மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago
பல்லடம்: நியாயமான கூலி உயர்வு கோரி, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள், பல்லடத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளனர். திருப்பூர், கோவை மாவட்ட, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள், நூறு சதவீத கூலி உயர்வு கோரி, கடந்த 30ம் தேதி முதல் விசைத்தறிகளை நிறுத்தம் செய்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூலி உயர்வு தொடர்பாக விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு இடையே, எட்டு முறை நடந்த பேச்சில் எவ்வித முடிவும் ஏற்படவில்லை. இதையடுத்து, பல்லடம் உள்ளிட்ட, ஐந்து இடங்களில் விசைத்தறியாளர்கள், ஐந்து நாட்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.நேற்று முன்தினம் மாலை 5.00 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு பெற்றது. ஆனால், எவ்வித சாதகமான பதிலும் வராததால், அதே இடத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வதாக விசைத்தறி நிர்வாகிகள் அறிவித்தனர். இப்போராட்டத்தில், விருப்பம் உள்ள விசைத்தறியாளர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர் என, நிர்வாகிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அனுமதியளித்தனர். மொத்தம், 148 பேர், உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கின்றனர். இதே போல், சோமனூர் பவர் ஹவுசில், 55 பேரும், சூலூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், 15 பேரும் பங்கேற்றனர்.கோவை, திருப்பூர் மாவட்டத்தில், விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, 30 நாளில் 1,500 கோடி ரூபாய் துணி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. எட்டு லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை இழந்துள்ளனர்.
1 hour(s) ago | 1
11 hour(s) ago | 1
12 hour(s) ago