உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியல் கட்சி கூட்டத்திற்கு இனிமே ஒரு கண்ட்ரோல் வேணும்; 2 மகள்களை இழந்த தந்தை வேதனை

அரசியல் கட்சி கூட்டத்திற்கு இனிமே ஒரு கண்ட்ரோல் வேணும்; 2 மகள்களை இழந்த தந்தை வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர்: 'எந்த அரசியல் கூட்டமா இருந்தாலும் இனிமே ஒரு கண்ட்ரோல் வேண்டும்' என்று கரூர் கூட்ட நெரிசலில் 2 மகள்களை இழந்த தந்தை பெருமாள் வேதனையுடன் தெரிவித்தார்.கரூரில் விஜயின் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் வேலுசாமிபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியான கோகிலா, அவரது சகோதரியான 11 வயதுடைய பழனியம்மாள் உயிரிழந்தனர். 2 மகள்களை இழந்த தந்தை பெருமாள் உருக்கமான பேட்டி:வீட்டில் மொத்தம் நான்கு பேர் விஜய் பிரசார மீட்டிங்கிற்கு சென்றார்கள். 5:30 மணிக்கு கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டார்கள் என எனக்கு தகவல் வந்தது. உடனே நான் கூட்டம் நடந்த இடத்திற்கு சென்றேன். பொண்டாட்டி, பிள்ளைகள் எங்கு இருக்கு என்று எனக்கு தெரியவில்லை. பின்னர் மனைவி மற்றும் பெரிய மகளை கண்டுபிடித்து விட்டேன். பிறகு இரண்டு பிள்ளைகளை நான்கு, ஐந்து மருத்துவமனைகளில் தேடிப் பார்த்தேன். எங்குமே கிடைக்கவில்லை. பிறகு அரசு மருத்துவமனையில் இரண்டு பிள்ளைகள் இறந்து விட்டதாக கண்டுபிடித்தேன்.ரசிகர்கள் என்று யாரும் கிடையாது. நடிப்பதை கண்டு நேரில் பார்ப்பதற்கு சென்றவர்கள் தான். டிவியில் தான் பார்த்திருக்கிறோம் என்று நேரில் பார்க்க சென்றவர்கள் தான். இரண்டு பிள்ளைகளும் சம்பவ இடத்திலேயே கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து விட்டது. அவ்வளவு ரணகளமாக இருக்கிறது. எந்த அரசியல் கூட்டமா இருந்தாலும் இனிமே ஒரு கண்ட்ரோல் வேண்டும். அதற்கான நிபந்தனைகளை விதிக்க வேண்டும். இரண்டு பிள்ளைகளையும் ஒரே குழியில் போட்டுவிட்டு வந்த எனக்கு எவ்வளவு வேதனை இருக்கும். சொத்துக்கள் எல்லாம் பிறகு, எனக்கு எவ்வளவு வேதனை இருக்கிறது தெரியுமா? சோறு சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகிறது. கட்டுக்கடங்காத கூட்டம் வந்துவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Natchimuthu Chithiraisamy
செப் 29, 2025 20:56

இந்த வேதனை தன் குடும்பத்தில் நடக்கும் போது தான் ஒவ்வொருவரும் உணரமுடிகிறது என்றால் என்ன செய்ய. ஏழை எளிய மக்களுக்கு என்ன தெரியும். ஒரு நடிகன் குழந்தைகளும் வரட்டும் என்று சொல்லக்கூடாது. முன்பு நடந்த கூட்டத்தில் நடிகனை தொட முயற்சிக்கிறார்கள் அதை தடுக்கிறார்கள் இது எல்லாம் அறிந்த விஜய் சிறுவர்கள் கர்ப்பிணிகள் குழந்தைகள் இளம் சிறுவர்கள் இவர்களை வைத்துக்கொண்டு முதல்வரை திட்டுவது பட்டு பாடுவது நல்லதல்ல என்பது புரியவில்லை. அந்த குழந்தைகள் தன் பெற்றோர் ஓட்டை பெற்று தந்து விடும் குழந்தைக்காக விஜய்க்கு ஓட்டும் போடுவார்கள் இதே ஜனநாயகம. இது அரசியல் கூட்டம் இல்லை நடிகரை பார்க்க வந்த கூட்டம். வெற்றி பெற்று முதல்வர் ஆனாலும் என்ன நடக்கும் கிருஸ்துவ IAS அதிகாரிகளை நியமிக்க முடியும் அது இந்த ஆட்சியில் நிறைவாக நடந்து விட்டது. ஸ்கூல் TC ல் கூட இந்து பெயர் அகற்றியாச்சு. சாமி மலைகளை பங்கு போட வெகு காலம் இல்லை. மக்களும் இவ்வளவு வெகுளிகளாக இருக்கிறார்கள். ஒரு கிருஸ்துவன் இறந்துபோனான அங்கு வந்தே பதவியில் உள்ள கிருஸ்துவர்கள் மட்டுமே.


சந்திரன்
செப் 29, 2025 19:37

காசு தருவாக சரக்கடிச்சி துக்கத்த போக்கு உனக்கெல்லாம் புத்தியா வர போகுது


Ram pollachi
செப் 29, 2025 15:17

அரசியல்வாதிகள் நடத்தும் கூட்டத்திற்கு போயிட்டு உயிருடன் திரும்பி வந்தால் இருநூறு ரூபாய், கோழி பிரியாணி மற்றும் குவாட்டர் பாட்டில் கிடைக்கும்.... அதே உயிரில்லாத சவமாக வந்தால் இலட்சம் என்ன கோடியே கிடைக்கும்...


Ram pollachi
செப் 29, 2025 15:06

தான்தோன்றி பெருமாள் சார் நாம் உழைத்த பணத்தை கொடுத்து டிக்கெட் வாங்கினால் தான் கூத்தாடி வீட்டில் அடுப்பு எரியும்... ஆனால் இவர்களை சினிமாவில் பார்த்தல் மேக்கப் போட்டு படா சோக்கா இருப்பார்கள் நேரில் பார்த்தால் நம்மைவிட கேவலமாக இருப்பார்கள்... சதா சர்வ காலமும் டிவியில் சினிமா படத்தை போட்டு குழந்தைகள், பெண்களை அடிமையாக மாற்றிவிட்டார்... இவர்களும் நம்மை போல் ஒருவன் கண்டுகொள்ளாமல் நம்ம வேலையை பார்க்க நம் குடும்பத்தாருக்கு ஆலோசனை செய்ய வேண்டும். இறந்த ஒரு நபர்களுக்கு 32 லட்சம் கிடைக்க போகுது இதை வைத்து மீதம் உள்ளவர்களாவது மன அமைதியுடன் வாழுங்கள் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்..


நந்திதாஸ்
செப் 29, 2025 10:57

அடுத்தவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்.


sekar
செப் 29, 2025 10:08

முதலில் தனது இரண்டு மைனர் குழந்தைகளை பாதுகாப்பற்ற இடத்துக்கு அழைத்து போனதற்கு, இவர்மீது வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ள வேண்டும். இது போன்ற முட்டாள்களால் நாடு பலவீன படுகிறது .


Nanchilguru
செப் 29, 2025 10:03

இந்த பாம்பாட்டி நடிப்பதற்கும் அரசியலில் இருப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்


Durai Kuppusami
செப் 29, 2025 08:39

அறிவு இருக்கா இரண்டு குழந்தைகள் காவு கொடுத்து இந்த பேச்சு..நீ ஏன் குழந்தைகள கூட்டிட்டு போன.. கொஞ்சம்கூட அறிவு இல்லை இனிமேல் என்ன செய்ய அவர்கள் கொடுக்கும் பணத்தை வெச்சு ஆட்டம் போடு.


Natchimuthu Chithiraisamy
செப் 29, 2025 21:00

கூட்டத்திக்கு சென்ற 15000 பேருக்கும் இந்த அறிவு வேண்டும். குழந்தைகள் கர்ப்பிணிகள் சிறுவர்கள் இளம் வயதினர், பேச்சு மட்டும் அரசியல். குழந்தைகளுக்கு அரசியல் பாடம் கற்று கொடுக்கப்படுகிறது


Arul. K
செப் 29, 2025 06:11

கண்ட்ரோல் நமக்குத்தான் வேண்டும். ஒருவேளை பிடித்திருந்தால் ஒத்தை வாக்கை செலுத்திவிட்டு போயிகிட்டே இருக்கவேண்டியதுதான். சினிமாகாரன் பின்னாடி போனால் இதுதான் கதி


Ramanatham Balaji
செப் 29, 2025 05:54

முதல்ல நமக்கு மூளை வேணும்,கூத்தாடியை போய் பார்த்தால் ஜன்மா சாபல்யம் அடைஞ்சுடுமா


முக்கிய வீடியோ