உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பீஹார் தேர்தலில் போட்டியிடுவதாக கூறி மாம்பழம் சின்னம் பெற்ற அன்புமணி: ராமதாஸ் காட்டம்

பீஹார் தேர்தலில் போட்டியிடுவதாக கூறி மாம்பழம் சின்னம் பெற்ற அன்புமணி: ராமதாஸ் காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாக கூறி மாம்பழம் சின்னத்தை அன்புமணி பெற்றிருக்கிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.அவர் அளித்த பேட்டி விவரம்; பொய், பொய்யாக பேசிய அன்புமணியின் வேஷம் கலைந்துவிட்டது. பை, பையாக பொய் சொன்னவர்கள் அய்யோ பொய் சொல்லி விட்டோமோ என்று ஏங்க போகின்றனர். அந்தளவுக்கு வேலை (நடவடிக்கையை குறிப்பிடுகிறார்) நடந்து கொண்டு இருக்கிறது.உண்மையாகவே நான் 46 வருஷம் ஓய்வின்றி உழைத்துக் கொண்டு வருகிறேன். ஆனால் இன்றைக்கு சில கும்பல், பாமக என்று சொல்லிக் கொண்டு போய் வருகின்றனர். அவர்களின் வேஷம் நிச்சயமாக கலைந்து விடும். கலைக்கப்படும்.மாநில செயற்குழுவில் நீங்கள் பார்த்திருப்பீர்கள், கார்கள் மட்டும் 800 கார்கள் வந்திருக்கின்றன. மகளிர் மாநாடு பூம்புகாரில் கட்டுக் கடங்காத கூட்டம். பாமக என்றால் நாங்கள் (அன்புமணியை குறிப்பிடுகிறார்) தான் சொன்னால், சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது. அது ஒரு கும்பல், அந்த கும்பலின் வேஷத்தை கலைச்சிட்டோம். எப்போது கட்சியை விட்டு நீக்கினோமோ, அன்றைக்கே அவர்களின் வேஷம் கலைந்துவிட்டது. தேர்தல் ஆணையத்திடம் அன்புமணி தரப்பு போலியாக ஆவணம் தந்து மாம்பழம் சின்னம் பெற்றுவிட்டனர். அவர்கள் எல்லாம் போலி ஆசாமிகள். அப்போது பீஹாரில் பாமக போட்டியிடுவதாக சொல்கிறார்களே, அங்கு அக்கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டது என்று சொல்கிறார்களே? என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராமதாஸ், தென் கொரியா, ஜப்பான், மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் கூட மாம்பழம் சின்னத்தில் அவர்கள்(அன்புமணி தரப்பு) போட்டியிட போகிறார்கள்.இவ்வாறு ராமதாஸ் பேட்டி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தாமரை மலர்கிறது
செப் 24, 2025 21:24

ஸ்டாலின் பேச்சை கேட்டு, ராமதாஸ் ஆட்டம் போடுகிறார். யாருக்கு சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கும் அமித் ஷாவிற்கும் தெரியும். கட்சி இப்போது அன்புமணியிடம் தான் உள்ளது.


visu
செப் 24, 2025 18:41

வயசான காலத்தில் கட்சியை அடுத்த தலைமுறையிடம் கொடுக்காமல் எனக்கு இல்லாதது யாருக்கும் கிடைக்க கூடாது என்று கட்சியை அழிக்க நினைக்க கூடாது


Venugopal S
செப் 24, 2025 17:58

பீகாரில் உள்ள யாதவ் ஜாதி மக்களை அன்புமணி வன்னியர்களாக்கி விட்டாரோ?


cpv s
செப் 24, 2025 17:26

keludu pudai close your tappa the tn people will know your drama


duruvasar
செப் 24, 2025 16:54

குழாயடி சண்டை. கடைசியில் மருத்துவமனைதான்.


தமிழன்
செப் 24, 2025 16:02

இது போல் ஒவ்வரு இன்றய அரசியல்வாதி வீட்டிலும் நடந்தால் நாடு ஒருப்படும் ஏன் என்றால் இப்போது மந்திரி மகன் மந்திரி எம் ல் எ மகன் எம் ல் எ முதல் மந்திரி மகன் முதல் மந்திரி எங்கு பார்த்தாலும் வாரிசு அரசியல்


J swaminathan
செப் 24, 2025 15:52

ராமதாஸ் ஜி want to handover the party to Anbumani. His own old day rhetoric about dynasty politics troubles him. So this drama. Eventually PMK will be under son s control and Ramdas ji will retire from politics.


J swaminathan
செப் 24, 2025 15:52

ராமதாஸ் ஜி want to handover the party to Anbumani. His own old day rhetoric about dynasty politics troubles him. So this drama. Eventually PMK will be under son s control and Ramdas ji will retire from politics.


தத்வமசி
செப் 24, 2025 15:16

தந்தையும் தனயனும் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை. இதில் இவர்கள் எப்படி கட்சியை காப்பாற்றி, தேர்தலில் வெற்றி பெறுவது ? எல்லாம் நாட்டுக்கு பாரம். ஆயிரம் தான் கூறினாலும் கருணாநிதி நல்ல அரசியல்வாதி. தனக்குப் பிறகு ஸ்டாலின் கையில் கட்சியும் பதவியும் வருமாறு செய்து விட்டுச் சென்றார். இருக்கும் போதே தனக்கும், தனயனுக்கும் கட்சிக்கும் குழி பறிக்கிறார் ராமதாஸ்.


SUBBU,MADURAI
செப் 24, 2025 15:10

பாம்பின் கால் பாம்பறியும் மரம் வெட்டியின் மகனுக்கு தெரியாதா எப்படி முத்தின மரத்தை வேரோடு சாய்ப்பது என்று சின்ன மாங்காயும் பெரிய மாங்காயும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி தமிழக மக்களையும் குறிப்பாக வன்னிய மக்களையும் ஏமாற்றி அவர்களின் தலையில் மிளகாய் அரைத்து கொண்டு இருக்கிறான்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை