மேலும் செய்திகள்
மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக பதவியேற்பு
29-Apr-2025
சென்னை : அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் நேற்று சட்டசபைக்கு வரவில்லை. பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக பொன்முடியும், உச்ச நீதிமன்ற நெருக்கடி காரணமாக செந்தில் பாலாஜியும், தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.அதை கவர்னர் ஏற்றதை தொடர்ந்து, இருவரின் இலாகாக்கள், மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளன.இதனால், சட்டசபையில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த, அமைச்சர் இருக்கைகளில் இருந்த பெயர்கள் நேற்று நீக்கப்பட்டன.இருவரும் சட்டசபைக்கு வருவதை தவிர்த்து விட்டனர். முன்வரிசையில், பொன்முடி அமர்ந்திருந்த இருக்கை காலியாக விடப்பட்டு இருந்தது.அமைச்சர்களின் இருக்கைகள் இன்று மாற்றி அமைக்கப்படும் என, சட்டசபை செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
29-Apr-2025