மேலும் செய்திகள்
இன்றைய மின் தடை
25-Feb-2026
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்., 24ம் தேதி வரை, முழு ஆண்டு தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில், ஏப்., 23ல் சட்டசபை தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, ஏப்., 1 முதல் 16ம் தேதி வரை தேர்வுகள் நடத்த ஒப்புதல் பெறப்பட்டு, பள்ளிக்கல்வித் துறை சார்பில் நேற்று தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r2t7tydf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்படி, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்., 1ம் தேதியிலிருந்தும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏப்., 6ம் தேதியிலிருந்தும் தேர்வுகள் துவங்கி, ஏப்., 16ம் தேதி நிறைவடைய உள்ளன. மேலும், ஒன்று, மூன்று, ஐந்து, ஆறாம் வகுப்புகளுக்கு, காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை, எட்டாம் வகுப்புக்கு காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரை தேர்வுகள் நடக்கும். அதேபோல், இரண்டு, நான்கு, ஏழாம் வகுப்புகளுக்கு, பகல் 2:00 மணி முதல் 4:00 மணி வரை, ஒன்பதாம் வகுப்புக்கு பகல் 2:00 மணி முதல் 4:30 மணி வரை தேர்வுகள் நடக்கும்.
25-Feb-2026