உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., எம்.எல்.ஏ., அருளின் கட்சி பதவி பறிப்பு; ஓயாத அன்புமணி - ராமதாஸ் மோதல்

பா.ம.க., எம்.எல்.ஏ., அருளின் கட்சி பதவி பறிப்பு; ஓயாத அன்புமணி - ராமதாஸ் மோதல்

சென்னை: பா.ம.க., எம்.எல்.ஏ., அருளை சேலம் மாநகர மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து அக்கட்சியின் செயல் தலைவர் அன்புமணி உத்தரவிட்டுள்ளார்.பா.ம.க.,வில் கடந்த சில நாட்களாக ராமதாஸூக்கும், அன்புமணிக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. கட்சி தலைமை பொறுப்பு தன்னிடம் இருப்பதை வெளிப்படுத்துவதற்காக, அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை ராமதாஸ் நீக்குவதும், ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகளை அன்புமணி நீக்குவதுமாக இருந்து வருகிறது. அண்மையில், தன்னுடைய பலத்தை நிருபிப்பதற்காக, சேலம், தர்மபுரி மாவட்ட கட்சி நிர்வாகிகளின் பொதுக்குழு கூட்டத்தை அன்புமணி நடத்தினார். ஆனால், அந்த சமயம் சேலம் மாநகர மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான அருள், நெஞ்சுவலி காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அவர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனிடையே, மாவட்ட பொறுப்பு வகித்து வந்த எம்.எல்.ஏ., அருளுக்கு, பா.ம.க., மாநில இணை பொதுச்செயலாளர் பதவி வழங்குவதாக அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான ராமதாஸ் இன்று (ஜூன் 25) காலை அறிவிப்பை வெளியிட்டார். மேலும், அருள் உடல்நலம் பெற வேண்டி கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அன்புமணி கூறியதைக் கேட்டு ஆவேசப்பட்ட அவர், நான் என்ன செத்தா போயிட்டேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், பா.ம.க., சேலம் மாநகர மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து எம்.எல்.ஏ., அருளை நீக்கம் செய்து அன்புமணி உத்தரவிட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சரவணன் நியமனம் செய்வதாகவும் அறிவித்துள்ளார். கட்சியின் மாநில இணை பொதுச் செயலாளராக எம்.எல்.ஏ., அருளை ராமதாஸ் இன்று காலை நியமித்த நிலையில், மாலையில் அவரை பதவியில் இருந்து அன்புமணி நீக்கியுள்ளார். இருவரிடையே அதிகார மோதல் தொடர்ந்து வருவது பா.ம.க., கட்சியினரிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸூக்கே அதிகாரம்இதனிடையே, மாநில பொறுப்பை ராமதாஸ் அளித்த நிலையில், என்னை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்று எம்.எல்.ஏ., அருள் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

நிவேதா
ஜூன் 25, 2025 21:22

இரண்டு மாம்பழங்களும் தேவையுள்ள ஆணிகள் தேவையில்லாத ஆணிகள் என தன் கீழ் மட்ட தலைவர்களை பிரிக்கிறார்கள். பெரிய மாம்பழத்துக்கு வயசாயிட்டதால சின்ன மாம்பழத்தை நிலைநிறுத்த சின்ன மாம்பழத்தின் உண்மையான விசுவாசிகள் யார் என தெரிஞ்சுக்க இந்த ஆட்டம். உண்மையில்லாத ஆசாமிகளை பெரிய மாம்பழம் தன் பக்கம் இழுத்து கடைசியில தன பக்கம் வந்த அந்த தேவையில்லாத ஆணிகளை எல்லாம் கச்சியை விட்டு வெளியே தூக்கி போடப்போறார்


S.Balakrishnan
ஜூன் 25, 2025 20:25

எப்படி யெல்லாம் பாடு பட்டு கட்சி ஆரம்பித்த ராமதாஸ், பாடு பட்டு கட்சியை வளர்த்த மகனுடன் கருத்து வேறுபாடு கொண்டு இப்படி வயதான காலத்தில் கட்சியை அழிக்கிறார். வன்னியர் குலத்திற்கு வந்த சோதனை. சந்தி சிரிக்க வைத்து விட்டார். நாறி வீணாகப் போகு முன் உணர்ந்தால் நல்லது.


