| ADDED : ஜூன் 15, 2025 01:00 PM
விழுப்புரம்: பா.ம.க., பொதுச்செயலாளராக இருந்த வடிவேல் ராவணன் நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். புதிய பொதுச்செயலாளராக முரளி சங்கரை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.பா.ம.க.,வில் நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே நடந்து வரும் மோதல் உச்சக்கட்டத்திற்கு சென்றுவிட்டது. கட்சி நிர்வாகிகளை மாற்றம் செய்து ராமதாஸ் அறிவித்து வருகிறார். ஏற்கனவே பல்வேறு மாவட்ட கட்சி நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9i53xb8f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இன்று (ஜூன் 15) பா.ம.க., பொதுச்செயலாளராக இருந்த வடிவேல் ராவணன் நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். புதிய பொதுச்செயலாளராக முரளி சங்கரை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். சில நாட்களுக்கு முன், 'எங்கள் கட்சி பொதுச்செயலாளரை காணவில்லை. கண்டுபிடித்து தருபவர்களுக்கு 100 ரூபாய் சன்மானம் வழங்கப்படும்' என்று ராமதாஸ் கூறியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தீர்வு கிடைக்கும்
இது குறித்து பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே. மணி கூறியதாவது: பா.ம.க., நிறுவனர் ராமதாசும், அன்புமணியும் மனம் விட்டு பேசினால் தீர்வு கிடைக்கும். கடந்த ஒருவாரமாக ஏற்பட்டு வரும் நிகழ்வு கவலை அளிப்பதாக உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இருவருக்கும் இடையே உண்டான பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். இதுவே பா.ம.க., தொண்டர்கள் அனைவரது விருப்பம். ராமதாஸ்-அன்புமணி ஆகியோர் இடையே சுமூகத் தீர்வு எட்டுவதற்காக செயல்பட்டு வருகிறோம். தேர்தலில் ஒற்றுமையாக இருந்து, ஒற்றுமையாக செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.