உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உங்களால் தான் மதுரை வெள்ளத்தில் மிதக்குது! தமிழக அரசை விளாசிய ராமதாஸ்

உங்களால் தான் மதுரை வெள்ளத்தில் மிதக்குது! தமிழக அரசை விளாசிய ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மதுரை மாநகரம் வெள்ளத்தில் மிதப்பதற்கு தமிழக அரசின் மோசமான செயல்பாடே காரணம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார்.இது குறித்த எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது: மதுரை மாநகரில் நேற்று பகலில் 10 நிமிடங்களில் 4.5 செ.மீ அளவுக்கும், மொத்தமாக 11 மணி நேரத்தில் 10 செ.மீ அளவுக்கு மழை பெய்த நிலையில், மாநகரத்தின் பெரும்பான்மையான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. பல பகுதிகளில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் தீவாக மாறியிருப்பதால் அங்குள்ள மக்கள் பால் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கூட கிடைக்காமலும், குளங்களாக மாறிவிட்ட வீடுகளை விட்டு வெளியேற முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு அரசின் சார்பிலும், மாநகராட்சி சார்பிலும் இதுவரை உணவு உள்ளிட்ட அடிப்படை உதவிகள் கூட வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது.10 நிமிடங்களில் 4.5 செ.மீ அளவு மழை என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்று தான் என்றாலும் கூட, காலநிலை மாற்றத்தின் விளைவாக இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நடக்கும் என்பதை கணித்து, எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள வசதியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசும், மாநகராட்சியும் மேற்கொண்டிருக்க வேண்டும்.வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து மழை நீரை வைகை ஆற்றுக்கு கொண்டு செல்வதற்கான பந்தல்குடி கால்வாய் உள்ளிட்ட பல கால்வாய்களை அரசும், மாநகராட்சியும் தூர்வாரியிருக்க வேண்டும். ஆனால், தூர்வாரியதாக கணக்கு காட்டப்பட்டாலும் கூட களத்தில் எந்தப் பணியும் நடக்கவில்லை. இதில் தமிழக அரசும், மாநகராட்சியும் படுதோல்வி அடைந்துவிட்டன.அதனால் தான் மழை நீரை வைகைக்கு கொண்டு செல்ல வேண்டிய பந்தல்குடி கால்வாய் குடியிருப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்று விட்டது. ஏற்கனவே பெய்த மழையுடன், கால்வாய்கள் நிரம்பியதால் ஊருக்குள் புகுந்த தண்ணீரும் சேர்ந்து கொண்டதால் தான் மழை - வெள்ள பாதிப்பு மிக அதிகமாகியிருக்கிறது. இவை அனைத்திற்கும் தமிழக அரசும், மதுரை மாநகராட்சியும் தான் பொறுப்பேற்க வேண்டும்.வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்; சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலும் கூட, போதிய நிதி இல்லை என்று கூறி எந்தப் பணியையும் மாநகராட்சி செய்யவில்லை. பருவமழையிலிருந்து மக்களை பாதுகாத்திருக்க வேண்டிய மதுரை மாநகராட்சி, அனைத்து பாதிப்புகளையும் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருக்கிறது. அரசின் செயல்பாடின்மைக்கு இதைவிட மோசமான எடுத்துக்காட்டு இருக்க முடியாது.மதுரையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை அரசும், மாநகராட்சியும் உடனடியாக வழங்கப்பட வேண்டும். மழை நீரை வடியச் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன், எதிர்காலத்தில் இத்தகைய பாதிப்புகளைத் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் வசதியாக மதுரை மாநகராட்சிக்கு போதிய நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்.இவ்வாறு எக்ஸ் வலைதள பதிவில் அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

KSB
அக் 27, 2024 08:59

ம்.பி. வெங்கடேசன் என்ன சொல்கிறார்?


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 26, 2024 21:35

மு க அழகிரியே கோபப்படலை ........ உங்களுக்கென்ன ????


K.n. Dhasarathan
அக் 26, 2024 18:37

மருத்துவர் ஐயா மழைக்காலம் என்றால் மழை வரும், வெயில் காலத்தில் வெயில் வரும், அரசும் மக்களும் எதிர் பார்த்ததுதான், பாதிப்பு உள்ள பகுதிகளில் இரண்டு அமைச்சர்களுடன் வேலை நடந்து கொண்டுதான் உள்ளது, ஆனால் இவ்வளவு பேசும் நீங்கள், உங்கள் கட்சி மதுரைக்கு என்ன செய்தீர்கள்? சும்மா வாய் பேச்சை விட்டு உபயோகமாக ஏதாவது செய்யுங்கள்.


raja
அக் 27, 2024 05:44

அவங்க செய்யனுமுன்னா திருட்டு திமுக எதக்கு ஆட்சியில... ஆட்சி செய்ய தெரியிலன்னா பதவிய விட்டுட்டு ஒடுங்க...


Amar Akbar Antony
அக் 26, 2024 15:34

அண்ணே எங்களுக்கு சென்னை பற்றித்தான் எண்ணம் மற்றவர்கள் இரண்டாயிரம் அல்லது கொலுசு verondrumilai


raja
அக் 26, 2024 15:22

தமிழக நிதி எல்லாத்தையும் தா ஒன்கொள் தெலுங்கு கோவால் புற திருட்டு குடும்பம் கொள்ளை அடித்து துபாயில் ஜப்பானில் ஸ்பெயின் ல் சமீபத்தில் அமெரிக்காவில் முதலீடு செய்திருக் கிறதே...


Indian
அக் 26, 2024 15:49

நீ இவ்வளவு பேசுறியே , நீ சார்ந்திருக்கும் கட்சி , இந்த மழைக்கு மக்களுக்கு ஏதவது உதவி செய்ததா ??


raja
அக் 26, 2024 18:59

அது உதவி செய்யணும் என்றால் நீங்க எதுக்கு, ஆட்சி செய்ய தெரியலைன்னா பதவியை விட்டுட்டு ஓடுங்க...


raja
அக் 26, 2024 15:15

இதுவே செண்ணையா இருந்திருந்தால் படகு மோட்டார் பம்ப் டிராக்டர் எல்லாம் ரெடியா வச்சி இருக்கோம் வெள்ளம் வந்தால் ஒருக்கை பார்போமுண்ணு மாசு அறிக்கை விட்டு இருப்பான்... இது மதுரை மக்கள் ஆச்சே..அனுபவிக்கட்டுமுன்னு விட்டுடானுவோ இந்த திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டம் ..


raja
அக் 26, 2024 15:06

கேடுகெட்ட விடியா ஆட்சியாளர்களுக்கு சென்னை தான் தமிழ்நாடு அங்க உள்ளவனுவோதான் மனுசன்... மத்தவனுவோ எக்கேடு கெட்டாலும் கோவால் புற திராவிட கொள்ளையனுக்கு கவலை இல்லை


Prabakaran J
அக் 26, 2024 14:19

we are focusing only on chennai not madurai. Rain right turn pottu left la ponna nanaga inna panna mudiyum - TN gov voice


Smba
அக் 26, 2024 14:16

வேலைக்காகாது


வைகுண்டேஸ்வரன்
அக் 26, 2024 14:07

இந்த போட்டோ போடாதீங்க, பயமா இருக்கு. மோடி அரசுக்கு பூஜ்யத்துக்கு கீழே மார்க் போட்டு விட்டு, அதே மைனஸ் மார்க் ஆட்சி வரவேண்டும் என்று அதே மோடியை ஆதரிச்ச மானங்கெட்ட பய தானே இவன்? இவன் பேசறதையெல்லாம் இவனோட கட்சிக்காரனே கண்டுக்கிறதில்ல. திமுக வை எதிர்த்து பேசறான் என்பதால் போட்டுடறதா ?


raja
அக் 26, 2024 15:08

கருத்துக்கு கேட்ட கேள்விக்கு பதில் கருத்து தான் போடணும் கவோதி கொததடிமையே...


raja
அக் 26, 2024 15:18

கொத்தடிமையே... இந்த போட்டோவுக்கு பயபடுற நீ ஆந்திர காரணுவோ உன் தலைவன் சின்ன தத்தி போட்டோவ மிதி மிதிண்ணு மிதிச்சதுக்கு நெஞ்சு வலி வந்து இருக்கணும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை