உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீசாரை ஏவி கிராம மக்கள் மீது வெறியாட்டம்; அண்ணாமலை குற்றச்சாட்டு!

போலீசாரை ஏவி கிராம மக்கள் மீது வெறியாட்டம்; அண்ணாமலை குற்றச்சாட்டு!

சென்னை: ''விசாரணை என்ற பெயரில், போலீசாரை ஏவி விட்டு, கிராம மக்கள் மீது வெறியாட்டம் நடத்துகின்றனர். விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராம மக்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும்,'' என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t1c123sd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மெட்ரோ தூணில் ஒட்டப்பட்ட முதல்வர் ஸ்டாலின் போஸ்டர் மீது செருப்பால் அடித்த வயதான தாயார் ஒருவரைத் தேடி அலைந்தார்கள். தற்போது, அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய பொதுமக்களைத் தேடி அலைகிறார்கள். தி.மு.க., ஆட்சி நடக்கும் லட்சணத்திற்கு, இனி இதுவே முழு நேர வேலையாக இருக்கும் எனத் தெரிகிறது.கடந்த டிசம்பர் மாதம் விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தில், பெஞ்சல் புயல் பாதிப்புகளைப் பார்வையிடச் சென்ற அமைச்சர் பொன்முடி, காரில் இருந்து இறங்காமல், பாதிப்பு குறித்து விசாரித்ததால், அவர் மீது சேறு வீசப்பட்டிருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காததால் ஏற்பட்ட ஆதங்கத்தாலும், இயலாமையினாலும் நடைபெற்ற நிகழ்வே தவிர, தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல. இதை பெருந்தன்மையாக விட்டு விடுவதாக அமைச்சர் பொன்முடி அப்போது கூறிவிட்டு, தற்போது, அந்தக் கிராம மக்கள் மீது போலீசாரை ஏவி விட்டு வெறியாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விசாரணை என்ற பெயரில், கிராம மக்களைக் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துத் துன்புறுத்துவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் உட்பட அனைவரையும் பலவந்தமாகக் கைது செய்திருக்கிறார்கள்.போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், ஒரு சகோதரியின் கைகளைப் பிடித்து இழுக்கும் காணொளியைக் காண நேர்ந்தது. இது பெண்களைக் கைது செய்யும்போது, பெண் போலீசார் இருக்க வேண்டும் என்ற அடிப்படை வரைமுறையை முற்றிலும் மீறியிருப்பதாகும். புயல் பாதிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள், இன்னும் முழுமையாக மீண்டெழவில்லை. தி.மு.க., அரசு புயல் பாதிப்புகளைச் சரியாகக் கணிக்கத் தவறியதோடு, மிகவும் மெத்தனப் போக்கில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டதைத் தமிழக மக்கள் அறிவார்கள். நான்கு பேரை வைத்து சினிமா ஷூட்டிங் நடத்தி, நல்லாட்சி நடக்கிறது என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்களுக்கு, பொதுமக்களிடையே இருக்கும் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல், பொதுமக்கள் மீது அதிகார வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள்.முதல்வர் ஸ்டாலின், தங்கள் ஆட்சியின் அவலத்தைச் சரி செய்யாமல், அப்பாவி பொதுமக்களைத் துரத்துவது ஏன்? தி.மு.க., அரசு, இந்த உளுத்துப் போன காரணங்களைச் சொல்லி பொதுமக்களைப் பழிவாங்குவதை நிறுத்தி விட்டு, பெஞ்சல் புயல் நிவாரணப் பணிகள், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கிறதா என்பதை உறுதி செய்யும் பணிகளில் உடனடியாக கவனத்தைச் செலுத்த வேண்டும். இருவேல்பட்டு கிராம மக்கள் மீதான நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அண்ணாமலை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

sankar
ஜன 15, 2025 21:47

திமுக சுத்தமா சோலி முடிஞ்சுருச்சு


ஆரூர் ரங்
ஜன 15, 2025 13:40

நாளையே மனித உரிமைகள் ஆணையம் நேரடியாக இந்த மனித மிருகங்கள் மீது நடவடிக்கை எடுக்கும். அதனை எதிர்த்து விடியல் சார் சுப்ரீம் கோர்ட் சென்றாலும் ஆச்சர்யமில்லை.


veera
ஜன 15, 2025 06:54

மணிப்பூர் மணிப்பூர் என்று கூவும் பைத்தியங்கள்...வேங்கைவயல், என்று கூவ காணோமே


Kumar
ஜன 15, 2025 02:18

காவல்துறை ஆண் ஒருவரை விசாரணைக்கு அழைத்துச்செல்லும் போது தன் கடமையை செய்யும்போது அந்த பெண்மணி தடுக்கிறது, அதனால் அந்த பெண்மணியை காவல்துறை ஆண் ஒருவர் அப்புறப்படுத்துகிறார். காவல்துறை கடமையை தடுத்த அந்த பெண்மணி மேல்தான் வழக்கு போட வேண்டும். தொலைக்காட்சியை சரியாக பார்க்கவும்.


krishna
ஜன 15, 2025 08:26

KUMAR SUPER KADAMAI UNARVU


Raj Rethinam
ஜன 14, 2025 21:59

Stalin government is impotent Government. Thats why village Women are beaten by Men Police. Shame Shame to Stalin. 2026 he will go to S Shop. Bloody. Ba rd. Bloody


Svs Yaadum oore
ஜன 14, 2025 21:11

மணிப்பூருக்கு போகனுமாம் ...வடக்கன் படிக்காதவன் என்று கூவும் மதம் மாற்றிகள்தான் இங்கே வந்து மணிப்பூர் மணிப்பூர் என்று மணிப்பூர் வடக்கனுக்காக கூவும் ....அதுதான் இந்த மதம் மாற்றிகளுக்கு மத சார்பின்மை ....


எஸ் எஸ்
ஜன 14, 2025 20:56

இதெல்லாம் முதல்வருக்கு தெரியுமா அல்லது குறுநில மன்னரே போலீசை அனுப்பினாரா?


sridhar
ஜன 14, 2025 21:03

முதல்வருக்கு எதுவும் தெரியாது , எழுதி கொடுத்ததை கூட படிக்க தெரியாது .


Sundaran
ஜன 14, 2025 20:36

அண்ணாமலை அவர்களே மனித உரிமை கழகம் , மகளிர் கமிஷன் ஆகியவற்றுக்கு புகார் செய்யுங்கள் தகுந்த ஆதாரத்துடன்


Kasimani Baskaran
ஜன 14, 2025 20:33

முரண்பாடுகளின் மொத்த உருவம் திராவிடம். பேசுவதற்கும் செய்வதற்கும் சம்பந்தமே இருக்காது. சமூகநீதி என்று பிளாஸ்டிக் சேர் போடுவது அவர்களின் கொள்கை.


Ray
ஜன 14, 2025 21:15

சட்டசபையில் வீல் சேருக்கு அம்மையார் அனுமதித்தார்களா? சுளீர் என்ற கேள்வி வருமே என்ற பயமே காரணம்


Ramesh Sargam
ஜன 14, 2025 20:06

தமிழக காவல்துறை திமுக அமைச்சர்களின் கீழ், திமுக அல்லக்கைகள் கட்டுப்பாட்டில் பணிபுரிவதைக்கண்டால் மிகவும் வேதனை அளிக்கிறது. மெத்த படித்த IPS, IAS அதிகாரிகளுக்கு தமிழகத்தில் மரியாதையே இல்லை. அவர்கள் நிலையை கண்டு மிகவும் வருந்துகிறேன். இந்த நிலை மாறவேண்டும். அதற்கு திமுக அராஜக ஆட்சி ஒழியவேண்டும். நல்லாட்சி மலரவேண்டும்.


புதிய வீடியோ