Anantharaman Srinivasan
ஜூன் 25, 2025 23:44

நாறி வீணாகப் போகும் முன் உணர்ந்தால் நல்லது. நாறிப்போச்சே. மேலும் நாத்தமெடுக்க இன்னுமென்னயிருக்கு..??


ems
ஜூன் 25, 2025 20:25

இசுரேல் ஈரான் போர் முடிவுக்கு வந்தால் கூட இவங்க அக்கப்போர் முடிவுக்கு வராது என்று தெரிகிறது.


Palanisamy Sekar
ஜூன் 25, 2025 20:09

மொகலாய மன்னர் பரம்பரையில் விடுபட்ட நபரை போலவே தெரிகின்றார் ராமதாஸ். வயதான காலத்தில் இப்படி ஒரு குணம் இருப்பது அருவருப்பாக உள்ளது. மகன் மீதான பாசமே இல்லாமல் அவரது சொல்லும் செயலும் இறுதிக்காலத்தில் அவருக்கு இழுக்கை தான் தேடித்தரும். கருணாநிதியை பார்த்தாவது கற்றுக்கொண்டிருக்கலாம் குடும்பம் என்றால் எப்படி அடஜஸ்ட் செய்துகொள்வது என்பதை. ஒன்றை தெளிவாக நாட்டுக்கு செய்தியாக சொல்கின்றார்...குடும்ப காட்சிகளின் யோக்கியதை இவ்வளவுதான் இப்படித்தான் இருக்கும் என்பதை. சாதிக்கட்சிகளை தடை செய்வதுதான் ஆக சிறந்த முடிவாக இருக்கும். ராமதாஸ் போன்றோர் கைகளில் கட்சியே இருத்தல் கூடாது.


Oviya Vijay
ஜூன் 25, 2025 20:06

இச்சமயத்தில் தூள் படத்தில் பரவை முனியம்மா பேசும் காமெடி டயலாக் தான் ஞாபகத்திற்கு வருகிறது... இந்த கருமத்தைத் தான் ராத்திரி பூரா உக்காந்து ஒட்டிக்கிட்டு இருந்தியா என்பது போல் இருக்கும் இந்த பாமக கட்சி மாதிரி அனைத்து ஓட்டை உடைசல் கட்சிகளை எல்லாம் ஒட்ட வைத்துக் கொண்டு மெகா கூட்டணி அமைத்தது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி தமிழக மக்களிடம் சீன் போட ரெடியாக காத்துக்கொண்டுள்ளனர் அதிமுகவும் பிஜேபியும்... அவர்களின் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறப்போகும் நாள் 2026 தேர்தல் முடிவு வரும் நாள்...


கல்யாணராமன்
ஜூன் 25, 2025 19:43

மூன்றாம் நபர் ஒருவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரையும் கட்சியில் இருந்து நீக்கி கட்சிக்கு தேர்தல் ஆணையத்தில் உரிமை கோரி விண்ணப்பிக்க வேண்டும். அப்படி செய்தால் இருவரும் வழிக்கு வருவார்கள்.


maan
ஜூன் 25, 2025 19:36

அருள் வசம் ராமதாஸ் வகையறாக்களின் ஏற்காடு சொத்துக்கள் பினாமி வடிவில் உள்ளன.


RRR
ஜூன் 25, 2025 19:26

இந்த ஜாதி குடும்ப கட்சிக்கு பேசாமல் மூடுவிழா நடத்திவிடலாம்... இவ்வளவு குடும்பச்சண்டைகளை வைத்துக்கொண்டு பாமக இனிமேல் தமிழ்நாட்டில் ஒன்றும் சாதிக்கப் போவதில்லை...


PR Makudeswaran
ஜூன் 25, 2025 19:23

ஒன்று விதைத்தால் அதுதான் விளையும். அன்று ராமதாஸ் விதைத்தார். இன்று அன்புமணி அறுவடை செய்கிறார். கர்மா வினை என்றும் சொல்லலாம். அப்பனும் மகனும் சண்டை போட்டு ஒரு வழியாக கட்சியை ஊத்தி மூடுங்கள்.


sankaranarayanan
ஜூன் 25, 2025 19:22

சாகற காலத்தில் சங்கரா சங்கரா என்று கூறாமல் ஏதேதோ பெயர்களை சொல்லி பெரியவர் புலம்பிக்கொண்டிருக்கிறார் இது இவருக்கு இப்போது தேவையா. பாட்டாளி மக்களை பரிதவிக்க விட்டு விட்டார் இந்த பெரியவர்...