உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவன் மீது போலீஸ் தாக்குதலா... விசாரணை...: நெல்லையில் பரபரபரப்பு

மாணவன் மீது போலீஸ் தாக்குதலா... விசாரணை...: நெல்லையில் பரபரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: தூத்துக்குடி, ஆதிச்சநல்லூரை சேர்ந்த மாயாண்டி என்பவரை தேடி நெல்லை வந்த தனிப்படை போலீசார் அவரது மகனை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என தூத்துக்குடி எஸ்.பி., மறுத்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரை சேர்ந்த மாயாண்டி ஒரு வழக்கில் தேடப்படுகிறார்.இன்று அவரைத் தேடி திருநெல்வேலி வந்த தூத்துக்குடி தனிப்படை போலீசார், தனியார் பயிற்சி யில் பிளஸ்டூ பயிலும் அவரது மகன் 17 வயது சிறுவனை லத்தியாக் தாக்கி விசாரணைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டதாக சிறுவன் கூறினார். காயமுற்ற சிறுவன் தப்பி ஓடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் மறுத்துள்ளார். சிறுவனின் தந்தை மாயாண்டி ஆதிச்சநல்லூரில் நிலப்பிரச்சனையில் தேடப்படுகிறார். இருப்பினும் தூத்துக்குடி போலீசார் திருநெல்வேலிக்கு வரவில்லை எனவும், தமது தந்தையை காப்பாற்றுவதற்காக சிறுவன் இத்தகைய செயலில் ஈடுபடலாம் எனவும் தூத்துக்குடி போலீசார் தெரிவித்துள்ளனர். எனவேசம்பவம் குறித்து திருநெல்வேலி மாநகர போலீசார் விசாரிக்கின்றனர்.மடப்புரம் கோவில் காவலாளி போலீஸ் விசாரணையின் போது, போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்து இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
ஜூலை 02, 2025 20:16

அஜித்குமார் மரணம் எதிரொலி தமிழகம் முழுவதும் போலீஸ் தனிப்படைகள் ஒட்டுமொத்தமாக கலைப்பு. பிறகு எப்படி இங்கே தனிப்படை போலீசார் விசாரிக்க சென்றனர்? திருபுவனம் நிகழ்வு மீண்டும் திரும்புகிறதா?


sridhar
ஜூலை 02, 2025 19:56

ரௌடிகளிடம் இருந்து மக்களை காக்க வேண்டிய போலீசே இப்படி ரௌடி போல் நடந்து கொள்வது ஏன் - அதுதாண்டா திராவிட மாடல் . ஆழ்ந்த உறக்கத்தில் போலி அப்பா .


Santhakumar Srinivasalu
ஜூலை 02, 2025 19:52

அந்த பையன் புத்திசாலி போல நடித்துள்ளான்


Sampath
ஜூலை 02, 2025 20:32

நீ பாத்த? 200 ருருபைக்கு எங்கயாவது போயி பிச்சையெடு