உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தது பிரதமர் மோடிதான்: ராம சீனிவாசன் பேட்டி

விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தது பிரதமர் மோடிதான்: ராம சீனிவாசன் பேட்டி

அவனியாபுரம்: ''டங்ஸ்டன் பிரச்னையில் விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தது பிரதமர் மோடிதான்,'' என, மதுரை விமான நிலையத்தில், தமிழக பா.ஜ., செயலர் ராம சீனிவாசன் தெரிவித்தார்.டங்ஸ்டன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி ராம சீனிவாசனுடன், மேலுார் விவசாயிகள் ஏழு பேர், சில நாட்களுக்கு முன் டில்லி சென்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தனர். அவர்கள் நேற்று மதுரை திரும்பினர். விமான நிலையத்தில் ராம சீனிவாசன் கூறியதாவது:டங்ஸ்டன் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. மத்திய அமைச்சர் வாயிலாக, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு கொடுத்த அனுமதி ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த மாநிலங்களில் கனிம வளங்கள் உள்ளன என்று, நாடு முழுதும் ஜியாலஜிக்கல் நிறுவனம் ஆய்வு செய்கிறது. டங்ஸ்டன் அரிய வகை தாதுப்பொருள். அதை, தற்போது வெளிநாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் இருப்பதால்தான் தமிழக அரசிடம் பேசி, ஏலம்விட தயாரானபோது மாநில அரசு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. விவசாயிகளுடன் கலந்தாலோசித்த பிறகே, பாதிப்புகள் தெரிய வந்தது. மக்கள் தெரிவித்த கருத்துகளை மத்திய அமைச்சர் ஏற்று, விவசாயிகளுக்கு ஆதரவாக பிரதமரிடம் பேசி டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்துள்ளார்.திட்டத்தை ரத்து செய்ய ஒத்துழைப்பு கொடுத்த மத்திய அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடிக்கு நன்றி.தமிழக அரசின் நடவடிக்கையால்தான், மத்திய அரசு பணிந்து இத்திட்டத்தை ரத்து செய்தது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திட்டத்தை ரத்து செய்ய அனைத்து கட்சியினரும் போராடினர். இந்த விஷயத்தை அரசியலாக்க இப்போது விரும்பவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

மோடிக்கு நன்றி

விவசாயிகள் மகாமுனி, ஆனந்த் கூறுகையில், 'மேலுார் பகுதி மக்கள், இருமாதங்களாக கவலையுடன்இருந்தனர். மிகப்பெரிய சவால் இருந்தது. மதுரைக்கு நடைபயணம் மேற்கொண்டோம். போராட்டத்தின் விளைவாக மிகப்பெரிய வெற்றிப்பரிசு கிடைத்திருக்கிறது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை டங்ஸ்டன் திட்டம் வராது என உறுதி அளித்திருந்தார். டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சருக்கும் கிராமத்தின் சார்பில் நன்றி' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

nisar ahmad
ஜன 25, 2025 11:29

ஆம்பா ஆமாம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை கொன்று அவர்களின் கஷ்ட ஜீவனத்திலிருந்து விமோசனம் ஏற்படுத்தி நல்லது செய்துள்ளார்.


baala
ஜன 25, 2025 09:26

பொய் எப்படி வாய் கூசாமல் சொல்ல முடிகிறது. ஒரு படித்த மனிதனால்


Kasimani Baskaran
ஜன 25, 2025 07:49

திராவிடர்கள் திட்டத்துக்கு முதலில் கையெழுத்து போட்டார்கள். பின்னர் போராட்டம் வெடித்தவுடன் பயந்து நிலைப்பாட்டை மாற்றினார்கள். அண்ணாமலையும் மத்திய அரசிடம் பேசினார். அதற்குள் உடன்பிறப்புக்கள் மத்திய அரசு பணித்தது என்று திராவிட உருட்டு மேற்கொள்கிறார்கள். விவசாயத்துக்கு தமிழக அரசு என்ன செய்தது என்று கேட்டால் ஓடிவிடுவார்கள்.


T.sthivinayagam
ஜன 25, 2025 07:47

வேதாந்தா நிறுவனத்துக்கு ஏலம் கொடுத்து பிரதமருக்கு தெரியாதா தூத்துகுடி மக்கள் வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக போராடியது தெரியாதா ஏன் மத்திய இணையமைச்சர் பதவியில் இருப்பவர்க்கு கூட தெரியாதா


venugopal s
ஜன 25, 2025 06:42

அதோ பார், வானத்தில் வெள்ளைக் காக்கா மல்லாக்கப் பறக்கிறது என்று சொல்வது போல் உள்ளது இவர் பேச்சு! இதை நம்புவதற்கு சங்கிகளால் மட்டுமே முடியும்!


veera
ஜன 25, 2025 08:05

இதோ பார் ...இரும்பை கண்டுபுடிசது நாங்கதான்.....கொத்தடிமைகள் ஆரவாரம்


Ramakrishnan, Chennai
ஜன 25, 2025 06:17

Sir, in Dungston issue BJP supported the villagers you say. Ok. But who first issued the orders for Dungston last month first. Congress from central govt ah..? This seems to be a nice idea. Bring a policy and next month cancel it and say bjp supported. Wonderful.


veera
ஜன 25, 2025 08:07

ramkrishnan..you can refer oct 2023 request made by DMK fools for approving tungsten mines...please read...don't be half cooked


Ray
ஜன 25, 2025 05:21

அந்த பகுதி மக்களின் வெகுண்டெழுந்த போராட்டம் முன்பு மெரீனாவில் நடந்த ஜல்லிக் கட்டு போராட்டத்தை நினைவூட்டியது இரண்டு போராட்டங்களுக்கும் மோடி அரசுதான் காரணம் யாருடைய வெற்றியென்பது இருக்கட்டும் யாருடைய தோல்வி என்று சொல்ல வேண்டும் மக்களின் வெற்றி ஜல்லிக்கட்டில் பட்டும் பாடம் கற்காத சனாதனிகளின் சூழ்ச்சி படுதோல்வி


N Sasikumar Yadhav
ஜன 25, 2025 05:50

உங்க எஜமானர்களான கோபாலபுர குடும்பத்தாருக்கு நீங்க கொடுக்கும் கேவலமான முட்டு . ஜல்லிக்கட்டு தடை போட்ட கட்சிகள் ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஷும் தமிழக திருட்டு திமுக கட்சியும்தான் என்பது உங்க சிறுமூளைக்கு எட்டவில்லை என்பது மகா கேவலமானது . எதற்கெடுத்தாலும் சனாதனம் என வந்து கதறவேண்டியது


Ray
ஜன 25, 2025 07:44

தூத்துக்குடியில் துப்பாக்கியை தூக்கி வேதாந்த்தா நிறுவனத்துக்கு முட்டு கொடுக்க முனைந்தவர்கள் மீண்டும் அதே நிறுவனத்துக்காகவே உதவ எண்ணியபோது குறுக்கே நின்ற சட்டமே திருத்தப் பட்டு பகீரத பிரயத்தனம் செய்தது இனாம்தானா? தோஸ்த்துக்கு உதவின மாதிரியும் அதேநேரம் தமிழ்நாட்டு மக்களுக்கு குடைச்சல் கொடுக்கலாம் கலகம் செய்யலாம் என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க எண்ணிய சொரணையற்ற சிறுமதி அறிவிலிகள். தமிழக மக்கள் நன்கு தெரிந்துதான் நாற்பதுக்கு நாற்பது கொடுத்தார்கள் இருபத்தாறிலும் அது தொடரும்


ஆரூர் ரங்
ஜன 25, 2025 11:01

ஜல்லிக்கட்டு lக்கு எதிராக சட்டமியற்றி தடை விதித்தது காங்கி திமுக கூட்டணி அமைச்சர் ஜெயராம்ரமேஷ்.. அதற்கு முன் நீதிமன்றத் தடை விதித்தது கிருஸ்துவ நீதிபதி. தவறான கருத்து போட வேண்டாம் அன்பரே.


நிக்கோல்தாம்சன்
ஜன 25, 2025 04:20

ஸ்டிக்கன் குடும்ப ஊடகங்கள் பகுதியில் பார்த்தல் அவனின் ஸ்டிக்கர் வெளிச்சம் ஆகுமே


புதிய வீடியோ