உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரிதன்யா மரணத்தில் அரசியல் அழுத்தம்: சீமான்

ரிதன்யா மரணத்தில் அரசியல் அழுத்தம்: சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வரதட்சணை கொடுமையால் இறந்த ரிதன்யாவின் மரணம் தற்கொலை அல்ல; திட்டமிடப்பட்ட படுகொலை' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிப்புதுாரைச் சேர்ந்த ரிதன்யா, 27, வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். இறக்கும் முன் அவர் பேசிய வீடியோ, இதயத்தை நொறுங்க செய்கிறது.அவரது தற்கொலைக்கு காரணமான கணவர் கவின்குமார் மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது, முறையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை. அரசியல் அழுத்தம் காரணமாக, மூவரும், எளிதில் ஜாமினில் வரக்கூடிய வழக்கு பதிவு செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது.இது வெறும் தற்கொலை அல்ல; இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி, தற்கொலை செய்ய வைத்த திட்டமிட்ட படுகொலை. இந்த நுாற்றாண்டிலும், வரதட்சணை கொடுமையால் பெண்கள் உயிரிழப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒட்டுமொத்த சமூகமும் தலைகுனிய வேண்டும்.ரிதன்யா மரணத்துக்கு காரணமான மூவர் மீதும், கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் ஆட்படாமல், கடுந்தண்டனை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Gurumoorthy
ஜூலை 05, 2025 13:51

ரொம்ப சரி சீமான் அவர்களே அப்படியே அந்த விஜயலக்ஷ்மி அவர்கள் தற்கொலை முயற்சிக்கு யார் காரணமோ, அவரின் கஷ்டங்களுக்கு யார் காரணமோ அவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று உங்கள் வழக்கை விசாரிக்கும் நீதிபதியிடம் கூறுவீர்களா யோக்கிய சிகாமணி சீமான் அவர்களே


sivakumar Thappali Krishnamoorthy
ஜூலை 05, 2025 11:59

ஆசை யாரை விட்டது .. 300 பவுன் நகை போட்டும் வாழவில்லை.. இரண்டு குடும்ப சொத்தும் வாரிசுகள் இல்லாமல் அழியும்... ஒரு குடும்பம் வாழ்நாள் முழுதும் சிறையில் வாழ்க்கையில் கழி திங்குமா? ... கடவுளுக்கேய் வெளிச்சம் ஐயா மன்னிக்கவும், நீதி அரசர் கழுகே வெளிச்சம்...


நிவேதா
ஜூலை 05, 2025 09:52

முதலில் ஆடியோவில் உள்ளது இறந்த பெண் பேசியது தானா என விசாரிக்கப்படவேண்டும். ஏனெனில் இன்றைய தொழில்நுட்பத்தில் அனைத்தும் சாத்தியமே. அந்த ஆடியோவையும் பெண் வீட்டார் சொல்வதையும் வைத்து ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் வழக்கை வேறு எந்த பக்கமும் பார்க்க விடாமல் மாப்பிள்ளை வீட்டார் மீதே கவனம் செலுத்த வைக்கின்றனர். இது தற்கொலையா அல்லது கொலையா எனவும் தெரிய விட மாட்டேன்கிறார்கள். வழக்கு அனைத்து கோணங்களிலும் விசாரிக்க படவேண்டும். உண்மையான குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்க படவேண்டும்.


ஆரூர் ரங்
ஜூலை 05, 2025 09:18

காங்கிரஸ் முக்கியஸ்தர் குடும்பம். தி.மு.க வுக்கு கூட்டணி முக்கியம்.


Ragupathy
ஜூலை 05, 2025 08:35

மூன்று பேரையும் ஆயுள் முழுவதும் சிறையில் தள்ள வேண்டும்... ஆனால் தமிழகத்தின் அரசியல் வியாதிகள் நீதி வர விடமாட்டார்களே...