உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க.,வின் நிலை கண்டு மன உளைச்சல்: ஜி.கே. மணி வேதனை

பா.ம.க.,வின் நிலை கண்டு மன உளைச்சல்: ஜி.கே. மணி வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: பா.ம.க.,வின் நிலை கண்டு மனவேதனையிலும் உளைச்சலிலும் இருக்கிறேன் என்று அக்கட்சியின் கவுரவ தலைவர் ஜி. கே. மணி கூறி உள்ளார்.பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அவரின் மகனும், கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் மூண்டுள்ளது. அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன் வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7cvhvp4m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ராமதாசின் குற்றச்சாட்டுகள் ஒரு பக்கம் இருக்கும் நிலையில், கட்சியின் மாவட்ட தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் அன்புமணி இன்று முக்கிய ஆலோசனைக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் இந்த கூட்டத்தில் கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பாமக சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள் ஆகியோர் தைலாபுரத்தில் ராமதாசை சந்திக்க வந்திருந்தனர். அங்கு ஜி. கே. மணியிடம் நிருபர்களிடம் பா.ம.க.,வில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து கேள்விகள் ஏழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது;நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். அதற்கு எனக்கு என்ன சொல்வது என்று ஒன்றும் தெரியவில்லை. மன உளைச்சலாகவும், நெருக்கடியான சூழலாகவும் உள்ளது. பா.ம.க., ஒரு பலமான கட்சி. தனித்தன்மையுடன் இருக்கக்கூடிய கட்சி. கொள்கையோடும், லட்சியத்தோடும் இருக்கும் கட்சி. ஒரு நெருக்கடியான சூழலுக்கு உருவாகி உள்ளதால் வேதனைப்படுகிறோம், கஷ்டப்படுகிறோம். நான் எதுவும் சொல்லக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் திரும்ப திரும்ப கேட்பதால் சொல்ல வேண்டியதாக இருக்கிறேன். இல்லை என்றால் நான் பாட்டுக்கு ஓடியிருப்பேன். இது மறுபடியும் சீராக வேண்டும், மீண்டும் பழைய நிலைக்கு, குடும்ப பாசத்தோடு, வலிமையான கட்சியாக மாறவேண்டும். ஒரு பெரிய மாநாட்டை சந்தித்த கட்சி, தேர்தல் நேரத்தில் மிக வலிமையாக இருக்க வேண்டும். நாங்கள் தீவிரமாக முயற்சி பண்ணுகிறோம். அதற்காக தான் வந்திருக்கிறோம்.மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அதிகமான கேள்விகள் கேட்டு, அதற்கு பதில் சொல்லக்கூடிய நிலைமையில் நான் இல்லை. எதை பற்றி சொல்வது என்று தெரியவில்லை. எங்கள் கட்சியில் உள்ள நெருக்கடியை எங்கள் வாயால் சொல்லக் கூடாது, பேசக்கூடாது. அது நல்லதும் இல்லை. எந்த கேள்விக்கும் பதில் சொல்ல கூடிய நிலையில் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.இதனிடையே ராமதாசும், அன்புமணியும் ஒன்று சேராவிட்டால் தமது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என் று பா.ம.க.,வின் சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள் கூறி இருக்கிறார். அன்புமணி ஆலோசனைக் கூட்டத்துக்கு செல்லாமல் ஜி. கே. மணி போன்று, அருளும் தைலாபுரம் வந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

veeramani
மே 30, 2025 19:20

மகன் அப்பா இடையில் பிரச்சினையை மூட்டிவிட்ட ஒருவர் அப்பாவி போல நடிக்கிறார்.அன்புமணி தலைமையில் இந்த கட்சி செழிக்கவேண்டும்


P. SRINIVASAN
மே 30, 2025 16:37

பாவம் நல்ல மனிதர்..


Bhaskaran
மே 30, 2025 16:36

நீ திமுக கிட்ட பேரம் பேசியது அன்புமணிக்கு பிடிக்கவில்லை ஸ்வீட் பாக்ஸ் பிரச்சனை தான் எல்லாம் நீ நடுவில் எத்தனை பெட்டி ஒதுக்கினியோ அதுவும் அப்பா புள்ளை பிரச்சனை வந்திருக்கும்


panneer selvam
மே 30, 2025 16:28

of course we could understand the feeling of G.K.Mani since he is family servant of Ramdas family .


அப்புசாமி
மே 30, 2025 16:27

அப்பா, மகனை வெளியேத்திட்டு இவரை தலைவராப் போடலாம். அது ரெண்டுக்கும் பதவி வெறி புடிச்சு ஆட்டுது.


Narayanan
மே 30, 2025 16:01

உங்களின் குடும்ப சண்டையில் கட்சியை நாசமாக்கிவிடாதீர்கள் . பின்னர் பணம் பண்ணுவது கடினம் . அதுவும் இது தேர்தல் நேரம் . தேர்தல் வரையாவது ஒற்றுமையின் சிகரமாக இருங்கள் .


RAVINDRAN.G
மே 30, 2025 15:07

பையன் பெருசா பணப்பை பெருசா இது பெரிய ராமதாஸின் குழப்பம் அப்பா பெருசா என் மேல் உள்ள வழக்கு பெருசா இது சின்ன ராமதாஸின் குழப்பம் கட்சி பெருசுன்னு நினைத்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது இவர்கள் எந்த பக்கம் போனாலும் திமுக மற்றும் அதிமுக அவர்களாலேயே தோற்கடிக்கப்படுவார்கள். இவர்கள் வளரக்கூடாது என்பதில் இரண்டு திராவிட கட்சிகளும் கவனமாக இருப்பார்கள்.


jss
மே 30, 2025 14:22

சீக்கிரம் பண மூட்டையை வாங்கி கவொண்டு திமுகவுடன் சேர்ந்து சமூக நீதியை காப்பாற்றுங்கள். பணத்திற்க்கு முன்பு கொள்கையாவது புடலங்காயாவது். என்க்கு ப் புரிந்தவரை தந.தை மகன் இருவருமேஙதிமுக கூட்டணியைத்தான் விரும்புகிறார்கள். எதற்க்காக வாய்வீச்சு வாள்வீச்சு என்று தெரியவில்லை.


Natchimuthu Chithiraisamy
மே 30, 2025 13:51

வியாபாரம் செய்ய கட்சி தேவை இல்லை. வளர்த்தோம், வளர்த்தோம், என்றால் எதற்க்காக வன்னியர்களுக்காகவா? இல்லை குடும்பத்திக்காகவா? பெரியவர், வன்னியர்களுக்காக என்றால், தலைவர் அன்புமணி இருந்திருக்க கூடாது. GK மணி இருந்திருக்க வேண்டும். இனி அதற்காக பாடுபடுகிறார் பெரியவர். என்று வைத்து கொள்ள முடியுமா. அதுவும் இல்லை.


Santhakumar Srinivasalu
மே 30, 2025 13:30

உங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு நிம்மதியா சோலியை பாருங்க. அதான் நல்லது!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை