உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமான் வீட்டில் மோதல்: போலீஸை தடுத்த ஊழியர்கள் கைது

சீமான் வீட்டில் மோதல்: போலீஸை தடுத்த ஊழியர்கள் கைது

சென்னை: சீமான் வீட்டில் சம்மன் கொடுக்கச்சென்றபோது, தடுக்க முயற்சித்த போலீசாருக்கும், அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், 2 பேர் கைது செய்யப்பட்டனர்.நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில், திருமண மோசடி செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, சீமான் மீது புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக, சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ne1i7azi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவ்வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் என, சீமானுக்கு 'சம்மன்' அனுப்பி இருந்தனர். ஆனால் சீமான் நேரில் ஆஜர் ஆகவில்லை. சீமான் தரப்பில் வக்கீல் ஆஜர் ஆக கால அவகாசம் கோரினார். இந்நிலையில், நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில், நாளை (பிப்.,28) காலை 11 மணிக்கு வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் கொடுக்க போலீசார் சென்றனர்.அப்போது வீட்டினுள் நுழைய முயற்சித்த போலீசாரை, சீமான் வீட்டில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தடுக்க முயற்சித்தனர். இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் ஒட்டிய சம்மனை சீமான் வீட்டு ஊழியர்கள் கிழித்தனர். இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த சீமான் மனைவி கயல்விழி, போலீசாரிடம் பேசினார்.வாக்குவாதம் தொடர்ந்த நிலையில், சீமான் வீட்டு ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவரிடம் இருந்து துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. புகார் தொடர்பாக, தனிப்படை போலீசார், கர்நாடக மாநிலம் பெங்களூரு சென்று, விஜயலட்சுமியிடம் நேற்று விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

சீமான் விளக்கம்

முன்னதாக பாலியல் புகாரில் விசாரணைக்கு ஆஜராக மறுப்பது குறித்து, நிருபர்கள் கேள்விக்கு சீமான் கூறியதாவது: அது சொல்லுவாங்க. ஏற்கனவே, ஒரு முறை சந்தித்து எல்லாம் சொல்லியாச்சு, அவங்களுக்கு இந்த விளையாட்டை நிறுத்த விருப்பம் இல்லை. அவங்க நிறுத்தாமல் இழுத்து கொண்டே இருப்பார்கள். மறுபடியும் நேரம் கிடைக்கும் போது சொல்கிறேன் என்று சொல்லி விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

வழக்குப்பதிவு

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். காவலாளி துப்பாக்கி காட்டி மிரட்டியதாக போலீசார் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசாரை தாக்கியதாகவும், துப்பாக்கி காட்டி மிரட்டியதாகவும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Arumugam
பிப் 27, 2025 23:33

என்றுதான் இந்த காவல்துறை திருந்துமோ..... இந்த வீர தீர செயலை.... அண்ணா பல்கலைக்கழக விஷயத்தில்..... நடந்து கொண்டிருக்கலாமே...


sankaranarayanan
பிப் 27, 2025 20:33

காவலாளியை இப்படியா அடியாள் வைத்து போலீசு இழுத்து செல்ல வேண்டும் அவர் என்ன அப்படி தவறு செய்துவிட்டார்? காவாலாளியை அடித்து அவரது சட்டையை கிழித்து அவரிடமிருந்த பொருட்களை பிடிங்கி! அப்பப்பா வேதனை மேல் வேதனை . நன்றாக எத்தனை கொடுத்துள்ளார்கள் பொலிசுத்துறை தங்களது கையில் இருக்கிறது என்பதால் என்ன வேண்டுமாலுந்தம் செய்யலாம் என்ற கெட்ட எண்ணம் அறவே ஒழிக்கப்பட வேண்டும். இது என்ன போலீசு அரசா, அராஜகமா தெரியவில்லை நீதி மன்றமே உடனே இதை தானாகவே முன்வந்து எடுத்து தகுந்த தண்டனையை கொடுத்து காவலாளியை விடுதலை செய்ய வேண்டும்.


Murthy
பிப் 27, 2025 19:00

நோட்டீசை கதவில் ஓட்ட போலீசுக்கு என்ன அதிகாரம் இருக்கு ?? சம்மனை வாங்குவதற்கு ஆள் இருக்கும்போது கதவில் ஓட்டவேண்டிய தேவை என்ன ??


SUBRAMANIAN P
பிப் 27, 2025 16:33

அரசியல்ல இன்னிக்கி தலைவர்னு சொல்லுகிறவன் ல்லாம் ஒருகாலத்துல மிகமோசமான ஒழுக்கம்கெட்டவன்தான்.. செல்வாக்கை வெச்சு என்னென்னவெல்லாம் ஆட்டம் போட்டிருப்பானுங்க. எல்லாம் ஆடி அடங்கிபோகிச்சு. இன்னிக்கி நல்லவன்மாதிரி, ஒழுக்கசீலன் மாதிரி பெண்களுக்கு பாதுகாவலன் மாதிரி பேசுறானுங்க. இந்த சீமானும் தவறு செய்துவிட்டு இன்னிக்கி செய்வதறியாது முழிக்காரு.


Tamil Inban
பிப் 27, 2025 16:09

அவன் அரசியல் வாழ்க்கையை இப்படி முடிச்சிபுட்டீங்க, வீட்டுக்காரன் வீட்டை காலிபண்ண சொல்லப்போரான், நீலங்கரையில இனி யாரு வீடு கொடுப்பான்


baala
பிப் 27, 2025 17:40

அண்ணன் சொந்த வீடு வாங்கிட்டு போறாரு. இது என்ன பெரிய விஷயமா


R.P.Anand
பிப் 27, 2025 15:40

ஒருத்தன் சொல்றான் திமுக கூட்டுன்னு இணிருதன் சொல்றான் அதிமுக கூட்டுன்னு இப்போ ஒருத்தன் சொல்றான் சீமனோடா கூட்டுன்னு அண்ணா மலை தம்பி நீங்க யாரோடதான் கூட்டு


Oviya Vijay
பிப் 27, 2025 15:21

பங்குச் சந்தை வீழ்ச்சி என்பார்களே... அதுபோல தான் இவரது வாக்கு வங்கியும்... இதுவரை மக்கள் மனதில் சம்பாதித்த நல்ல பெயரும் வாக்கு சதவீதமும் இந்த ஒரே ஒரு கேஸ் மூலமாக கெடுத்துக் கொண்டு அடுத்த தேர்தலில் இவரது கட்சியின் வாக்கு சதவீதம் அதல பாதாளத்திற்கு வீழ்ச்சியடையப் போகிறது... கட்சியிலிருந்து விலகிய நிர்வாகிகளுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை நியமிக்கப் போவதாக கிளம்பியுள்ள நிலையில் ஒழுக்கம் இல்லாத இவரோடு யார் தான் இணைவர்... இவரது யோக்கியதை சந்தி சிரிக்கும் வேளை இது... ஒழுக்கம் தவறிய ஒரு மனிதனின் வாழ்க்கைக்கான அஸ்தமனத்தின் ஆரம்பப் புள்ளி இது...


Anand
பிப் 27, 2025 16:21

சொரியன், தீயசக்தி போன்றோரின் ஒழுக்கத்திற்கு முன்னால் இவர் ஒரு தூசு... ஆனால் அவர்களின் வளர்ச்சி என்பது கற்பனைக்கு எட்டாத தூரத்தில் இருக்கிறதே? அதாவது திருட்டு திராவிஷம் ஆக இருந்தால் அசுர வளர்ச்சி, அதற்கு ஒத்து வராவிட்டால் வீழ்ச்சி...


sridhar
பிப் 27, 2025 16:40

அதானே , கருணாநிதி போல் பெண்கள் விஷயத்தில் ஒழுக்கமா இருந்தா ஏன் பிரச்சினை vara போகிறது .


Dharmavaan
பிப் 27, 2025 19:34

உன் கட்டுமரம், அண்ணாதுரை யோக்கியங்களா


நாஞ்சில் நாடோடி
பிப் 27, 2025 15:16

பெரியார் முகத்திரையை கிழித்த சீமான், கருத்தை எதிர் கொள்ள முடியாமல் பெண்ணை வைத்து வழக்கு புனையும் மாடல் அரசு...


Sainathan Veeraraghavan
பிப் 28, 2025 10:27

THERE ARE INSTANCES WHERE A POLITICIAN DID NOT ACCEPT SUMMONS MORE THAN 30 TIMES AND ATTEND COURT IN INDIA. COURTS IN INDIA GRANT BAILS TO ACCUSED WHO ARE CHARGED WITH COMMITTING FIRST DEGREE HOMICIDE. ARREST OF MR. SEEMAN IS COMPLETELY POLITICAL AND NOTHING MORE. IMAGE OF DMK AND ITS POLICY OF ADORING MR. E.V. RAMASAMY NAICKER ARE TARNISHED BY SEEMAN. DMK CANNOT REPAIR THE DAMAGE AFTER MR. SEEMAN TALKED ABOUT MR. EVR AND BROUGHT OUT THE FACTS.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 27, 2025 15:04

கள்ளத் துப்பாக்கி யா, லைசென்ஸ் இருக்கா பாருங்க. துப்பாக்கி வெச்சிருந்தவன் ஹிந்து வா மூர்க்ஸ் ஸா? எதுவா இருந்தாலும், பாஜக வின் ஆசி பெற்ற சீமானுக்கு காவடி எடுக்க இங்கே 40, 50 பேர் வருவார்கள். இப்பவே ஒரு ஐ டி, உள்ள வெச்சுப் பாரு என்று சவால் வுடுது.


கல்யாணராமன்
பிப் 27, 2025 16:14

வைகுண்டேஸ்வரன் என்ற புனைப்பெருக்கு பதில் திராவிட குண்டேஸ்வரன் என்றே பெயர் வைத்துக்கொள்ளலாமே.


SUBRAMANIAN P
பிப் 27, 2025 16:52

இல்ல.. திராவிட குண்டேஸ்வரனைவிட திமுக அடிப்பொடி சரியாக இருக்கும்..


Anand
பிப் 27, 2025 17:28

இல்ல... திமுக அடிப்பொடி என்பதை விட திருட்டு கட்சி அடிமை என்பது பொருத்தமாக இருக்கும்.


தமிழன்
பிப் 27, 2025 15:01

இவனும் நம்பர் ஒன் 1 ஃபிராடு, விஜயலட்சுமியும் காசுக்காக இவனிடம் அடிக்கடி மோதுகிறாள் ஆனால் இருவருக்கும் தொடர்பு இருப்பது உண்மை ஒன்று இவன் வழக்கை தைரியமாக சந்தித்து முடிவு கட்ட வேண்டும் இல்லை அவளுக்கு பெரிய தொகையை கொடுத்து பின் பிரச்சினை ஏதும் செய்ய மாட்டேன் என எழுதி வாங்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை