உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிப்.27ல் பா.ஜ., தேர்தல் மாநாடு தமிழகத்தில் அரசியல் புரட்சி

பிப்.27ல் பா.ஜ., தேர்தல் மாநாடு தமிழகத்தில் அரசியல் புரட்சி

பல்லடம்:பல்லடத்தில் வரும் 27ல் நடைபெற உள்ள பா.ஜ., தேர்தல் மாநாடு மற்றும் மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண்; என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ''மாநாடு பெரும் திருப்புமுனையையும், அரசியல் புரட்சியையும் ஏற்படுத்தும்'' என்று மாநில பொதுச்செயலர் முருகானந்தம் கூறினார்.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த மாதப்பூரில், பா.ஜ., தேர்தல் மாநாடு பொதுக்கூட்டம், மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண்; என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா ஆகியவை, வரும் 27ம் தேதி நடைபெற உள்ளன. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்கான, கால்கோல் விழா நடந்தது. மாநில பொதுச்செயலர் முருகானந்தம் கூறியதாவது:இந்த மாநாடு, ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்கும் வகையில் அமையவுள்ளது. ஏறத்தாழ, 1200 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடைபெற உள்ளது. பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். மாநில தலைவர் அண்ணாமலை எழுச்சியுடன் நடத்தி வரும் 'என் மண்; என் மக்கள்' யாத்திரையின் நிறைவு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. மிகப்பெரும் அரசியல் மாற்றத்தை தரும் இடமாக இது அமையும். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதில் பங்கேற்பர். தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி மாநாட்டை யாரும் நிகழ்த்தி இருக்க முடியாது. திருப்புமுனை ஏற்படுத்தும் மாநாடாக அமையும். இதன் பிறகு, மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ., ஆட்சி அமையும்.கொங்கு மண்டலத்தில், கடந்த தேர்தலுக்கு பின் பிரதமர் மோடி இதில் பங்கேற்கிறார். கொங்கு மண்டலத்தை பா.ஜ., கோட்டையாக மாற்றுவதற்கு இந்த மாநாடு உதவும். நிச்சயமாக அரசியல் புரட்சி ஏற்படும் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். பிரதமர் மோடியை ஏற்றுக்கொள்ளும் யார் வேண்டுமானாலும் பா.ஜ.,வில் இணையலாம். இவ்வாறு, முருகானந்தம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை