உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துாய்மை பணியாளர்கள் நீதி கேட்பு பயணம்; முறியடிக்கும் முயற்சியில் போலீஸ் மும்முரம்

துாய்மை பணியாளர்கள் நீதி கேட்பு பயணம்; முறியடிக்கும் முயற்சியில் போலீஸ் மும்முரம்

சென்னை: துாய்மை பணியாளர்களை விடாமல் கைது செய்து வரும் போலீசார் நீதி கேட்டு மாநிலம் முழுதும் அவர்கள் நடத்தும் பிரசார பயணத்தை முறியடித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க., மண்டலங்களின் துாய்மை பணி, தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதை கண்டித்தும், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன் துாய்மை பணியாளர்கள் ஆகஸ்ட் 1ல் இருந்து 13 நாட்கள் போராட்டம் நடத்தினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4dkeemx3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நீதிமன்ற உத்தரவு காரணமாக நள்ளிரவில் இவர்களை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர். எனினும் கடந்த 4ம் தேதி சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் திரண்ட 300க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்; அவர்களையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் சென்னை கொருக்குப்பேட்டையில் துாய்மை பணியாளர்கள் 13 பேர் தங்கள் வீடு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக, 200க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் திரண்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்து நள்ளிரவில் விடுவித்தனர். இவர்கள் மீண்டும் சென்னை மாநகராட்சி அருகே போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து போலீசார் கைது செய்தனர். இப்படி துாய்மை பணியாளர்கள் போராடுவதும் அவர்களை போலீசார் கைது செய்வதும் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுதும் உள்ள துாய்மை பணியாளர்களை ஒருங்கிணைத்து நீதி கேட்கும் பிரசார பயணத்தை உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் துாய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு அனுமதி கோரி டி.ஜி.பி., அலுவலகத்தில் மனுவும் அளித்துள்ளனர். கோவையில் துவங்கிய பிரசார பயணம் திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம், நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி என பல ஊர்களுக்கு செல்ல உள்ளது. அரசு தங்களுக்கு இழைத்து வரும் அநீதி குறித்து தெருமுனை கூட்டங்கள் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என மாவட்டங்களை பிரித்து தனித்தனியாக வாகனங்களும் ஏற்பாடு செய்துள்ளனர். இப்பிரசார பயணத்தை நடத்த விடாமல் போலீசார் முறியடித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து துாய்மை பணியாளர்கள் கூறியதாவது: எங்கள் போராட்டத்தை போலீசார் துணையுடன் அரசு முடக்கி விடுகிறது. எங்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டாக கூறி நீதிமன்றத்தையும் ஏமாற்ற பார்க்கிறது. இதனால் மாநிலம் முழுதும் பெரும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். அதற்கான பிரசார பயணத்தை நடத்த விடாமல் போலீசார் மிரட்டல் விடுத்து வருகின்றனர். தடையை மீறி எங்கள் பயணமும், போராட்டமும் தொடர்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மயங்கி விழுந்த பெண்கள்

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரே மணியம்மை சிலை முன், சிவப்பு நிற சேலை அணிந்து வந்த 10 தூய்மை பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். முதலுதவி அளிக்கப்பட்ட பின், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், அதிவிரைவுப்படை பெண் போலீசார் இவர்களை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ராமகிருஷ்ணன்
செப் 13, 2025 09:45

துண்டுசீட்டு இந்நேரம் எதிர் கட்சியாக இருந்தால் சென்னை முழுவதும் குப்பை கூட்டி அதகளம் பண்ணி போராட்டம் செய்திருப்பார்.


Kasimani Baskaran
செப் 13, 2025 08:18

கூலித்தொழிலாளர்கள் சம்பாதிப்பது சொற்பமான தொகை. அதிலும் பொறுக்கிகள் புகுந்து ரத்தம் உறிஞ்சி விடுகிறார்கள். மீதி அவர்களுக்கு கிடைப்பது டாஸ்மாக்குக்கே போதாது. அவர்கள் ஞாயமான சம்பளம் கேட்டால் அடக்குமுறை. இதுதான் திராவிட சமூகநீதி.


Rajarajan
செப் 13, 2025 06:14

எதிர்க்கட்சியாக இருக்கும்போது, போராட்டத்திற்கு தூபம் போடுவதும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பதவி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி தருவதும் தவறான போக்காகும். மேலும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதீத சலுகைகள், குறுக்குவழியில் பதவிஉயர்வு, தகுதி தேர்வு ரத்து போன்ற வாக்குறுதியும் தவறான போக்கே. மாறிவரும் கால சூழலிலும், பொருளாதார மாற்றத்திலும், இனி தனியார்மயம் என்பது தவிர்க்க முடியாது. பெரிய பெரிய ஜாம்பவான் நிறுவனங்களெல்லாம் இந்த மாற்றத்தில் சிக்கி தவித்து, உயர்கல்வி படித்தோரும் வேலையே இழப்பது சகஜமாகிவிட்டது. இந்நிலையில், அரசியல்வாதிகள் தனியார்மயம் கூடாது, அரசு ஊழியராக்க போராடுவதற்கு ஆதரவளிப்பதும், தவறான முன்னுதாரணமாகும். நாளை இவர்கள் ஆட்சிக்கு வந்தால், இவர்கள் வைத்த ஆப்பு, இவர்களுக்கே எதிராக வேலை செய்யும் என்பதே உண்மை. தமிழக பா.ஜ.க. இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது முற்றிலும் தவறு. ஏனெனில், மத்தியில் காங்கிரஸ் அறிமுகப்படுத்திய தாராளாமாயமாக்கம், தனியார்மயமாக்கம், உலகமயமாக்கம் ஏற்படுத்தப்பட்ட பின்னர், மத்தியில் பா.ஜ.க. நஷ்டத்தில் இயங்கிய BSNL / AIR INDIA போன்றவற்றை தனியார்மயமாக்கிவிட்டது. மேலும், insurance துறையிலும் நூறு சதவிகிதம் தனியார் பங்களிப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது வெறும் ட்ரைலர் மட்டுமே. இனிமேல் தான், மெயின் பிக்சர் உள்ளது. எனவே, மீண்டும் அரசுமயம் என்ற பின்னோக்கி செல்வது என்பது நடக்காத காரியும். இதை உணர்ந்து காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க., இதுபோன்ற போராட்ட எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாமல் இருப்பதே நல்லது. இனி தனியார்மயத்தை தவிர்க்கவே முடியாது.


raja
செப் 13, 2025 06:09

கொஞ்சம் பொறுங்க தமிழ் மக்கா... திருட்டு திராவிடம் நான் 2026 ல் தோற்று உங்களுடன் உங்களுக்காக வந்து மறுபடியும் ஆக எடப்பாடி பதவி விலக வேண்டும் என்று போராடுவேன்...


Sun
செப் 13, 2025 05:51

இந்த சமூகத்தின் மிக வறிய நிலையில் உள்ள கடை நிலை ஊழியர்கள் இவர்கள் . இவர்களிடமா அரசு தங்கள் வீரத்தை காட்ட வேண்டும்?


Parthasarathy Badrinarayanan
செப் 13, 2025 05:06

தொடரட்டும் போராட்டம்.


புதிய வீடியோ