உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை நிலவு மாநாடு; அன்புமணி பேட்டி

ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை நிலவு மாநாடு; அன்புமணி பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

செங்கல்பட்டு: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை நிலவு மாநாடு நடைபெறும் என்று அன்புமணி கூறி உள்ளார்.அண்மையில் பா.ம.க., தலைவர் அன்புமணியை கட்சி பதவியில் இருந்து அதன் நிறுவனர் ராமதாஸ் நீக்கினார். அவரின் இந்த நடவடிக்கை கட்சிக்குள் பெரும் சலசலப்பை உருவாக்கியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jdoyqqws&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கட்சியின் பொருளாளர் திலகபாமா,அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்து ராமதாசுக்கு எதிராக குரல் கொடுத்தார். இதற்கு பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் பதிலடி தர, கட்சிக்குள் மேலும் சலசலப்பு அதிகமானது. அதே நேரத்தில் கட்சியின் தலைவர் நான்தான் என்று அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இருவருக்கும் இடையேயான சலசலப்பு சரியாகிவிட்டது, இது ஒரு சாதாரண விஷயம் என்று கவுரவத் தலைவர் ஜி.கே. மணி விளக்கம் தந்தார்.இந் நிலையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை நிலவு மாநாடு நடைபெறும் என்று அன்புமணி கூறி உள்ளார். மாநாடு நடைபெறும் திருவிடந்தையில் பந்தக்கால் நடும் விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறி உள்ளதாவது; வருகின்ற மே மாதம் 11ம் தேதி மாமல்லபும் வட நெமிலி பகுதியில் திருவிடந்தையில் ராமதாஸ் வழிகாட்டுதலின் பேரில் சித்திரை நிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது.இந்த மாநாடு இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்கள், ஆந்திரா, கர்நாடகாவில் உள்ள பின்தங்கிய சமுதாய மக்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.இவ்வாறு அன்புமணி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

panneer selvam
ஏப் 16, 2025 16:19

Anbu mani ji , why are you harassing your old senile father ? Leave him alone at his house. Morning news report is his hobby . Let be happy with it . You can not bring out your old man from past


S.V.Srinivasan
ஏப் 16, 2025 16:14

நைனாவோட சமரசம் ஆய்டுச்சுங்களா?


Indhuindian
ஏப் 16, 2025 14:11

இது என்ன பாம்புக்கும் கீரிக்கும் சண்டை மாதிரி எப்போதான் அந்த பாம்பையும் கீரியையும் சண்டை போட விடுவீங்க அதுக்குள்ளே 2026 தேர்தல் வந்துடும் அப்புறம் அந்த சண்டை போட வாய்ப்பே இல்லை