செய்யவேண்டியது, 1பதிவுத்துறை அலுவகங்களில் மக்கள் நேரிடையாக வருவதை மாற்றியமைக்கப்படவேண்டும். இதை எப்படி செய்வது என்று மக்களிடத்திலும்,மற்றும் நீதி துறை,நிதி துறை சார்ந்த உயர் மட்ட அதிகாரிகளிடமும் கருதுகேட்பு நடத்தப்படவேண்டும். ௨நகராட்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்துக்களின் வழிகாட்டு மதிப்புகள் வெளியிடபடக்கூடாது. விற்பனை விலைக்கே பதிவு செய்யவேண்டும்.குறைவான மதிப்பிற்கு பதியபட்டால் அந்த சொத்தை கையகப்படுத்தி அரசு ஏலம் மூலம் விற்பணைசெய்யும் என்ற சட்டமியற்றப்படவேண்டும்.மூன்று அல்லது ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஒவ்வொரு வார்டுகளின் சொத்து பதிவிடபட்ட மதிப்பு விவரம் பத்திரிகைகளின் மூலம் வெளியிடவேண்டும். ௩ பதிவுகட்டனம் இப்போதிருக்கும் அளவிலிருந்து பாதியாககுறைக்கபடவெண்டும்.முழு விற்பனைக்கு பதியபடும்போது அரசுக்கு வருவாய் இரட்டிப்பாக வழிவகுக்கும். அரசு சிந்திக்குமா?


Ramona
மார் 21, 2025 08:15

சரியான கருத்து, கருப்பு பணம் ஊற்றெடுக்கும் இடம், இடைதரகர்கள் வைத்தது தான் ,சட்டம், அவருடைய வாக்கு தஞவ வாக்கு , இங்கே நேரடியாக சாதாரண மனிதர் பத்திரபதிவு செய்யவே .உலகமே அழிந்தாலும் இந்த ஊழல் பதிவு துறைய மாற்ற முடியாது .. இந்திய மக்களுக்களை வேதனையடைய , கருப்பு பண உற்பத்தி தொழிற்ச்சாலை .வேடிக்கை தான் நாம பார்க்க முடியும்